Tuesday, December 3
Shadow

Tag: கார்த்தி

பிறந்த நாள் பரிசு ரசிகர்களுக்கு கார்த்தி வேண்டுகோள்

Latest News, Top Highlights
அமீர் இயக்கிய பருத்தி வீரன், படத்தின் மூலம் மூலம் அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. இவர் தமிழ் சினிமாவில் தனக்கென ஓரிடத்தைப் பிடித்துள்ளார். இன்று 44-வது பிறந்தநாளைக் கொண்டாடும் கார்த்தி, ரசிகர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில்., அன்புத் தம்பிகள் அனைவருக்கும் வணக்கம்! இந்த கொரோனா (Coronavirus) சூழல் இதுவரை நாம் கண்டிராத அளவுக்கு மிகக் கடுமையாக உள்ளது! அரசாங்கமும், மருத்துவர்களும் நமக்கு அறிவித்துள்ள, 'மாஸ்க் அணிதல், சானிடைசர் பயன்படுத்தல், தனி மனித இடைவெளியைக் கடைபிடித்தல், வசிப்பிடத்தை விட்டு வெளியே செல்லாமல் இருத்தல் போன்ற பாதுகாப்பு விதிமுறைகளை தவறாமல் பின்பற்றி; தம்பிகள் ஒவ்வொருவரும் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்'. இதுவே இந்தப் பிறந்தநாளுக்கு எனக்கு நீங்கள் தரும் பரிசாக இருக்கும்!” என்று நடிகர் கார்த்தி (Karthi) தெரிவித்துள்ளார்.  ...
கோவாவில் தொடங்குகிறது கார்த்தி-ஜோதிகா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு

கோவாவில் தொடங்குகிறது கார்த்தி-ஜோதிகா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு

Latest News, Top Highlights
'வயாகம்18 ஸ்டூடியோஸ்' , 'பேரலல் மைண்ட்ஸ்' இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் கார்த்தி அக்காவாக ஜோதிகா நடிக்கும் புதிய படம் கோவாவில் ஆரம்பம். ஜீத்து ஜோசப் இயக்குகிறார். கார்த்தி அக்காவாக ஜோதிகா நடிக்கும் பெயரிடபடாத “கார்த்தி/ஜோதிகா” இப்படத்தின் முதல் பார்வை அதிகாரப்பூர்வமாக வெளியானவுடனே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இப்படத்தை மிகவும் புகழ்பெற்ற (த்ரிஷ்யம், பாபநாசம் புகழ்) இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்குகிறார். பேரலல் மைண்ட்ஸ் புரொடக்‌ஷன் சூரஜ், ‘வயாகாம்18 ஸ்டூடியோஸ்’ உடன் இணைந்து தயாரிக்கிறார். சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க, அவருடன் ஆன்சன் பால் (ரெமோ, மாபெரும் வெற்றிபெற்ற ஆப்ரஹாமிண்டே சந்ததிகள் புகழ்) மற்றும் இன்னும் சிலரும் விரைவில் இணைவார்கள். கோவிந்த் வசந்த் (96 புகழ்) இசையமைக்க, ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நேற்று தொடங்கியது. 2019 அக்டோ...
கார்த்தி-ஜோதிகாவின்  அடுத்த படத்தில் அன்சன் பால்

கார்த்தி-ஜோதிகாவின் அடுத்த படத்தில் அன்சன் பால்

Latest News, Top Highlights
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தில் நடித்தவர் வளர்ந்து வரும் மலையாள நடிகர் அன்சன் பால். சமீபத்தில் வெளிவந்த 90எம்எல் படத்தில் ஓவியா, பாய்பிரண்டாக வரும் அந்த சிக்ஸ் பேக்ஸ் நடிகர் தான் அன்சன் பால். அவர் இப்போது கார்த்திக்கு வில்லனாக நடிக்கப்போகிறார். பாபநாசம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப்பின் அடுத்த படத்தில் நடிகர் கார்த்தி, நடிகை ஜோதிகா இணைந்து நடிக்க உள்ளனர். இந்த படத்தில் அன்சன் பால். வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்காக கெட்அப் மாற வேண்டியது இருப்பதால் அன்சன் பால், அதிக நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரின் பெயர்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது....
கார்த்திக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா

கார்த்திக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா

Latest News, Top Highlights
`தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்தி தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்து வருகிறார். சூர்யாயின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக சாயிஷா, பிரியா பவானி சங்கர் நடிக்கின்றனர். சத்யராஜ், சூரி, ஸ்ரீமன், பானுப்ரியா, மௌனிகா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். நேற்று முன்தினம் இந்த படத்திற்காக ரேக்ளா ரேஸ் நடப்பது போன்ற காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. இதைப் பார்ப்பதற்காக நடிகர் சூர்யா தனது மகன் தேவுடன் தென்காசி சென்று கார்த்திக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அங்கு ரேக்ளா ரேஸ் பார்க்கும் வீடியோவையும், புகைப்படத்தையும் அவரது டு...
இதுதான் தமிழ் மண்ணுக்கே உரிய அடையாளம் – நடிகர் சூரி

இதுதான் தமிழ் மண்ணுக்கே உரிய அடையாளம் – நடிகர் சூரி

Latest News, Top Highlights
தற்போது சூரி முன்னணி காமெடி நடிகராக வலம் வருகிறார். சூரி தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இதில் பாண்டிராஜ் இயக்கும் ‘கடைக்குட்டி சிங்கம்’ படமும் ஒன்று. கார்த்தி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரித்து வரும் இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக சாயிஷா நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ், சூரி, ஸ்ரீமன், பிரியா பவானிசங்கர், பானுபிரியா, மவுனிகா உள்பட பலர் நடிக்கிறார்கள். இமான் இசையமைக்கிறார். கிராமத்து பின்னணியில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் சூரி, பாட்டிகளோடு சேர்ந்து செல்பி எடுத்து அதனை அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அதில் ‘இந்த வெள்ளந்தி சிரிப்பும் விளையாடுற தண்டட்டியும் தமிழ் மண்ணுக்கே உரிய அடையாளம். செல்ல அப்பத்தாக்களோடு ஒரு ...
முதல் முறையாக கார்த்தியோடு கைகோர்க்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்!

முதல் முறையாக கார்த்தியோடு கைகோர்க்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்!

Latest News, Top Highlights
தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு கார்த்தி நடிக்கும் அடுத்த படம் ‘கடைகுட்டி சிங்கம்’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தற்போது இறுதிகட்டத்தை எட்டி வரும் நிலையில் கார்த்தி நடிக்கும் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் அறிமுக இயக்குனர் ரஜத். ரஜத், ஆர்.கண்ணனிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்த ரகுல் ப்ரீத்சிங் மறுபடியும் இந்தப் படத்தில் ஜோடி போடுகிறார். இந்தப் படத்துக்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கார்த்தி படத்துக்கு ஹாரிஸ் இசையமைப்பது இதுதான் முதல்முறை....
திரிஷாவுடன் இணையும் கார்த்தி

திரிஷாவுடன் இணையும் கார்த்தி

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் 15 வருடங்களை கடந்தும் அரை டஜன் படங்களுடன் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவர் நடிப்பில் ‘96’, ‘சதுரங்க வேட்டை-2’, ‘மோகினி’, ‘கர்ஜனை’ உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது. மேலும் நிவின் பாலி ஜோடியாக `ஹே ஜுட்’ என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவிலும் காலடி எடுத்து வைத்திருக்கிறார். இதில் ‘மோகினி’ என்ற படத்தை ஆர்.மாதேஷ் இயக்கியிருக்கிறார். ஹாரர் கலந்த திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. விவேக் மெர்வின் இசையில் பாடல்கள் பொங்கலை முன்னிட்டு வருகிற ஜனவரி 12-ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது. இந்த டிரைலரை நடிகர் கார்த்தி வெளியிட இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த படம் பிப்ரவரியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது....