காதலை ஏற்க மறுத்த சாய் பல்லவி
மலையாளத்தில் வசூலை குவித்த ‘பிரேமம்’ படத்தில் நாயகியாக அறிமுகமான சாய் பல்லவி தமிழ், தெலுங்கு என பிசியாக நடித்து வருகிறார். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கரு படத்தில் நடித்து முடித்துள்ள இவர் அடுத்ததாக தனுஷ் ஜோடியாக மாரி-2 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்நிலையில், செல்வராகவன் இயக்கும் சூர்யாவின் 36-வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
சூர்யா படத்தில் நடிப்பது குறித்து சாய்பல்லவி பேசும் போது,
“சிறு வயதில் இருந்தே நடனத்தில் எனக்கு விருப்பம் அதிகம். படித்துக் கொண்டே நடனம் கற்றுக்கொண்டேன். பின்னர் சினிமாவில் நடிக்க ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் எனது தந்தைக்கு நான் சினிமாவில் நடிப்பது பிடிக்கவில்லை. எனது சினிமா வாழ்க்கைக்கு அவரே வில்லனாக இருந்தார். என்னை மருத்துவம் படிக்க ஜார்ஜியாவுக்கும் அனுப்பி விட்டார்.
இந்நிலையில் தான், பிரேமம் படத்தில் நடிக்கும் வாய்ப்...