
ஸ்டூடியோ கிரீன்ஸ் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி வரும் படம் `தானா சேர்ந்த கூட்டம்’.
விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கும் இந்த படத்தில் சூர்யா – கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நவரச நாயகன் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். செந்தில், சரண்யா பொன்வண்ணன், நந்தா, ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சத்யன், கோவை சரளா, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாக இருக்கிறது.
சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் மற்றும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் கைப்பற்றி இருக்கிறது.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கிறது.