Saturday, February 15
Shadow

Tag: பிரபல

பிரபல OTT தளத்தில் நேரடியாக வெளியாகும் ஜெயம் ரவியின் “பூமி”

Latest News, Top Highlights
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ஒன்று விரைவில் பிரபல OTT தளம் ஒன்றில் நேரடியாக பொங்கலுக்கு வெளியாக உள்ளதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது தியேட்டர்காரர்களை கோபப்படுத்தியுள்ளது. தற்போது இருக்கும் தமிழ் சினிமா நடிகர்களில் ஜெயம் ரவியின் படங்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வசூலை குவித்து வருகிறது. கடைசியாக அவரது நடிப்பில் வெளியான கோமாளி படம் வசூலில் சக்கைபோடு போட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் ஜெயம் ரவி நடிக்கும் 25வது படமான பூமி. இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. முன்னதாக ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் சமீபத்தில் வெளியான பூமி படத்தின் பாடல்கள் உணர்வுப்பூர்வமாக இருந்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் பூமி படத்தை நேரடியாக OTT தளத்தில் வெளியிடப்போவதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்து விட்டனர். இதை சற்றும் எதிர்பார்க்கா...

பிரபல நகைச்சுவை நடிகர் வேணு மாதவ் காலமானார்

Latest News, Top Highlights
தெலுங்கு சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகர் வேணு மாதவ், இவருக்கு வயது 39. உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த இவர் இன்று மதியம் உயிரிழந்தார். கடந்த மூன்று வருடங்களாக கல்லீரல் பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 1996-ல் 'சம்பிரதாயம்' என்ற படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்தார். இதுவரை 170 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழிலும் 'என்னவளே', 'காதல் சுகமானது' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 2016-ல், 'டாக்டர் பரமானந்தய்யா' ஸ்டூடண்ட்ஸ் என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் வேணு மாதவின் மறைவுக்கு தெலுங்கு ரசிகர்களும், திரையுலக நட்சத்திரங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்....

விஜய்-அஜித்தை விட அதிகம் சம்பளம் பெற்ற பிரபல நடிகர்…!

Latest News, Top Highlights
தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு தெலுங்கு பேசும் மாநிலங்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் ரசிகர்கள் உள்ளனர். அவரது படங்கள் இந்தியா மட்டுமின்றி தெலுங்கு மக்கள் அதிகம் வாழும் அமெரிக்கா, சவுதி போன்ற இடங்களிலும் வசூலை அள்ளுகின்றன. தற்போது மகேஷ் பாபு Sarileru Neekevvaru என்ற படத்தில் நடித்து வருகிறார். அதை அணில் ரவிப்புடி இயக்குகிறார். இந்த படத்திற்காக மகேஷ் பாபு 52 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறார் என கூறப்படுகிறது. இதில் ஆச்சர்யம் அளிக்கும் விஷயம் என்னவென்றால் மகேஷ் பாபு இதை பணமாக பெறப்போவதில்லை. படத்தின் non-theaterical உரிமையை மகேஷ் பாபு சம்பளத்திற்கு பதில் பெறுகிறார். அது தற்போது 52 கோடி ருபாய் அளவுக்கு விலைபோயுள்ளது என்று கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களான விஜய்-அஜித் கூட ஒரு படத்திற்கு இவ்வளவு சம்பளம் வாங்குவார்களா என்றால் கேள்விக்குறிதான். அடுத்த வருடம் பொங்கலுக்கு...

இந்தாண்டுக்கான சிறந்த ஆடை அணிபவர்களுக்கான விருதை வென்ற பிரபல ஜோடி…!

Latest News, Top Highlights
இந்தாண்டுக்கான சிறந்த ஆடை அணிபவர்களுக்கான விருதை பீப்பிள் இதழ் ஆண்டு தோறும் வழங்கி வருகிறது. இந்தாண்டுக்கான விருது அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டுக்கான விருதை நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவரும், இசையமைப்பாளருமான நிக் ஜோன்ஸ் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை ஜோடியாக பெறும் முதல் ஜோடி இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் லேடி கங்கா, ஜெஜிபர் லோபஸ், செரீனா வில்லியம் மற்றும் பிளவர் இடம் பிடித்துள்ளனர். நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவரும், இசையமைப்பாளருமான நிக் ஜோன்ஸ் இருவரும் கடந்த சில மாதங்களாகவே ப்ளவ வகையில் பிரபலமடைந்து வருகின்றனார் என்பது குறிப்பிடத்தக்கது....

பிரபல நடிகருடன் ஜோடி சேரும் ஸ்ரீதிவ்யா

Latest News, Top Highlights
நடிகர் ஜீவா உடன் சங்கிலி புங்கிலி கதவ திற படத்தில் நடித்த நடிகை ஸ்ரீதிவ்யா தற்போது பிரபல நடிகரான விஜய் ஆண்டனியுடன் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இயக்குனர் விஜய் மில்டன் இயக்க உள்ள மழை பிடிக்காத மனிதன் என்ற படத்தில் நடிகர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீதிவ்யா நடிக்க உள்ளார். இந்த படத்தை இன்பினிட்டி பிலிம் வென்சர் தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கான ஷூட்டிங் வரும் நவம்பர் மாதம் தொடங்க, படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தில் ஆடுகளம் நரேன் மற்றும் வித்யா பிரதீப் ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்க உள்ளனர்....

தல 60 படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகர்

Latest News, Top Highlights
நடிகர் அஜீத் நடிக்கும் தல 60 படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிக்கக் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து நடிகர் அஜீத் நடிக்கும் படத்திற்கு ’தல 60’ என்று தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ’நேர்கொண்ட பார்வை’யை இயக்கிய ஹெச்.வினோத் இயக்குகிறார். அந்தப் படத்தை தயாரித்த, போனி கபூர், ஜீ ஸ்டூடியோஸூடன் இணைந்து தயாரிக்கிறார். இதன் ஷூட்டிங் நவம்பரில் தொடங்குகிறது. பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட இருக்கிறது. அடுத்த வருடம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்தப் படத்தில் அஜீத்துக்கு வில்லனாக பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கன் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. தயாரிப் பாளர் போனி கபூர் அவரிடம் பேசிவருவதாகவும் ஆனால் அஜய்தேவ்கன் தரப்பில் இன்னும் பதிலளிக்கவில்லை என்றும் தெரிகிறது. கமலின் ’இந்தியன் 2’...

விஷாலின் இரும்புத்திரை-2 படத்தில் நடிக்கும் பிரபல நடிகை

Latest News, Top Highlights
நடிகர் விஷால், நடிக்கும் இருப்புத்திரை படத்தின் இரண்டாம் பாகத்தில், பிரபல நடிகையான ரெஜினா கசாண்ட்ரா-வை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு பி. எஸ். மித்ரன் இயக்கத்தில், விஷால் பிலிம் ஃபேக்டரி சார்பில் விஷாலின் நடிப்பு, தயாரிப்பில் வெளியான தமிழ்த்திரைப்படம் இரும்பு திரை. இந்த படத்தில் விஷால், சமந்தா, அர்ஜுன் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் யுவன் சங்கர் ராஜாவின் இசையில், ஜார்ஜ் சி. வில்லியம்சின் ஒளிப்பதிவில், ரூபனின் படத்தொகுப்பில் படமாக்கப்பட்டது. இத்திரைப்படம் தெலுங்கில் அபிமன்யடு என் பெயரில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இரும்பு திரை படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தை படத் தயாரிப்பாளர் எழில் இடம் பணியாற்றிய இயக்குனர் ஆனந்த் இயக்குகிறார். இயக்குனர் பிஎஸ் மித்திரன் இயகத்தில் இரும்...

விஜய் நடித்த படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க பிரபல இயக்குனர் திட்டம்

Latest News, Top Highlights
நடிகர் விஜய் தன்னுடைய கேரியரில் ஆரம்பகாலத்தில் பல வெற்றி தோல்விகளை கண்டிருக்கிறார். அப்படி 1997 வந்து அதிகம் ரசிகர்களை ஈர்த்த படம் லவ் டுடே. இந்த திரைப்படம் 1997-ல் இயக்குநர் பாலசேகரன் இயக்கப்பட்டதாகும். இத்திரைப்படத்தில் விஜய் சுவலட்சுமி, மந்திரா, ரகுவரன், கரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் தெலுங்கு மொழியில் பவன் கல்யாண் மற்றும் தேவயானி நடிப்பில் சுஸ்வாகதம் என்ற பெயரில் மீண்டும் எடுக்கப்பட்டது. வித்தியாசமான கிலைமாக்ஸ் கொண்ட இத்திரைப்படம் 100 நாள் ஒடி வெற்றிப்ப்பெற்றது. 22 வருடங்களுக்கு முன்பு வந்த விஜய் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க திட்டமிட்டுள்ளதாக இந்த படத்தின் இயக்குனர் பாலசேகரன் தெரிவித்துள்ளார். விஜய் தற்போது மிகபெரிய அளவிற்கு வளர்ந்துள்ளது பற்றி பேசிய அவர், 'அப்போதே அவர் பொறுமையடன் இருப்பார், மற்றவர்கள் பேசுவதை உன்னிப்பாக கேட்பார், ஆனால் கேமரா...

ஜெயம் ரவியின் ஜன கன மன படத்தில் இணைக்கிறார் பிரபல நடிகர்

Birthday, Top Highlights
நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த படம் ஜன கன மன என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் ஆக்ஷன்கிங் அர்ஜுன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராணுவ அதிகாரியாக ஜெயம் ரவி நடிக்கும் இந்த படத்தில், மிகவும் குழப்பம் ஏற்படுத்தும் வழக்கு ஒன்றை கையாளுகிறார். டாப்சி முக்கய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தை என்றென்றும் புன்னகை மற்றும் மனிதன் படங்களை இயக்கிய அஹமத் இயக்க உள்ளார். இந்த படம் குறித்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது....

சூப்பர்ஸ்டாரின் அடுத்த படத்தை இயக்கும் பிரபல இயக்குனர்

Latest News, Top Highlights
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். அது முடித்தபிறகு ரஜினி சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் என தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் தற்போது ரஜினியின் அடுத்த படம் அவருடன் இல்லை, கே.எஸ்.ரவிக்குமார் உடன் தான் தான் என சினிமா வட்டாரத்தில் பரபரப்பான செய்தி பரவி வருகிறது. தாணு தான் இந்த படத்தை தயாரிக்கப்போகிறார் என்றும் கூறப்படுகிறது....