Thursday, April 25
Shadow

Tag: பிரபல

ஆர்டிக்கல் 15-ல் ரீமேக்கில் ஆர்வம் காட்டும் பிரபல நடிகர்

Latest News, Top Highlights
ஹிந்தி நடிகர் ஆயுஷ்மான் குர்னா நடிப்பில்வெளியான அந்தஹதுன் (Andhadhun) படத்தின் ரீமேக் உரிமையை பெற்றுள்ள நடிகர் தனுஷ், இதை தொடர்ந்து ஆர்டிக்கல் 15 படத்தின் ரீமேக் உரிமையை பெறுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். இரண்டு படங்களை ரீமேக் செய்ய, இந்த படங்களை தயாரித்த ஜி ஸ்டுடியோஸ் நிறுவத்தின் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. தற்போது நடிகர் தனுஷ், இயக்குனர் செந்தில் குமாரின் பட்டாஸ் மற்றும் வெற்றி மாறன் இயக்கத்தில் அசுரன் படங்களில் நடித்து வருகிறார்....

இப்போதைக்கு கல்யாணம் இல்லை: பிரபல நடிகை பேட்டி

Latest News, Top Highlights
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என நான்கு மொழிகளிலும் ஹிட் படங்களில் நடித்து கலக்கியவர் நடிகை கௌசல்யா. இவரது காலத்தில் நடித்த நடிகைகளுக்கு எல்லாம் திருமணம் முடிந்துவிட்டது, இவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. காரணம் கேட்டால் ஒரு பேட்டியில், கல்யாணம் செய்துகொண்டு கணவர், குழந்தை என குட்டி வட்டத்திற்குள் வாழ விருப்பமில்லை. எல்லோருக்காகவும் இருக்கவே விரும்புகிறேன் அதன் முயற்சியில் தான் இப்போது இருக்கிறேன். சிங்கிள் வாழ்க்கையும் நன்றாக இருக்கிறது அதனால் இப்போதைக்கு கல்யாணம் என்ற யோசனையே இல்லை என பேசியுள்ளார்....

பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த பிரபல நடிகர்

Latest News, Top Highlights
நடிகர் பார்த்திபன் இந்தப் படத்தில் பெரிய பழுவேட்டையராக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இயக்குனர் மணிரத்னம் இயக்கும் இந்த படத்தில் விக்ரம் ஆதித்ய கரிகாலனாகவும், கார்த்தி வந்தியத்தேவனாகவும், ஐஸ்வர்யா ராய் நந்தினியாகவும், கீர்த்தி சுரேஷ் குந்தவையாகவும், ஜெயம் ரவி ராஜ ராஜ சோழனாகவும் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் நடிகர் பார்த்திபனும் இந்தப் படத்தில் இணைந்திருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில் இயக்குநர் மணிரத்னத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டிருக்கும் பார்த்திபன், “படத்தைப் பார்த்தாலே பொருள் விளங்கும்,திரு மணிரத்னம் படைப்பில்-என் பங்களிப்பில் பெருங்களிப்பில்' பொன்னியின் செல்வன்'. அப்படத்திற்காக Spelling (ஸ்பெல்லிங்) மட்டுமே கற்றிருந்த நான் Swimming (ஸ்விம்மிங்) கற்கிறேன்!” என்று கூறியுள்ளார்....

நேர்கொண்ட பார்வை மலேசிய உரிமையை வென்ற பிரபல நிறுவனம்

Latest News, Top Highlights
நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இன்னும் சில தினங்களில் நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது, இந்நிலையில் இப்படத்தை தமிழகத்தில் முன்னணி நிறுவனம் வாங்கி வெளியிடுவதாக கூறப்படுகின்றது. இப்படம் ஆகஸ்ட் 8ம் தேதி இதுவரை வந்த தமிழ் படங்களிலேயே தமிழகத்தில் அதிக திரையரங்குகளில் ரிலிஸ் ஆகவுள்ளதாக கூறப்படுகின்றது. அப்படி ரிலிஸானால், கண்டிப்பாக இவை பெரும் சாதனை தான், அஜித் திரைப்பயணத்தில் இது ஒரு மைல்கல்லாக இருக்கும் என தெரிகின்றது. இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படத்தின் மலேசிய வெளியிட்டு உரிமையை எம்எஸ்கே பிலிம்ஸ் பெற்றுள்ளது....

தளபதி 64 படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல மலையாள நடிகர்

Latest News, Top Highlights
தளபதி 64 படத்தில் பிரபல மலையாள நடிகர் ஆண்டனி வர்கிஸ் வில்லனாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய்யின் 64-வது படமான இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் செப்டம்பர் மாதத்தில் தொடங்க இருக்கிறது. மேலும், இந்தப் படத்தை 2020-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தளபதி 63 படத்தின் பணிகளை முடித்துக் கொண்ட பிறகு செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது வாரம் முதல் தளபதி 64 படப்பிடிப்பு பணிகளைத் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளார். ஒளிப்பதிவு பணிகளை சத்யன் சூர்யனும், படத்தொகுப்பு பணிகளை பிலோமின் ராஜும் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படப்பிடிப்பு தொடங்கியவுடன் படத்தின் டைட்டில் தொடர்பான அறிவிப்ப...

ஹீரோவாக நடிக்கும் பிரபல காமடி நடிகர்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் சூரி.  வருத்தப்படாத வாலிபர் சங்கம், சீமராஜா உள்ளிட்ட படங்களில் சிவகார்த்திகேயனுடனும், , என தமிழ் சினிமாவின் மிக பெரிய விஜய், சூர்யா படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார் சூரி. துவக்கத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்துவந்த இவர் வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.  கொஞ்சம் கொஞ்சமாக வடிவேலு சினிமாவை விட்டு ஒதுங்கிய பிறகு அவரது இடத்திற்கு வந்துவிட்டார் பரோட்டா சூரி. பிரலமான நகைச்சுவை நடிகர்கள் ஹீரோ வாக மாறுவது தொடர்ந்து சினிமாவில் நடைபெற்று வருகிறது.விவேக்,வடிவேலு,வரிசையில் தற்போது சூரி நடிகராக புதிய அவதாரம் ஒன்றை எடுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வெகுநாட்களாக இந்த செய்தி உலவி வரும் நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் அசுரன் படம் முடிவடைந்ததையடுத்து, தற்போது சூரியை ஹீரோவாக ...

கென்னடி கிளப் படத்தின் மதுரை விநியோக உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

Latest News, Top Highlights
பெண்கள் கபடி அணியை கதைக்களமாக கொண்டு கென்னடி கிளப் திரைப்படம் உருவாகி வருகிறது. இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் பாரதிராஜா, சசிகுமார், காயத்ரி, சூரி, சௌம்யா மீனாக்ஷி ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கென்னடி கிளப். இமான் இசையமைத்துள்ள இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. அண்மையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள கபடி கபடி என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. கென்னடி கிளப் படத்தின் மதுரை விநியோக உரிமத்தை விநியோகஸ்தரான ராஜ மன்னரின் கந்தசாமி ஆர்ட்ஸ் சென்டர் பெற்றுள்ளது....

இந்தியன் 2-வில் இணைந்த பிரபல நடிகைகள்

Latest News, Top Highlights
https://youtu.be/nwl5bM6Rzkc ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. ஆனால் தொடங்கிய வேகத்திலேயே படப்பிடிப்பு நின்றுபோனது. கமல் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்ததால் படப்பிடிப்பு தாமதமாகிறது என்று கூறப்பட்டது. தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பிலிருந்து பின்வாங்குவதாகவும் ஷங்கர் வேறு தயாரிப்பாளர்களை அணுகிவருவதாகவும் திரைத்துறையில் பேசப்பட்டது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்டு மாதம் தொடங்க உள்ளது. முதல் பாகத்தில் மனிஷா கொய்ராலா, சுகன்யா, ஊர்மிளா ஆகிய மூன்று கதாநாயகிகள் நடித்திருந்தனர். இந்த படத்தில் காஜல் அகர்வால் நடிப்பது ஏற்கனவே உறுதியாகி உள்ளது. இந்நிலையில், கனா, வடசென்னை, காக்கா முட்டை, ஹவுஸ் ஓனர், திருடன் போலீஸ், அட்டகத்தி, ஹலோ நான் பேய் பேசுறேன் உள்ளிட படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேசும், மான்ஸ்டர், கடைக்குட்டி ச...
இந்திய அணி தோல்வி குறித்து கருத்து  வெளியிட்ட பிரபல நடிகர்

இந்திய அணி தோல்வி குறித்து கருத்து வெளியிட்ட பிரபல நடிகர்

Latest News, Top Highlights
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது குறித்து பல்வேறு சினிமா பிரபலங்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்துள்ளனர். இந்த வரிசையில் லேட்டஸ்டாக சேர்ந்து இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தீவிர கிரிக்கெட் ரசிகர் என்பதுடன், தன் தயாரித்து வெளியிட்ட கனா படத்தில் கிரிக்கெட் பயிற்சியாளராகவும் நடித்துள்ளார். தனது ஆர்வம் காரணமாக இவர் இந்திய அணி விளையாடும் உலகக்கோப்பை போட்டி ஒன்றை இங்கிலாந்து சென்று பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று இந்திய அணி போராடி தோற்றது. இதுக்குறித்து சிவகார்த்திகேயன் தன் டுவிட்டர் பக்கத்தில் உருக்கமாக கருத்து தெரிவித்துள்ளார்,...
ஹிட் இயக்குனருடன் இணைந்த பிரபல நடிகை

ஹிட் இயக்குனருடன் இணைந்த பிரபல நடிகை

Latest News, Top Highlights
நடிகை சாய் பல்லவி தற்போது ராணா நடிக்கும் ஒரு படத்தில் நடிக்கின்றார்.  இதில் இவர் நக்ஸல்-ஆக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சாய் பல்லவி மேலும் ஒரு தெலுங்கு படத்தில் கமிட் ஆகியுள்ளார். இப்படத்தை Fidaa என்ற மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்த சேகர் தான் இயக்கவுள்ளார், இதில் ஹீரோவாக நாகசைதன்யா நடிக்கின்றார். சேகரின் Fidaa-விலும் சாய் பல்லவி தான் ஹீரோயின், அந்த படம் அவருக்கு மிகப்பெரும் திருப்பத்தை தெலுங்கில் தந்தது குறிப்பிடத்தக்கது....