
காஞ்சனா 3 விமர்சனம் (ரேடிங் 3.5/5)
முனி படத்தின் 4வது தொடராக வெளியாகியுள்ள படம் காஞ்சனா 3 படம். இதில் ராகவா லாரன்ஸ், ஓவியா, வேதிகா, சத்யராஜ், கோவை சரளா, துவான் சிங், சூரி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்கி நடித்த லாரன்ஸ் தயாரிப்பிலும் கூட்டு சேர்ந்துள்ளார். ஏற்கனவே வந்த முனி பாகங்கள் தமிழ் மற்றும் தெலுங்க்கில் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
படத்தில் ராகவா லாரான்ஸ் ராகவா மற்றும் காளி என இரு வேடங்களில் நடித்துள்ளார். ஏற்கனவே வெளிவந்த படங்களை போன்று இந்த படத்திலும், பேய் மூலம் தனது நோக்கத்தை ஹீரோ நிறைவேற்றுகிறார். எப்படி பேய் தனக்கு எதிரானவர்களை பழிக்கு தீர்க்கிறது என்பதே படத்தின் கதையாகும்.
படத்தின் முதல் பாதி ஆக்ஷன், ஹரார், காமடி, கிளாமர், டான்ஸ், பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்கிறது. இண்டர்வேல் பிளாக் பகுதியில் வரும் காட்சிகள் ரசிகர்களை மனதை வருடும் வக...