Thursday, April 25
Shadow

ரெமோ ரீமேக் மூலம் ஹிந்திக்கு போகும் சிவகார்த்திகேயன்?

ரஜினி முருகன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ரெமோ படமும் குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்த்து மாபெரும் வெற்றியை ருசித்தது. இதுவரை வெளியான சிவகார்த்திகேயன் படங்களிலேயே அதிக வசூல் செய்த படமாகவும் பெயர் பெற்றது.

சமீபத்தில் ரெமோ படத்தின் தெலுங்கு பதிப்பும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பிரம்மாண்டமாக ரிலீஸானது. தமிழை போலவே தெலுங்கிலும் இப்படம் மாபெரும் வெற்றிக் கண்டுள்ளது. இதை நேற்று சக்சஸ் பார்டியுடன் படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர்.

இதில் பேசிய இப்படத்தின் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், இப்படம் விரைவில் ஹிந்தியில் ரீமேக் ஆகபோவதாக தெரிவித்துள்ளார். எனவே சிவகார்த்திகேயன் இதன் ஹிந்தி ரீமேக்கில் நடிப்பாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

Leave a Reply