Saturday, December 10
Shadow

Tag: தனுஷ்

தனுஷ்-மாரிசெல்வராஜ் படத்தின் இணையும் மலையாள நடிகை…!

Top Highlights
பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படத்தில் பிரபல மலையாள நடிகை ராசிசா விஜயன் இணைந்துள்ளார். பெயரிடப்படாத இந்த படத்தை தற்காலிகாமாக கர்ணன் என்று பெயரிடப்பட்டு ப்ரீ புரோடைக்சன் நடந்து வருகிறது. நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான விஐபி 2 படத்தை தயாரித்த கலைபுலி எஸ் தாணு இந்த ப்டத்ஹ்டை தயாரிக்கிறார். தற்போது நடிகர் தனுஷ் கார்த்தி சுப்புராஜ் இயக்கும் படத்தில் பிசியாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது....

தனுஷ் – கார்த்திக் சுப்புராஜ் இணையும் படத்தில் இணைகிறார் ஹாலிவுட் நடிகர்

Latest News, Top Highlights
நடிகர் தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் இணையும் படத்தில் ஹாலிவுட் நடிகர் ஒருவர் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த நடிகர் இந்த படத்தில் இணைந்துள்ளார். தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் இணையும் படத்தில் இணைகிறார் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ இணைவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்து இருந்து. இந்நிலையில் தயாரிப்பு நிறுவனமான ஓய் நாட் ஸ்டுடியோ நிறுவனம் இதை தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்த படத்தில் தனுஷ் தமிழ்நாட்டில் இருந்து வந்த கேங்ஸ்டாராக நடிப்பதாகவும், இவர் வெளிநாடுகளில் தொழில் செய்வதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளனர். இந்த படத்தில் ஹீரோயினாக ஐஸ்வர்யா லெட்சுமி நடிக்க, படத்திற்கான இசையை சந்தோஷ் நாராயணன் அமைத்துள்ளார்....

விருது கிடைச்சதும் குதிச்சதும் கிடையாது. கிடைக்கலன்னு துடிச்சதும் கிடையாது: நடிகர் தனுஷ் பேச்சு

Latest News, Top Highlights
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கியுள்ள படம் அசுரன். இப்படத்தை வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி S தாணு தயாரித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் தனுஷ் பேசுகையில், "அசுரன் படத்தைப் பொறுத்தவரைக்கும் நம்பிக்கை தான் முக்கியமா இருக்கு. வெற்றிமாறன் தான் இயக்குநர் என்று தாணு சாரிடம் சொன்னதும் அவர் கதையே கேட்காமல் ஓ.கே சொன்னார். அந்த நம்பிக்கை ரொம்ப முக்கியமானது. வெற்றிமாறன் நான் நடிப்பதற்கு நிறைய கண்டெண்ட் கொடுப்பார். இந்தக் கதாப்பாத்திரம் என் 36 வயதில் கிடைத்திருப்பது பெரிய கொடுப்பனை. வேற எந்த நடிகருக்கும் அது கிடைக்குமா என்று தெரியவில்லை. இந்தப்படம் ஒரு முக்கியமான படமாக கண்டிப்பாக இருக்கும் மிகவும் மகிழ்ச்சியுடன் நான் நடித்த படம் இது . வெற்றிமாறனும் அவர் டீமும் எனக்கு நல்ல ப்ளாட்பார்ம் கொடுத்திருக்காங்க. மஞ்சுவாரியாரின் டேலண்ட் எனக்...

தனுஷ் நடிக்கும் பாலிவுட் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

Latest News, Top Highlights
நடிகர் தனுஷ் சாரா அலிகான் மற்றும் ஹிருத்திக்ரோஷன் உடன் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஆனந்த் எல் ராய் இயக்க உள்ளார். இந்த படத்தில் நடக்கும் மற்ற நடிகர்கள் குறித்த தகவல்கள் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. நடிகர் தனுஷ் இந்த படத்திற்கான படப்பிடிப்பில் வரும் 2020ம் ஆண்டு இறுதியில் பங்கேற்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது....

தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியானது

Latest News, Top Highlights
துரை.செந்தில்குமார் இயக்கதில் நடிகர் தனுஷ் நடித்துவரும் படத்திற்கு ‘பட்டாஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் தற்போது துரை.செந்தில்குமார் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்தப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். துரை. செந்தில்குமார் ஏற்கனவே கொடி,எதிர்நீச்சல் உள்ளிட்ட படங்களை இயக்கியவர். நடிகை சினேகா புதுப்பேட்டை படத்துக்கு பிறகு தனுஷுடன் இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு குற்றாலம் பகுதிகளில் நடைபெற்றது. இந்த படத்திற்கு இதுவரை பெயரிடப்படவில்லை எனவே இப்படத்தை D39 என்று அழைத்துவந்தனர். இந்நிலையில், நடிகர் தனுஷ் தனது 36வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். அவரின் பிறந்தநாள் பரிசாக D39 படத்தின் ஃப்ரஸ்ட் லுக் போஸ்டரை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடுவதாக சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித...

நடிகர் தனுஷ் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
தனுஷ் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான அவரது முதற் திரைப்படமான துள்ளுவதோ இளமையில் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். பாரிய வெற்றி பெற்ற இத்திரைப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் செல்வராகவனின் இயக்கத்தில் நடித்த காதல் கொண்டேன் திரைப்படமும் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தின் மூலமாக, தனுஷ் ஒரு சிறந்த நடிகர் என்ற பாராட்டையும் பெற்றுக் கொண்டார். இதன் பிறகு வெளியான திருடா திருடி மற்றும் தேவதையைக் கண்டேன் போன்ற திரைப்படங்களின் மூலமாக தனது திரையுலக செல்வாக்கை நிலைநிறுத்திக் கொண்டார். இவர் ஆடுகளம் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக 2011ல் சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய விருதைப் பெற்றார். 3 என்ற தமிழ் திரைப்படத்திற்காக 2011 ஆம் ஆண்டு இறுதியில் இவர் பாடிய வொய் திஸ் கொலவெறி டி என்ற பாடல் யூடியூப் இணையதளத்தில் வெளியாகி சில மணி நேரங்களிலேயே அதிகம் ...

தனுஷ் நடிக்கும் அசுரன் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

Latest News, Top Highlights
வெற்றிமாறன், தனுஷ் கூட்டணியில் உருவாகும் ‘அசுரன்’ திரைப்படம். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் மஞ்சு வாரியார், ஷகீலா ஆகியோர் நடித்து வருகின்றனர். ‘வடசென்னை’ படத்தை தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷ் வெற்றிக்கூட்டணி நான்காவது முறையாக இணைந்துள்ள படம் தான் ‘அசுரன்’. விவசாயத்தை மையப்படுத்திய சாமனியனின் அரசியலை பதிவு செய்யும் படமாக ‘அசுரன்’ தயாராகி வருகிறது. தனுஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகை மஞ்சு வாரியார் மற்றும் ஷகீலா இருவரும் நடிக்கின்றனர். இந்த படத்தில் குந்தலகேசி, கக்கன் மற்றும் பூச்சி என்ற மூன்று வேடங்களில் நடிக்கிறார் தனுஷ். இவர்களுடன் தமிழ் திரைத்துறையில் மாற்று சினிமாவுக்கான நடிகர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள பசுபதி, ’ஆடுகளம்’ நரேன், பவன், யோகி பாபு, தலைவாசல் விஜய், குரு சோமசுந்தரம் ஆகியோர் நடிக...

வெளியானது தனுஷ் நடிக்கும் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு

Latest News, Top Highlights
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர் தனுஷ் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. மேலும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பது உறுதியாகியுள்ளது. இந்த படத்தைஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிக்க உள்ளது. இந்த படத்தின் டைட்டில், நடிக்கும் நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது ...
“பக்கிரி” படத்தின் டிரெய்லரை வெளியிட்டார் நடிகர் தனுஷ்

“பக்கிரி” படத்தின் டிரெய்லரை வெளியிட்டார் நடிகர் தனுஷ்

Latest News, Top Highlights
தனுஷ் நடிப்பில் வெளியாகிவுள்ள The Extraordinary Journey Of The Fakir திரைபடத்தின் தமிழ் டப்பிங்கான "பக்கிரி" படத்தின் டிரெய்லரை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் கென் ஸ்காட் இயக்கத்தில் தனுஷ், பர்காத் அப்தி, ஜெராடு ஜூக்னாத் ஆகியோர் பலரது நடிப்பில் உருவாகியுள்ள ஹாலிவுட் படம் தி எக்ஸ்டிராடினரி ஜர்னி ஆப் தி பகிர். பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ள இப்படம் தமிழில் பக்கிரி என்ற டைட்டிலில் உருவாகியுள்ளது. தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இப்படத்தில் தனுஷ், மேஜிக்மேனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   https://www.youtube.com/watch?v=H1WASu-s4eA  ...
அசுரனில் இரட்டை வேடத்தில் நடிக்கும் தனுஷ்

அசுரனில் இரட்டை வேடத்தில் நடிக்கும் தனுஷ்

Latest News, Top Highlights
அசுரன் படத்தில் தனுஷுக்கு அப்பா, மகன் என்று இரட்டை வேடங்கங்களில் நடித்துள்ளார். 60கள் மற்றும் 80-களில் நடக்கும் கதையில் நடிகர் தனுஸ் 45 வயசு கிராமத்தை சேர்ந்த நபராக நடித்துள்ளார். பூமணியின் ‘வெக்கை’ நாவலை அடிபடையாக கொண்ட இந்த படத்தில் மஞ்சுவாரியர், பசுபதி முதல் பாலாஜி, கருணாசின் மகன் கேன் மற்றும் பவன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். தயாரிப்பாளர் தாணுவின் வி கிரியேசன் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிராகஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கப்படும் என்று இயக்குனர் வெற்றிமாறன் உறுதி செய்துள்ளார். இது வடசென்னையின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்பதுடன், தற்போது ப்ரீ புரோடைக்சன் பணிகள் தொடங்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த படத்தின் பெரும்பாலான ஷூட்டிங்கை முடித்து கொடுத்து விட்ட நடிகர் தனுஷ், தற்போது 'கொடி' புகழ் ஆர் எஸ் துரை செந்தில்குமாரின் பெ...