Thursday, June 25
Shadow

விஜய் ரசிகர்களுக்கு காத்து இருக்கும் மிக பெரிய ட்ரீட் பட குழு அறிவிப்பு

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது விஜய்யின் சர்கார். ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும் வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு, பழ.கருப்பையா, ராதாரவி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இப்படத்தின் இசை வெளியீடு குறித்து அறிவித்த படக்குழுவினர் அடுத்தகட்ட அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளனர். அதில் அடுத்த 5 நாட்களுக்கு சர்கார் படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அரசியல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் அக்டோபர் மாதம் 2 – ம் தேதி வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.