Friday, February 7
Shadow

Tag: #காலா

ஒரேநாளில் ரஜினிக்கு மகிழ்ச்சி அளித்த மூன்று விஷயங்கள்

ஒரேநாளில் ரஜினிக்கு மகிழ்ச்சி அளித்த மூன்று விஷயங்கள்

Latest News, Top Highlights
ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காலா’. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்படத்தின் டீசர் நள்ளிரவு வெளியானது. இந்த டீசருக்கு ஏகோபித்த வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் பல சாதனைகளையும் படைத்து வருகிறது. டீசர் வெளியான மகிழ்ச்சியில் இருக்கும் ரஜினிக்கு மற்றொரு மகிழ்வான நிகழ்ச்சியும் நடைபெற்றிருக்கிறது. இன்று இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் சவுகார் பேட்டை, புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் ஹோலிப் பண்டிகையை மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், ரஜினி தனது வீட்டில் ஹோலிப் பண்டிகையை கொண்டாடி இருக்கிறார். ஹோலி கொண்டாடிய புகைப்படத்தை ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த், தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். மேலும் இன்று ரஜினியின் மனைவி, லதா ரஜினிகாந்த்த...
நாளை ரஜினி ரசிகர்களுக்கு செம ட்ரீட் காத்திருக்கு!

நாளை ரஜினி ரசிகர்களுக்கு செம ட்ரீட் காத்திருக்கு!

Latest News, Top Highlights
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘காலா’. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை பா.இரஞ்சித் இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் டீசர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் நாளை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஜத்குரு பூஜயஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்யாவின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ‘காலா’ டீசர் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நலையில், ஏற்கனவே ‘காலா’ டீசரை காண அதீத ஆவலுடன் இருக்கும் ரசிகர்கள், நாளை வெளியாகும் டீசரை காணும் உற்சாகத்தில் இருக்கின்றனர். கடந்த ஒரு வாரமாக காலா டீசர் டிரெண்டாகி வருகிறது. இந்நிலையில், நாளை டீசர் வெளியாகி யூடியூப்பில் இதுவரை படைத்த சாதனைகளை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காலா படத்தில் ரஜினி மும்பை கேங்ஸ்டராக வருகிறார். ‘இந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்த பாத்தது இல்ல...
காலா சண்டைக்காட்சி லீக்: படக்குழுவினர் அதிர்ச்சி

காலா சண்டைக்காட்சி லீக்: படக்குழுவினர் அதிர்ச்சி

Latest News, Top Highlights
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் `2.0' படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடியாததால் `காலா' படத்தை முன்னதாக வெளியிட படக்குழு திட்டமிட்டு சமீபத்தில் ரிலீஸ் தேதியையும் அறிவித்தது. அதன்படி `காலா' படம் வருகிற ஏப்ரல் 27-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. `கபாலி’ படத்திற்கு பிறகு ரஜினி - பா.இரஞ்சித் இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ‘காலா’ படத்திலும் ரஜினி வயதான தோற்றத்தில் நடித்திருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் சண்டைக்காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 14 நொடிகள் அடங்கிய அந்த வீடியோவில் தன்னை அடிக்க வரும் ஒருவரை, ரஜினி உதைப்பது போன்று அந்த வீடியோ முடிகிறது. அந்த வீடியோவின் பின்னணியில் தீப்பற்றி எரிவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றிருந...
இது என்னடா ரஜினிக்கு வந்த சோதனை – ரசிகர்கள் வருத்தம்

இது என்னடா ரஜினிக்கு வந்த சோதனை – ரசிகர்கள் வருத்தம்

Latest News, Top Highlights
ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காலா’. பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தை தனுஷ், தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் ரஜினி, தனுஷின் வொண்டர்பார் நிறுவனம், இயக்குனர் பா.இரஞ்சித் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. காலா என்ற கரிகாலன் படத்துக்கான கதை மற்றும் தலைப்பு தன்னுடையது என்றும், இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜசேகரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். 1996ம் ஆண்டு கரிகாலன் என்ற தலைப்பை தான் பதிவு செய்து வைத்திருப்பதாகவும், அனுமதில்லாமல் ‘காலா என்கிற கரிகாலன்’ என்ற தலைப்பில் படம் தயாரித்திருப்பதாகவும் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கை விசாரித்த நீதிம...
ரஜினியை வைத்து `முதல்வன்-2′ படத்தை இயக்கும் ஷங்கர்

ரஜினியை வைத்து `முதல்வன்-2′ படத்தை இயக்கும் ஷங்கர்

Latest News, Top Highlights
ரஜினிகாந்த் நடிப்பில் `2.0' படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள `காலா' படம் ஜுலை அல்லது ஆகஸ்ட்டில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு, தான் ஆன்மீக அரசியலில் ஈடுபடப் போவதாக தெரிவித்திருந்தார். விரைவில் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் கூறியிருக்கிறார். பின்னர் ரஜினி மக்கள் மன்றம் என்ற தலைப்பில் இணையதளம் ஒன்றை தொடங்கி அதில் மாற்றத்தை விரும்புகிறவர்களை இணையும்படி தெரிவித்திருந்தார். தற்போது வரை அதில் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இணைந்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி ரசிகர்கள் சந்திப்பின் போது, `காலா' படத்திற்கு என்ன நடக்கும் என்பதை நான் சொல்ல முடியாது. ஆண்டவன் கையில் தான் இருக்கிறது என்று கூறியிருந்தார...
அடுத்தடுத்து பிசியான காலா பட நாயகி

அடுத்தடுத்து பிசியான காலா பட நாயகி

Latest News, Top Highlights
மாடல் அழகியான சாக்‌ஷி அகர்வால், அட்லீ இயக்கிய ‘ராஜா ராணி’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் ‘யோகன்’ படத்தில் நாயகியாகவும் நடித்திருக்கிறார். தொடர்ந்து திருட்டு விசிடி, அத்யன், க க க போ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். அவரது நடிப்பில் அடுத்ததாக ஜெயிக்கிற குதிர படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. இதுதவிர பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘காலா’ படத்தில் முக்கிய கதாபாத்திலும் நடித்திருக்கிறார். ஹாலிவுட் படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இவ்வாறாக பிசியாக இருக்கும் சாக்ஷி அடுத்ததாக மலையாள சினிமாவிலும் காலடி எடுத்து வைத்திருக்கிறார். ‘ஓராயிரம் கினாக்களாள்’ என்ற படம் மூலம் மலையாள சினிமாவிலும் அறிமுகமாகிறார். அறிமுக இயக்குனரான ப்ரமோத் மோகன் இயக்கும் இந்தப் படத்தில் பிஜு மேனன் ஜோடியாக சாக்‌ஷி நடிக்கிறார். இப்படத்தில் இவரே சொ...