பாடகி ஆஷா போஸ்லே பிறந்த தின பதிவு
ஆஷா போஸ்லே ஒரு இந்திய பாடகியாவார். அவர் பல துறைகளில் திறமை கொண்டவராக இருந்தாலும், அவர் பாலிவுட் பின்னணிப்பாடகியாக மிகவும் புகழ் பெற்றவராவார். அவரது கலைப்பயணம் 1943 ஆண்டில் துவங்கியது மற்றும் இன்று வரை அறுபது ஆண்டுகளாக தமது சேவைகளை அளித்து வருகிறார். அவர் பின்னணிப்பாடகியாக 1000 த்துக்கும் மேற்பட்ட பாலிவுட் படங்களில் பாடியதோடு, அவர் பாடிய பல இசைத்தட்டுக்கள் அதிக அளவில் விற்பனையாகியுள்ளன. அவர் பின்னணிப்பாடகியான லதா மங்கேஷ்கரின் சகோதரியாவார்.
தெற்காசிய நாடுகளில் போஸ்லே அவர்கள் மிகவும் புகழ்பெற்ற மற்றும் போற்றப்படும் பாடகியாவார் — அவரது திறமை திரைப்படப்பாடல்கள், போப் இசை, கஜல் வழிப்பாடல்கள், பஜனைப்பாடல்கள், பாரம்பரிய இந்திய மரபார்ந்த இசை, நாட்டுப்பாடல்கள், கவ்வாலிப்பாடல்கள், ரபீந்திர சங்கீதம் மற்றும் நஜ்ருல் கீதி பாடல்கள் அனைத்திலுமே பளிச்சென்று வெளிப்படுவதை அனைவரும் அறிவார்கள். அவர் 14 க்கும்...


