Friday, January 17
Shadow

நடிகை ஓவியா பிறந்த தின பதிவு

ஓவியா  இந்திய வடிவழகியும், நடிகையுமாவார். இவர் 2010ல் ஓவியா என்ற பெயர் மாற்றத்துடன் களவாணி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகி்ல் அறிமுகமானார். இவர் 2017ல் விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் தமிழ் 1 எனும் மெய்நிலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
1991 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி கேரளாவில் உள்ள திரிச்சூரில் பிறந்தார், தற்போது சென்னையில் வசித்துவருகிறார். நடுத்தர குடும்பத்தில் பிறந்து செல்லமாக வளர்க்கப்பட்ட ஓவியா, அரசு பள்ளியில் தனது பள்ளி பருவத்தை முடித்த இவர் பின்பு,  திரிசூர் விமலா கல்லூரியில் தனது பட்டபடிப்பினை முடித்தார்.
இந்திய நடிகையுமான இவர் தமிழில் களவானி படத்தின் மூலம் அறிமுகம் ஆனாலும் கங்காரு (2007) என்ற மலையாள படம் தான் ஓவியாவின் முதல் படம். வெற்றி படமான களவானியில் நடித்த ஓவியா பின்பு நல்ல கதைகளை தேர்வு செய்து, மெரினா, மூடர் கூடம், யாமிருக்க பயமே போன்ற படங்களில் நடித்தார்.
இவர் நடித்த படங்கள் : 90 ML , களவாணி 2, காஞ்சனா 3, கணேஷா மீண்டும் சந்திப்போம், சீதக்காதி, சிலுக்குவார்பட்டி சிங்கம், ஹலோ நான் பேய் பேசுறேன், சண்டமாருதம், 144, யாமிருக்க பயமே, புலிவால், மதயானைக் கூட்டம், மூடர் கூடம், கலகலப்பு, மெரினா, முத்துக்கு முத்தாக, மன்மதன் அம்பு, களவாணி