Friday, July 31
Shadow

ஜீவாவின் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தை கைப்பற்றிய ஏஜிஎஸ்! தயாரிப்பாளர் தரப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அதிகரித்த எதிர்பார்ப்பு

ஜீவாவின் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’படத்தை கைப்பற்றிய ஏஜிஎஸ்! தயாரிப்பாளர் தரப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அதிகரித்த எதிர்பார்ப்பு

 

தமிழ் திரையுலகில் வணிக ரீதியான பொழுதுபோக்கு திரைப்படங்களுக்கு தனித்துவமான இடத்தைப் பெற்ற இயக்குநர் ராஜேஷ். எம் இயக்கத்தில், நடிகர் ஜீவா கதாநாயகனாக நடித்துள்ள ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தும் வகையில், படத்தின் வெளியீடு தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மலேசியாவைச் சேர்ந்த மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் டத்தோ அப்துல் மாலிக் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வரும் இந்த திரைப்படத்தில், ஜீவாவுடன் நடிகை இவானா, பரிதாபங்கள் சுதாகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்திற்கு ஒளிப்பதிவாளர் எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்க, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நகைச்சுவை, குடும்ப உணர்வுகள், காதல் மற்றும் விறுவிறுப்பான பொழுதுபோக்கு அம்சங்கள் இணைந்த கமர்ஷியல் என்டர்டெய்னராக இப்படம் உருவாகி வருகிறது.

சமீபத்தில் வெளியான படத்தின் ப்ரோமோ வீடியோ சமூக வலைதளங்களில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியது.

இந்நிலையில், திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனங்களில் ஒன்றான ஏஜிஎஸ் நிறுவனம் பெற்றிருப்பதாக, மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் இந்தியா நிறுவனத்தின் CEO திரு. ராசிக் அஹ்மது, தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பதிவின் மூலம் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் கவனம் பெற்றுள்ளது. வலுவான தயாரிப்பு நிறுவனமும், முன்னணி வெளியீட்டு நிறுவனமும் இணைந்துள்ளதால், ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் திரையரங்குகளில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

விரைவில் படத்தின் இசை வெளியீடு, டிரெய்லர் மற்றும் திரையரங்கு வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

AGS Entertainment to Release Jiiva’s ‘Jaaliya Irundha Oruthan’; Official Announcement Raises Expectations

Actor Jiiva’s upcoming commercial entertainer ‘Jaaliya Irundha Oruthan’, directed by M. Rajesh, has been generating significant buzz among moviegoers. Adding to the excitement, an important announcement regarding the film’s theatrical release has now been made.

Produced on a grand scale by Dato’ Abdul Malik under the banner of Malik Streams Corporation, the film stars Jiiva in the lead alongside Ivana, Parithabangal Sudhakar, and several other prominent actors.

The film features cinematography by M. Sukumar, while Yuvan Shankar Raja has composed the music. Promising a complete commercial entertainer packed with comedy, romance, family emotions, and engaging moments, the film is expected to appeal to a wide audience.

The recently released promo video received an enthusiastic response on social media, further increasing anticipation for the project.

In the latest development, Raseek Ahmed, CEO of Malik Streams Corporation India, officially announced through his social media platforms that AGS Entertainment will distribute the film in theatres.

The announcement has created considerable excitement within the film industry and among fans. With a reputed production house joining hands with one of Tamil cinema’s leading distribution companies, ‘Jaaliya Irundha Oruthan’ is expected to receive a grand theatrical release.

Further updates regarding the film’s audio launch, trailer, and worldwide theatrical release date are expected to be announced soon.