Friday, March 17
Shadow

Tag: #ஓவியா

நடிகை ஓவியா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
ஓவியா  இந்திய வடிவழகியும், நடிகையுமாவார். இவர் 2010ல் ஓவியா என்ற பெயர் மாற்றத்துடன் களவாணி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகி்ல் அறிமுகமானார். இவர் 2017ல் விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் தமிழ் 1 எனும் மெய்நிலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 1991 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி கேரளாவில் உள்ள திரிச்சூரில் பிறந்தார், தற்போது சென்னையில் வசித்துவருகிறார். நடுத்தர குடும்பத்தில் பிறந்து செல்லமாக வளர்க்கப்பட்ட ஓவியா, அரசு பள்ளியில் தனது பள்ளி பருவத்தை முடித்த இவர் பின்பு,  திரிசூர் விமலா கல்லூரியில் தனது பட்டபடிப்பினை முடித்தார். இந்திய நடிகையுமான இவர் தமிழில் களவானி படத்தின் மூலம் அறிமுகம் ஆனாலும் கங்காரு (2007) என்ற மலையாள படம் தான் ஓவியாவின் முதல் படம். வெற்றி படமான களவானியில் நடித்த ஓவியா பின்பு நல்ல கதைகளை தேர்வு செய்து, மெரினா, மூடர் கூடம், யாமிருக்க பயமே போன்ற ப...
இதை யாரும் நம்பாதீர்கள் – ஓவியா

இதை யாரும் நம்பாதீர்கள் – ஓவியா

Latest News, Top Highlights
ஓவியா தற்போது ராகவா லாரன்சுடன் ‘காஞ்சனா 3’ , விமலுடன் ‘களவாணி-2’, சிம்பு இசை அமைக்கும் ‘90எம்.எல்’ படங்களில் நடித்து வருகிறார். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு பிறகு ‘மார்க்கெட்’ சூடு பிடித்திருக்கும் நிலையில் ஓவியா தனது சம்பளத்தை உயர்த்திவிட்டார் என்று தகவல்கள் வெளியாகின. இதுபற்றி கூறிய அவர்.... “என்னைப்பற்றி யாரோ தவறான செய்தியை திட்டமிட்டு பரப்பி வருகிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நான் சம்பளத்தை உயர்த்திவிட்டதாக கூறுவது தவறான தகவல். நான் எந்த தயாரிப்பாளரிடமும் இவ்வளவு சம்பளம் கொடுத்தால் தான் நடிப்பேன் என்று சொல்வதே இல்லை. ‘களவாணி-2’ படத்தில் நடிக்க நான் அதிக சம்பளம் கேட்டதாகவும், இதனால் வேறு நடிகையை அந்த படத்துக்கு ஒப்பந்தம் செய்துவிட்டார்கள் என்றும் வதந்தியை பரப்பிவிட்டார்கள். ஆனால், இப்போது அந்த படத்தில் நான் தான் நடிக்கிறேன். இதுபோன்ற உண்மைக்கு புறம்பான செய்திகள் நிறைய வெ...
பொது மேடையில் ரசிகருக்கு முத்தம் கொடுத்த ஓவியா

பொது மேடையில் ரசிகருக்கு முத்தம் கொடுத்த ஓவியா

Latest News, Top Highlights
நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் மக்களிடையே செல்லப் பிள்ளையாக மாறிவிட்டார். இதனால், இவருக்கு படவாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், நடிகை ஓவியா மலேசியாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுள்ளார். அப்போது, அவர் மேடையிலிருந்த போது, ரசிகர் ஒருவர் அவரிடம் தன் பெயரை மூன்று முறை சொல்லுமாறு கேட்டுள்ளார். அதற்கு ஓவியா அவர் கன்னத்தில் முத்தமிட்டு அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தார். அதன்பின், மீண்டும் மேடைக்கு வந்த அவரை ஓவியா கட்டிப்பிடித்து, அனைவரையும் வாயை பிளக்க வைத்தார். தற்போது, அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது....
நயன்தாராவை ஓவர்டேக் செய்த ஓவியா

நயன்தாராவை ஓவர்டேக் செய்த ஓவியா

Latest News, Top Highlights
சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றில் லேடி சூப்பர் ஸ்டாரை நயன்தாராவை முந்தி ஓவியா முதலிடத்தை பிடித்திருக்கிறார். தனியார் பத்திரிகை ஒன்று 2017-ஆம் ஆண்டின் விரும்பப்பட்ட பெண் யார் என்று ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியது. அதல் முடிவு தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் நடிகை ஓவியா முதலிடத்தை பிடித்திருக்கிறார். 2017-ல் 3 வெற்றிப்படங்களை கொடுத்தும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு இரண்டாவது இடம் தான் கிடைத்துள்ளது. அந்த அளவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஓவியா மிகவும் பிரபலமாகிவிட்டார். அவருக்கென ரசிகர் பட்டாளமும் உருவாகி இருக்கிறது. ஓவியா, நயன்தாராவை தொடர்ந்து 3-வது இடத்தில் ரகுல் ப்ரீத் சிங்கும், 4-வது இடத்தில் ஷ்ரத்தா சசிதரும், 5-வது இடத்தில் காஜல் அகர்வாலும், 6-வது இடத்தில் ஏமி ஜாக்சனும், 7-வது இடத்தில் ஆண்ட்ரியாவும், 8-வது இடத்தில் சஞ்சனா நடராஜனும், 9-வது இடத்தில் ரூஹி ச...
புதிய படத்தின் மூலம் இணையும் சிம்பு – ஓவியா

புதிய படத்தின் மூலம் இணையும் சிம்பு – ஓவியா

Latest News, Top Highlights
சமீபகாலமாக சிம்பு - ஓவியா பற்றி செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. சிம்புவும் ஓவியாவும் காதலிப்பதாகவும், ரகசிய திருமணம் செய்து விட்டதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால், இது குறித்து இருவரும் மறுப்பு தெரிவித்தார்கள். சமீபத்தில் புத்தாண்டை முன்னிட்டு சிம்பு - ஓவியா இருவரும் இணைந்து ‘மரண மட்டை’ என்ற பாடலை உருவாக்கி வெளியிட்டார்கள். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது புதிய படத்தின் மூலம் இருவரும் மீண்டும் இணைய இருக்கிறார்கள். ஆனால் நாயகன் - நாயகியாக இல்லாமல், அடுத்ததாக ஓவியா நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கு இசையமைப்பதன் மூலம் இருவரும் இணையவிருக்கிறார்கள். அனிதா என்பவர் இயக்கத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் ஓவியா நடிக்க இருப்பதாகவும், அந்த படத்திற்கு சிம்பு இசையமைக்க இருப்பதாகவும் ஒரு தகவல் உலாவி வருகிறது. Bற்கனவே சிம்பு, சந்தானம் நடிப்பில் வெ...
களவாணி 2 படத்தைத் தயாரிக்கும் நசீரின் ஷெராலி பிலிம்ஸ்

களவாணி 2 படத்தைத் தயாரிக்கும் நசீரின் ஷெராலி பிலிம்ஸ்

Latest News, Top Highlights
2010ம் ஆண்டு விமல் ஓவியா நடிப்பில் A.சற்குணம் இயக்கத்தில் தயாரிப்பாளர் நசீரின் ஷெராலி பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த "களவாணி" திரைப்படம் பலரின் வரவேற்பை பெற்று பெரும் வெற்றி பெற்றது. அதன் பின்பு சுரேஷ் இயக்கத்தில் விமல் நடித்த "எத்தன்" படத்தைத் தயாரித்து வெளியிட்டு வெற்றி கண்டது. தற்போது பூணம் கவுர் நடிப்பில் மதிவாணன் இயக்கத்தில் "வதம்" படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. மே மாதம் இப்படம் வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் நசீரின் ஷெராலி பிலிம்ஸ் முக்கிய நடிகர் நடிகையர் நடிக்க "களவாணி 2" என்ற படத்தை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கவுள்ளது. "களவாணி 2" படத்திற்கான படத்தலைப்பின் உரிமையை ஷெராலி பிலிம்ஸ் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையே பெற்றுள்ளது. இப்படத்தின் நடிக்கவுள்ள நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரம் விரைவில் வெளியிடப்படும் என்று தய...
தனது அடுத்த படம் இது தான்: ஓவியா

தனது அடுத்த படம் இது தான்: ஓவியா

Latest News, Top Highlights
`களவாணி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஓவியா. தனது முதல் படத்திலேயே அனைத்து தரப்பினரையும் கவர்ந்திருந்தார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்தாலும், `கலகலப்பு' அவருக்கு ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது. பின்னர் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரையும் கவர்ந்துள்ளார். மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கியிருக்கும் ஓவியா, தற்போது ராகாவா லாரன்சுடன் காஞ்சனா 3 படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இதுதவிர விஷ்ணு விஷாலுடன் சிலுக்குவார்பட்டி சிங்கம் மற்றும் ஓவியாவ விட்டா வேற யாரு சீனி படத்தில் நடித்து டுடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி தெலுங்கு படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், டிகே இயக்கத்தில் `காட்டேரி' படத்தில் ஒப்பந்தமான ஓவியாவுக்கு பதிலாக ஹன்சிகா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், ரசிகர்களுடன் டுவிட்டர...