சோனு நிகம் என்பவர் இந்தியத் திரைப்படப் பாடகர், இசையமைப்பாளர், இசைத் தயாரிப்பாளர், ஒலிப்பதிவாளர், நேரலை நிகழ்த்துநர், நடிகரும் ஆவார். இவர் இந்தி மற்றும் கன்னட மொழிப்பாடல்கள் அதிகம் பாடியுள்ளார். இது மட்டுமின்றி , குஜராத்தி, மராத்திய மொழி, துளுவம், ஒடியா மொழி, மைதிலி மொழி , அசாமிய மொழி, வங்காளம், தமிழ், தெலுங்கு, மலையாளம், , நேபாளி மொழி மற்றும் பல இந்திய மொழிகளிலும் பாடியுள்ளார். இவர் பல முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருதினைப் பெற்றுள்ளார்.
மேலும் பல இந்திய பாப் பாடல் தொகுதிகளில் இவர் நடித்து, வெளியிட்டுள்ளார். சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அதிக சம்பளம் பெறும் இந்தியப் பாடகர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.
நிகம் ஹரியானாவில் உள்ள பரீதாபாதுவில் ஜூலை 30, 1973 இல் பிறந்தார். இவருடைய தந்தை அகம் குமார் நிகம், தாய் சோபா நிகம். இவர் கயஸ்தா வகுப்பைச் சேர்ந்தவர். இவருடைய சகோதரி தீஷா நிகமும்...