Tuesday, February 11
Shadow

Tag: #இந்தியன் 2

இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 4 கோடி இழப்பீடு…

Latest News, Top Highlights
சென்னை: இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 4 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது கடந்த பிப்.19 ஆம் தேதி இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் 150 அடி உயரத்தில் லைட் அமைக்கும் பணியில் ஈடுபட்ட போது அதைத் தாங்கி நின்ற கிரேன் எதிர்பாராத விதமாகச் சரிந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் அந்தப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மற்றொருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பலியானார். இந்த விபத்து தொடர்பாக லைகா நிறுவனம், கிரேன் உரிமையாளர் மற்றும் புரொடக்ஷன் மேனேஜர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு மொத்தமாக ரூ. 4 கோடி இழப்பீடு வழங்கியுள்ளனர். இதன...

இந்தியன் 2 பட ஷூட்டிங்கில் இணைந்தார் கமல்ஹாசன்

Latest News, Top Highlights
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் படம் இந்தியன் 2. பல்வேறு பணிகளில் பிசியாக இருந்து வந்த கமல்ஹாசன் தற்போது, இந்த படத்தில் ஷூட்டிங்களில் இணைந்தார்., சென்னையில் நடந்த ஷூட்டிங்கில், கமல்ஹாசன் பிரியா பவானி சங்கர் இடம் பெறும் காட்சிகள் படமாக்கப்பட்டது. இயக்குனர் ஷங்கர் இயக்கம் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த ப்டத்ஹில் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் மற்றும் சித்தார்த் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கான ஷூட்டிங் விறுவிறுப்பாக்க நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்....

இந்தியன் 2 பட சூட்டிங் தொடங்கும் தேதி அறிவிப்பு

Latest News, Top Highlights
இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் இந்தியன் 2 ப்டத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இந்த படத்தின் சூட்டிங் வரும் ஆகஸ்ட் 19ம் தேதி ராஜ முந்திரியில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கமலை தவிர்த்து இந்தியன் 2 படத்தில் சித்தார்த், ராகுல் பிரித் சிங், ஐஸ்வரியா ராஜேஷ், கஜோல் அகர்வால் மற்றும் பிரியா பவனி சங்கர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். லைக்கா தயாரிக்கும் இந்த படத்திற்கு இசை அமைக்க அனிருத் கையெழுத்திட்டுள்ளார்....
கைவிடப்பட்டதா கமல்ஹாசன்- ஷங்கர் கூட்டணியில்  உருவாக்கும் இந்தியன் 2 ?

கைவிடப்பட்டதா கமல்ஹாசன்- ஷங்கர் கூட்டணியில் உருவாக்கும் இந்தியன் 2 ?

Latest News, Top Highlights
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் நடிக்கும் 'இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடக்கவில்லை என்றும் அதே நேரத்தில் முதல்கட்ட படப்பிடிப்பிலேயே திட்டமிட்ட பட்ஜெட்டை விட மூன்று மடங்கு செலவானதால் இந்த படத்தினை தொடர லைகா நிறுவனம் விரும்பவில்லை என்றும் தகவல் வந்தது. 350 கோடி பட்ஜெட்டில் இந்த படம் தயாரிக்கவிருந்தது. ஆனால் முதல்கட்ட படப்பிடிப்பின் பாதிகூட முடியாததால் லைகா நிறுவனம் அதிருப்தி தெரிவித்தது. மேலும் படத்தின் நாயகன் கமல் தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக இறங்கியுள்ளார். இதனால் படத்தின் படப்பிடிப்பும் தாமதமாகிக்கொண்டே இருப்பதால் அதிருப்தி அடைந்த லைகா நிறுவனம் இந்த படத்தில் இருந்து ஒதுங்க முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இந்தியன்2 முற்றிலுமாக கைவிடப்படும் என்று தெரிக...
இந்தியன்-2 பற்றிய பிரமாண்ட தகவலை வெளியிட்ட ஷங்கர்

இந்தியன்-2 பற்றிய பிரமாண்ட தகவலை வெளியிட்ட ஷங்கர்

Latest News, Top Highlights
ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘2.0’. ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு பிறகு ஷங்கர் ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளார். 1996-ஆம் ஆண்டு ரிலீஸான இதன் முதல் பாகத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்தி அசத்தியிருந்தார். முதல் பாகம் மெகா ஹிட் என்பதால் இப்போதே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இதிலும் கமல்ஹாசனே ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு இயக்குனர் ஷங்கர் டுவிட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ‘இந்தியன் 2’ என்று எழுதப்பட்டிருக்கும் ஹீலியம் பலூனை தைவான் நாட்டில் தனது டீமுடன் சேர்ந்து பறக்கவிட்ட வீடியோவையும் பதிவு செய்துள்ளார். இந்த வீ...
ஷங்கர் – கமல் இணையும் `இந்தியன் 2′ படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா?

ஷங்கர் – கமல் இணையும் `இந்தியன் 2′ படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா?

Latest News, Top Highlights
ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996-ஆம் ஆண்டு வெளியாகி மெகா வெற்றி பெற்ற படம் `இந்தியன்'. இப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கமல் - ஷங்கர் மீண்டும் இணையும் `இந்தியன்-2' படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் `இந்தியன்-2' படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரி முதல் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அடுத்தடுத்த பல படங்கள் வரிசைக்கட்டி நிற்பதால் ஏ.ஆர்.ரகுமானால் இந்த படத்திற்கு இசையமைக்க முடியாத நிலைய ஏற்பட்டுள்ளது. எனவே இந்த படத்திற்கு அனிருத்தை இயக்குநர் ஷங்கர் ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் அனிருத்தோ ...