
ஸ்டூடியோ கிரீன்ஸ் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி வரும் படம் `தானா சேர்ந்த கூட்டம்’.
விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கும் இந்த படத்தில் சூர்யா – கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நவரச நாயகன் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். செந்தில், சரண்யா பொன்வண்ணன், நந்தா, ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சத்யன், கோவை சரளா, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாக இருக்கிறது.
ஏற்கனவே இந்த படத்தில் இருந்து வெளியாகிய `சொடக்கு’ பாடல் வலைதளங்களில் டிரெண்டாகி வரும் நிலையில், சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் இந்திய அளவில் புதிய சாதனை படைத்திருக்கிறது.
கடந்த நவம்பர் 30-ஆம் தேதி வெளியாகிய டீசரை 60,7000-க்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளதன் மூலம் இந்திய அளவில் அதிக லைக் பெற்ற இரண்டாவது டீசர் என்ற சாதனையை படைத்துள்ளது. இதுவரை இந்த டீசரை 80 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டுகளித்துள்ளனர்.