Wednesday, November 11
Shadow

நடிகர் சிபிராஜின் புதிய பயணம்… ‘அண்டர்டாக் ஃபிலிம்ஸ்’ முதல் படத்தை இயக்குகிறார் ‘ஜீப்ரா’ ஈஷ்வர் கார்த்திக்!

நடிகர் சிபிராஜின் புதிய பயணம்… ‘அண்டர்டாக் ஃபிலிம்ஸ்’ முதல் படத்தை இயக்குகிறார் ‘ஜீப்ரா’ ஈஷ்வர் கார்த்திக்!

நடிகராக மட்டுமின்றி, வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து தனது திரைப்பயணத்தை தொடர்ந்து நகர்த்தி வரும் சிபிராஜ், தற்போது தயாரிப்பாளராகவும் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார்.

தனது பிறந்தநாளை முன்னிட்டு, ‘அண்டர்டாக் ஃபிலிம்ஸ்’ (UnderDog Films) என்ற புதிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை சிபிராஜ் தொடங்கியுள்ளார். இந்நிறுவனத்தின் முதல் படமாக உருவாகும் ‘Production No.1’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் வெளியான ‘ஜீப்ரா’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக், இப்படத்தை இயக்குகிறார். படத்தில் சிபிராஜ் கதாநாயகனாக நடிப்பதுடன், தயாரிப்புப் பொறுப்பையும் ஏற்றுள்ளார்.

நடிகராக பல்வேறு கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து வரும் சிபிராஜ், தற்போது தயாரிப்பிலும் தனது பார்வையை வெளிப்படுத்தத் தொடங்கியிருப்பது அவரது திரைப்பயணத்தில் முக்கியமான நகர்வாக பார்க்கப்படுகிறது.

சிபிராஜ் – ஈஷ்வர் கார்த்திக் கூட்டணி என்பதால், இப்படம் குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. குறிப்பாக, படத்தின் கதை மற்றும் ஜானர் என்ன? என்பதிலிருந்து, சிபிராஜுக்கு ஈஷ்வர் கார்த்திக் உருவாக்கியுள்ள கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்பது வரை பல கேள்விகள் எழுந்துள்ளன.

ஆனால், படத்தின் கதைக்களம், ஜானர், சிபிராஜுடன் இணைந்து நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இவை அனைத்தும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள நிலையில், படக்குழு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகராகத் தொடங்கிய பயணத்தில், தற்போது தயாரிப்பாளராகவும் புதிய பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கும் சிபிராஜின் ‘அண்டர்டாக் ஃபிலிம்ஸ்’ முதல் முயற்சி எந்த மாதிரியான படைப்பாக அமையப் போகிறது என்பதே திரையுலகினர் மற்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

Sibiraj Turns Producer with UnderDog Films; ‘Zebra’ Director Eashvar Karthic to Helm His First Production

Actor Sibiraj, who has consistently chosen diverse stories and distinctive characters over simply focusing on the number of films, has now embarked on a new chapter in his career by turning producer.

On the occasion of his birthday, Sibiraj officially launched his new production house, UnderDog Films. The production banner’s maiden venture, Production No. 1, has already gone on floors and is progressing at a brisk pace.

The film is being directed by Eashvar Karthic, who recently garnered attention for his acclaimed film Zebra. Sibiraj will not only headline the project but is also producing the film, marking his first major step into film production.

The collaboration between Sibiraj and Eashvar Karthic has already generated curiosity among moviegoers. While the makers have chosen to keep the film’s storyline and genre under wraps, the project is expected to offer something distinctive.

Details regarding the rest of the cast and technical crew are also being kept confidential for now. The official announcements regarding the film’s cast and crew are expected to be unveiled soon.

With Sibiraj taking on dual responsibilities as actor and producer, and Eashvar Karthic at the helm, UnderDog Films’ first production is certainly one to watch out for.