Tuesday, July 28
Shadow

Tag: அறிவிப்பு

ஜோதிகா நடிக்கும் ‘ராட்சசி’ ரீலிஸ் தேதி அறிவிப்பு

ஜோதிகா நடிக்கும் ‘ராட்சசி’ ரீலிஸ் தேதி அறிவிப்பு

Latest News, Top Highlights
நடிகை ஜோதிகா, அறிமுக இயக்குனர் எஸ் ராஜ் இயக்கத்தில் நடிக்கும் படத்திற்கு ராட்சசி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை யோகிபாபு நடிப்பில் வெளியாக உள்ள தர்ம பிரபு, விமல் நடிப்பில் வெளியாக உள்ள களவாணி 2 ஆகிய படம் வெளியாகும் ஜூன் 28ம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்த படத்தில் ஜோதிகா, அரசு பள்ளி ஆசிரியை வேடத்தில் நடித்துள்ளதோடு, மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தவும் பாடு படுவராக நடித்துள்ளார். எஸ் ஆர் பிரபுவின் டிரீம் வாரியார் பிச்சர்ஸ் தயாரிப்பில், நடிகை பூர்ணிமா பாக்கியராஜ் மற்றும் சத்தியன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். இந்த படத்தில் டிரைலர்கள், சூர்யாவின் என்ஜிகே உடன் இணைக்கப்பட்டு தியேட்டர்களில் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது...

‘தும்பா’ படத்தின் திரையிடும் தேதி அறிவிப்பு

Latest News, Top Highlights
சிவகார்த்திகேயன் தயாரித்த 'கனா' படத்தின் நாயகன் தர்ஷன், அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'தும்பா'. ஹரிஷ் ராம் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத், விவேக்-மெர்வின் மற்றும் சந்தோஷ் தயாநிதி ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படம் வரும் ஜூன் 21ம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது....
வெளியானது நாடோடிகள் குழுவின் அடுத்த பட அறிவிப்பு

வெளியானது நாடோடிகள் குழுவின் அடுத்த பட அறிவிப்பு

Latest News, Top Highlights
நாடோடிகள் 2 படத்தின் பணிகள் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகிவரும் நிலையில் அப்படக்குழு மீண்டும் இணைந்து பணியாற்றவுள்ளது. 2003ஆம் ஆண்டிலேயே இயக்குநராக அறிமுகமானாலும் சமுத்திரக்கனிக்கு பெரும் வரவேற்பைப் பெற்றுதந்தது 2009ஆம் ஆண்டு வெளியான நாடோடிகள் திரைப்படம் தான். தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தை சமுத்திரக்கனி இயக்கியுள்ளார். சசிகுமார், அஞ்சலி, பரணி, அதுல்யா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முதல் பிரதி அடிப்படையில் மெட்ராஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்துக்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, ஐஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இதன் பணிகள் நிறைவடைந்து, ரிலீஸுக்காக காத்திருக்கும் நிலையில் கடந்த 26 அன்று இயக்குநர் சமுத்திரக்கனியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. தனது பிறந்த நாளை முன்னிட்டு, அடுத்த படம் குறித்த அறிவிப்பை சமுத்திரக்கனி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்...
கவுதம் கார்த்திக், STR நடிக்கும் ஆக்சன் திரில்லர் படத்தின் படபிடிப்பு தொடங்கும் தேதி அறிவிப்பு

கவுதம் கார்த்திக், STR நடிக்கும் ஆக்சன் திரில்லர் படத்தின் படபிடிப்பு தொடங்கும் தேதி அறிவிப்பு

Latest News, Top Highlights
கவுதம் கார்த்திக், STR நடிக்கும் ஆக்சன் திரில்லர் படத்தின் படபிடிப்பு தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. புரொடியூசர் கே.இ.ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் பிலிம் சார்பில் புரோடைக்சன் 20 என்ற பெயரில் STR மற்றும் கவுதம் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடக்கும் படம் ஒன்றை தயாரிக்க உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது....
அருள்நிதி நடிக்கும் ’கே -13’ படத்தின் ரீலிஸ் தேதி அறிவிப்பு

அருள்நிதி நடிக்கும் ’கே -13’ படத்தின் ரீலிஸ் தேதி அறிவிப்பு

Latest News, Top Highlights
வம்சம் படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகர் அருள்நிதி. அதன்பிறகு இவர் நடித்த மௌனகுரு படம் அருள்நிதிக்கு நல்ல நடிகர் என்ற அந்தஸ்த்தை கொடுத்தது. வித்யாசமான கதைகளை கொண்ட படங்களில் தேர்தெடுத்து நடிக்கும் இவர் பிருந்தாவனம் படத்தில் வாய் பேச இயலாதவராக நடித்து. தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை மறுபடியும் நிரூபித்துள்ளார். இப்போது அருள்நிதி பரத் நீலகண்டன் இயக்கத்தில் கே13 என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியா ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருக்கிறார். சாம் சி எஸ் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திருந்த நிலையில் இப்போது கே-13 படத்தின் ரீலிஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த படம் வரும் மே ஒன்றாம் தேதி உலகம் முழுவதும் ரீலிஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்த...
வைபவ் நடிக்கும் ‘ஆர் கே நகர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

வைபவ் நடிக்கும் ‘ஆர் கே நகர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

Latest News, Top Highlights
வைபவ், சரோஜா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன் பிறகு அரண்மனை 2 ,ஈசன், மேயாத மான் போன்ற படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் உருவான பேட்டை படத்தில் ஒரு காட்சிக்கு மட்டும் வந்து செல்வார். தற்போது இவரது நடிப்பில் ஆர்கேநகர் படம் வெளியாக உள்ளது. சரவண ராஜன் இயக்கத்தில் ஏப்ரல் 12ம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் ஆர்.கே.நகர். இந்த திரைப்படத்தில் வைபவ், சம்பத் ராஜ், பிரேம்ஜி, கருணாகரன், அரவிந்த் ஆகாஷ், சந்தான பாரதி, சன அல்தாப், ஸ்ரீகுமார் போன்ற பல நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர், இப்படத்திற்கு வெங்கட்பிரபுவின் தம்பியான பிரேம்ஜி இசையமைத்து உள்ளார். அதனால் இப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்....
அசுரன் பட பாடல்களுக்கு இசையமைத்து விட்டேன்:  ஜி.வி.பிரகாஷ்  அறிவிப்பு

அசுரன் பட பாடல்களுக்கு இசையமைத்து விட்டேன்: ஜி.வி.பிரகாஷ் அறிவிப்பு

Latest News, Top Highlights
அசுரன் படத்தில் இரண்டு பாடல்களுக்கு இசையமைத்து முடித்துவிட்டதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார். இதையடுத்து அசுரன் படத்திலும் ஜி.வி.பிரகாஷ் இணைந்தார். இந்தப் படத்தின் பாடல்கள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் ஜி.வி.பிரகாஷ், “அசுரன்' படத்திற்காக இரண்டு பாடல்களை முடித்துவிட்டதாகவும், அதில் ஒன்று சூப்பர் டான்ஸ் பாடல் என்றும் , இந்த பாடலுக்காக காத்திருப்பவர்களுக்கு விரைவில் ஆச்சரிய தகவல் உண்டு என்றும் கூறியுள்ளார். பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலை அடிப்படையாக வைத்து ‘அசுரன்’ படம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் நடிகர் தனுஷ் அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். பழிவாங்கும் திரில்லர் கதையே ‘வெக்கை’ நாவல். நடிகர் தனுஷ் இயக்குனர் வெற்றி மாறனுடன் இணைந்து பணியாற்றுவது இது நான்காவது முறையாகும். கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் தனுஷ், மஞ்சுவாரியர், பா...
தளபதி 63 முதல் பார்வை மற்றும் தலைப்பு வெளியாகும் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

தளபதி 63 முதல் பார்வை மற்றும் தலைப்பு வெளியாகும் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

Latest News, Top Highlights
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ படம் பெரிய பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. இந்த படத்திற்காக பெரியளவிலான கால்பந்து ஸ்டேடியம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கட்டப்பட்டு உள்ளது. இந்த செட்டின் புகைபடங்கள் சமூக இணைய தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் முதல் பார்வை மற்றும் போஸ்டர் ஆகியவை வரும் ஏப்ரல் 14ம் தேதி வெளியிட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது....
கபில்தேவ் வாழ்க்கை வரலாறு படமான “83” ரீலிஸ் தேதி அறிவிப்பு

கபில்தேவ் வாழ்க்கை வரலாறு படமான “83” ரீலிஸ் தேதி அறிவிப்பு

Latest News, Top Highlights
கிரிக்கெட் வீரர் கபில்தேவ் பயோபிக் படத்தில் முக்கிய கேரக்டரில் ‘அர்ஜுன் ரெட்டி’ நாயகன் விஜய் தேவரகொண்டா ஒப்பந்தமாகியுள்ளார்.  ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் மூலம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி ரசிகர்களை பெரிதாக ஈர்த்த நடிகர் விஜய் தேவ்ரகொண்டா தற்போது பாலிவுட்டில் களமிறங்கவுள்ளார். கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டராக ஜொலித்த கபில் தேவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘83’ படத்தில் விஜய் தேவாரகொண்டா நடிக்கிறார். இயக்குநர் கபீர்கான் இயக்கத்தில் உருவாகி வரும் ‘83’ படத்தில் கபில் தேவ் கேரக்டரில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிக்கிறார். இப்படத்தில் தமிழக கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்தின் கேரக்டரில் விஜய்தேவரகொண்டா நடிக்கிறார்.  இந்நிலையில் இந்த படம் வரும் 2020 ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது....
சூர்யாவின் என்.ஜி.கே ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூர்யாவின் என்.ஜி.கே ரிலீஸ் தேதி அறிவிப்பு

Latest News, Top Highlights
நந்த கோபாலன் குமரன் (சுருக்கமாக என்.ஜி.கே.) என்ற இப்படத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கிறார். கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கிய இந்தப் படம் 2018-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவரும் அறிவிக்கப்பட்டு, சில காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. சூர்யா - செல்வராகவன் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகரித்திருந்தது. கடந்த ஜனவரி மாதத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து பிப்ரவரி மாதத்தில் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், என்.ஜி.கே மே மாதம் 31-ம் தேதி திரைக்கு வரும் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்....