தயாரிப்பாளர் கலாநிதி மாறன் பிறந்த தின பதிவு
கலாநிதி மாறன் சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் ஆவார். பூமாலை, குங்குமம் இதழ்களில் எழுதி ஊடக உலகில் முதலாக நுழைந்தார். இவர் இந்தியாவின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் 20ஆம் நிலையில் உள்ளார். ஃபோர்ப்ஸ் இதழ் குறிப்பிட்ட படி இவர் உலகிலேயே 349ஆம் பெரும் பணக்காரர் ஆவார்.
இவரின் தந்தையார் முரசொலி மாறன் தமிழகத்தில் அரசியல்வாதியாக பணியாற்றினார். தம்பி தயாநிதியும் முன்னாள் மத்திய ஜவுளித்துறை அமைச்சராவார்.
சென்னையில் உள்ள டான் பாஸ்கோ பள்ளியில் பயின்றார். லயோலா கல்லூரியில், இளங்கலை வணிகவியல் படிப்பை படித்து முடித்தார். பின்னர் அமெரிக்காவில் உள்ள ஸ்கரான்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பை முடித்தார்.
1991 ஆம் ஆண்டில், கலாநிதி மாறன் கர்நாடகத்தைச் சேர்ந்த காவேரி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். காவேரி மாறன் சன் டிவி நெட்வொர்க் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பதவி பெற்றுள்ளார். இவர்களுக்கு காவ்...