Friday, January 17
Shadow

Tag: தின பதிவு

நடிகை ரகசியா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
ரகசியா ஒரு இந்திய நடிகை, மாடல் மற்றும் நாடக கலைஞர். இவர் நடித்த படங்கள்: வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, தேவதையைக் கண்டேன், சுக்ரன், பிப்ரவரி 14, ரகளபுரம்

ஹாலிவுட் நடிகர் வில் சுமித் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
வில் ஸ்மித் (Will Smith) (பிறப்பு விலர்ட் கிரிஸ்தஃபர் ஸ்மித் ஜூனியர் புகழ்பெற்ற அமெரிக்க ராப் இசைப் பாடகரும் திரைப்பட நடிகரும் ஆவார். "உலகில் மிக வன்மையான நடிகர்" என்று அமெரிக்காவின் நியூஸ்வீக் இதழ் குறிப்பிட்ட வில் ஸ்மித் பல கிராமி விருதுகளை வென்றுள்ளார். ஒரு தங்கக் கோள் விருதுகள், இரண்டு ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ஃபிலடெல்ஃபியா, பென்சில்வேனியாவில் பிறந்து வளந்த வில் ஸ்மித் 1980களில் "ஃப்ரெஷ் பிரின்ஸ்" (Fresh Prince) என்ற பெயரில் ராப் பாடல்களை படைத்தார். இவரும் இவரின் நண்பர் டிஜே ஜாசி ஜெஃப்பும் சேர்ந்து ராப் உலகில் புகழுக்கு வந்தனர். 1988இல் இவர் முதலாம் ராப் கிராமி விருதை வென்றுள்ளார். 1990இல் ஃப்ரெஷ் பிரின்ஸ் அஃப் பெல் ஏர் என்ற தொலைக்காட்சித் தொடரில் முதலாக நடித்தார். 1990 முதல் 1996 வரை இக்காட்சி தொடர்ந்தது. இந்த தொடர் முடிந்து விட்டு இவர் தனியாக ராப் இசைத் தொகுப...

நடிகை ரிச்சா பலோட் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
ரிச்சா பலோட் இந்திய திரைப்பட நடிகையும் மாடல் அழகியுமாவார். இவர் இந்தி, தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். 1991 ஆம் ஆண்டு முதலாவதாக லம்மே என்ற இந்தி திரைப்படத்தில் நடித்தார். 2000 ஆம் ஆண்டு நுவ்வே கவாளி என்ற தொலுங்குப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிற்கு அறிமுகமான பலோட் சாஜாகான் திரைப்படம் மூலமாக தமிழுக்கு அறிமுகமானார்....

நடிகர் சூரி பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
சூரி இந்தியத் திரைப்பட நடிகராவார். 2009ல் வெளிவந்த வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் பரோட்டா போட்டியில் கலந்து கொள்வது போல இருந்த காட்சியில் நடித்துப் பிரபலமானதால் பரோட்டா சூரி என்று அறியப்படுகிறார். இவர் நடித்த படங்கள்: சங்கத்தமிழன், 8, வெண்ணிலா கபடி குழு 2, கொம்பு வச்ச சிங்கம்டா, கென்னடி கிளப், காஞ்சனா 3, நம்ம வீட்டுப் பிள்ளை, சர்பத், ஏஞ்சலினா, தேவராட்டம், சாமி 2, சீமராஜா, பக்கா, கடை குட்டி சிங்கம், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், சரவணன் இருக்க பயமேன், பொதுவாக எம் மனசு தங்கம், நெஞ்சில் துணிவிருந்தால், கதாநாயகன், இப்படை வெல்லும், எஸ் 3, தொண்டன், சங்கிலி புங்கிலி கதவ தொற, கத்திச்சண்டை, கிடாரி, ரஜினி முருகன், மாப்ள சிங்கம், அரண்மனை 2, கதகளி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மருது, இது நம்ம ஆளு, பசங்க 2, சகலகலா வல்லவன் அப்பாடக்கர், பாயும் புலி, கத்துக்குட்டி, வேதாளம், ரம்மி, வெள்ளைக்கார துரை...

நடிகை சுமலதா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
சுமலதா இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் இருநூறிற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்குத் திரைப்படங்கள், மலையாளத் திரைப்படங்கள், கன்னடத் திரைப்படங்கள் மற்றும் இந்தித் திரைப்படங்கள் ஆகியவற்றில் நடித்துள்ளார். இவர் தமிழ்நாட்டின் சென்னையில் 1963ல் பிறந்தவர். மலையாளத் திரைப்படத்துறையில் புகழ்பெற்ற இவர், கன்னடத் திரைப்பட நடிகரான அம்பரீஷை திருமணம் செய்து கொண்டார். தற்போது பெங்களூரில் வசிக்கின்றார். பாரதிய ஜனதா கட்சி ஆதரவுடன், சுயேட்சை வேட்பாளரான நடிகை சுமலதா, 2019 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், மண்டியா மக்களவைத் தொகுதியிலிருந்து வென்றார். இவர் நடித்த தமிழ் படங்கள்: கரையெல்லாம் செண்பகப்பூ, குடும்பம் ஒரு கதம்பம், முரட்டுக் காளை, ஒரு ஓடை நதியாகிறது...

பாடகர் செங்கோட்டை கங்காதரன் கிட்டப்பா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
எஸ். ஜி. கிட்டப்பா என்று அழைக்கப்பட்ட செங்கோட்டை கங்காதரன் கிட்டப்பா திரைப்படக் காலத்துக்கு முன்பே 1920களில் பிரபலமாயிருந்த ஒரு செவ்வியல் பாடகர் மற்றும் நாடகக் கலைஞர். இவர் திரைப்பட நடிகையும் பாடகியுமான கே. பி. சுந்தராம்பாளின் கணவர். கிட்டப்பா செங்கோட்டையில் பிறந்தவர். இயற்பெயர் இராமகிருஷ்ணன். அப்பொழுது செங்கோட்டை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்தது. இவரது தந்தையின் பெயர் கங்காதர அய்யர். தாயார் மீனாட்சி அம்மாள். இவருடன் பிறந்தோர் சுப்புலட்சுமி, சிவகாமி, அப்பாத்துரை, சுப்பையா, செல்லப்பா, சங்கரன், காசி, பிச்சம்மாள், நாராயணன் ஆகியோர். வீட்டிலுள்ளோர் செல்லமாக அழைத்த பெயர் கிட்டன். அதுவே கிட்டப்பா என்ற பெயராக நிலைத்து விட்டது. குடும்பத்தின் வறுமையினால் இவருக்கு முறையான கல்வி கிடைக்கவில்லை. ஆனால் சங்கரதாஸ் சுவாமிகள் ஆதரவால் இசையிலும் நாடகக்கலையிலும் நல்ல தேர்ச்சி பெறமுடிந்தது. மிகச் சிறி...

நடிகர் சரத் சக்சேனா பிறந்த தின பதிவு

Shooting Spot News & Gallerys
பாலிவுட் நடிகரான இவர் தமிழ், தெலுங்கு, மலையாள மொழி படங்களில் நடித்துள்ளார். 1970ல் திரையுலக வாழ்க்கையை துவக்கிய இவர் பெரும்பாலும் சபோர்த்டிங் கேரக்டர்களிலேயே நடித்து வந்தார். இவர் சிறந்த வில்லன் நடிகருக்கான பிலிம் பேர் விருதை வென்றுள்ளார். மும்பையில் வசித்து வரும் இவருக்கும் சோபனா என்ற மனைவியும், வீரா, விஷால் என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர் இந்தியில் 40 படங்களுக்கு மேல் நடித்திருப்பவர் சரத் சக்சேனா. அதோடு, தென்னிந்திய மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் நரசிம்மா, மும்பை எக்ஸ்பிரஸ் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். தற்போது ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் எஸ்-3 படத்திலும் நடித்துள்ளார் இவர் நடித்த தமிழ் படங்கள்: குணா, மன்னன், சுதந்திரம், நரசிம்மா, மும்பை எக்ஸ்பிரஸ், சிங்கம் 3, விவேகம்...

நடிகர் ரவிச்சந்திரன் மறைந்த தின பதிவு

Death Anniversary, Top Highlights
ரவிச்சந்திரன் தமிழ்த் திரைப்பட நடிகர். 1960கள்-70களில் கதாநாயகனாகவும் பின்னர் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தவர். திரைப்பட இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார். ரவிச்சந்திரனின் இயற்பெயர் ராமன். திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த 1951ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய பிறகு திருச்சியில் உள்ள புனித யோசப் கல்லூரியில் படித்தார் ரவிசந்திரனின் சொந்த ஊர் கரூர் அருகே உள்ள வாங்கல் கிராமம். இவரது இளமைக்காலம் மலேசியாவின் கோலாலம்பூரில் கழிந்தது. ரவிச்சந்திரனின் தந்தை பைரோஜி சீனிவாசன். மலேசியாவில் தமிழ் நேசன் என்ற பத்திரிகையில் ஆசிரியராக இருந்தார். கோலாலம்பூர் தமிழ் சங்கம் நடத்திய பள்ளியில் படித்தார். மலேசிய தமிழ் மாணவர்களில் முதல் மாணவராக தேர்வு பெற்ற ரவிச்சந்திரன், மருத்துவம் படிக்க விரும்பி இந்தியா வந்தார். திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார் சென்னையில் மருத்துவ படிப்பு படிக்க வந்தபோது இயக...

நடிகை ஸ்ரீவித்யா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
ஸ்ரீவித்யா ஒரு புகழ்பெற்ற தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். கர்நாடக இசை பாடகி எம். எல். வசந்தகுமாரியின் மகள். இவர் 1970களில் இருந்து 2000களின் தொடக்கம் வரை நடித்து வந்தார். 2003ஆம் ஆண்டு மார்புப் புற்று நோயினால் பாதிக்கப்பட்ட இவர் 2006, அக்டோபர் 19ஆம் தேதி இறந்தார். திரைப்படத் துறையில் தங்களது அழகிய முகத்தாலும், மந்தகாச மேனியாலும், கொஞ்சும் குரலாலும், குறையில்லாத நடிப்பாலும் ரசிகர்களைக் கட்டிப்போட்டு, கவர்ந்து, தங்கள் வசம் இழுத்துக் கொள்பவர்கள் நடிகைகள். இவை அனைத்தும் ஒன்றாகப் பெற்று கலைத் துறையில் கம்பீரமாக நடைபோட்டவர்கள் மிகச் சிலரே. அதில் ஸ்ரீவித்யாவிற்கு அப்படிச் சில பேர்களில் நம் மனதில் தனி இடம் கொடுத்து நிச்சயம் போற்றப்பட வேண்டிய ஒரு சிறந்த நடிகைதான் ஸ்ரீவித்யா. சகல அம்சங்களுடனும் நம் தமிழ்த்திரை உலகில் மட்டுமில்லாமல் தென்னக திரைஉலகம் முழுமையுமே ஆக்கிரமித்து தன் விஸ்வரூப நடிப்பால...

நடிகர் மனோஜ் குமார் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
மனோஜ் குமார், இந்தித் திரைப்பட நடிகர் ஆவார். இவர் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றுள்ளார். வோ கோன் தி, உப்கர், நீல் கமல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சில திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் பெற்ற விருதுகள்: சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது, பத்மஸ்ரீ விருது, பால்கே ரத்னா விருது, வாழ் நாள் சாதனையாளர் விருது...