நடிகர் கார்த்திக் பிறந்த தின பதிவு
கார்த்திக், தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடிகர் முத்துராமனின் மகனும் ஆவார்.2006-ஆம் ஆண்டு, அனைத்திந்திய ஃபார்வார்ட் பிளாக் கட்சியின் தமிழகத் தலைவராகப் பொறுப்பேற்று, அரசியல் வாழ்விலும் நுழைந்த இவர் தற்போது அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற கட்சியைத் துவங்கியுள்ளார். இவர் நான்கு முறை பிலிம்பேர் விருதையும், நான்கு முறை தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதையும் மற்றும் கலைமாமணி விருது உட்பட பல விருதுகளை தன்னுடைய சிறந்த நடிப்பிற்காக பெற்றுள்ளார்.
அலைகள் ஓய்வதில்லை திரைப்படம் மூலமாக அறிமுகமான இவர், தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மணிரத்னம் இயக்கிய கடல் திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் கௌதம் கார்த்திக் இவரது மூத்த மகனாவார்....