Tuesday, April 21
Shadow

Tag: #யுவன் ஷங்கர் ராஜா

தனது அடுத்த படத்தின் முக்கிய தகவலை வெளியிட்ட தனுஷ்

தனது அடுத்த படத்தின் முக்கிய தகவலை வெளியிட்ட தனுஷ்

Latest News, Top Highlights
`வடசென்னை', `எனை நோக்கி பாயும் தோட்டா' படங்களின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், `மாரி-2' படத்தின் படப்பிடிப்பும் இன்று துவங்கியிருப்பதாக தனுஷ் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகும் `மாரி-2' படத்தில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். கிருஷ்ணாவும், வரலட்சுமி சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வில்லனாக மலையாள நடிகர் டோவினோ தாமஸ் நடிக்கிறார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்திற்கான பூஜை கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. சமீபத்தில் இந்த படத்தில் ஒரு பாடலை இளையராஜா பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியிருக்கிறது....
படம் வெற்றி தான்… ஆனால் நான் சந்தோஷமாக இல்லை – புலம்பும் ‘பலூன்’ பட இயக்குநர்

படம் வெற்றி தான்… ஆனால் நான் சந்தோஷமாக இல்லை – புலம்பும் ‘பலூன்’ பட இயக்குநர்

Latest News, Top Highlights
ஜெய், அஞ்சலி, ஜனனி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'பலூன்'. சினிஷ் இயக்கியிருந்த இப்படம் கடந்த டிசம்பர் 29-ம் தேதி வெளியானது. இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்கள். ஆனால் படத்தின் இயக்குநர் மட்டும் வருத்தம் தெரிவித்துள்ளார். இயக்குனர் சினிஷ் இதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ‘பலூன்’ வெற்றி... தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி... இருந்தாலும் தனிப்பட்ட முறையில் இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் சூழலில் நான் இல்லை. சிலரது தேவையற்ற தலையீடு எனது உழைப்பை வீணாக்கிவிட்டது. திரைத்துறையின் தொழில் நடைமுறை தெரியாத சிலரால் பலூன் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. தாமதத்தால் படத்தின் பட்ஜெட் அதிகரித்தது. இதனால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஏற்பட்ட பொருள் நஷ்டத்திற்கு யாரோ ஒருவரை ...
முடிவுக்கு வந்த விஷாலின் `இரும்புத்திரை’

முடிவுக்கு வந்த விஷாலின் `இரும்புத்திரை’

Latest News, Top Highlights
`துப்பறிவாளன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷால் அடுத்ததாக, பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் `இரும்புத்திரை' படத்திலும், லிங்குசாமி இயக்கத்தில் `சண்டக்கோழி-2' படத்திலும் நடித்து வருகிறார். இதில் விஷால் ஜோடியாக சமந்தா நடித்திருக்கிறார். ஆக்சன் கிங் அர்ஜுன் வில்லன் கதாபாத்திரத்திலும், ரோபோ ஷங்கர், வின்சன்ட் அசோகன், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிதுள்ளனர். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளிட்டு விழா ஜனவரி 6-ல் மலேசியாவில் நடைபெற உள்ளது. ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்துள்ளார். வருகிற ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்த...
‘பலூன்’ படத்தில் எனது கிளவுன் வேடம் நிச்சயம் ரசிக்கப்படும் – நடிகர் ஜெய்

‘பலூன்’ படத்தில் எனது கிளவுன் வேடம் நிச்சயம் ரசிக்கப்படும் – நடிகர் ஜெய்

Latest News, Top Highlights
சுய விளம்பரங்கள் அவசியம் என கருதப்படும் சினிமாத்துறையில் ஒரு சில நடிகர்களே தாங்கள் பேசுவதை விட தங்கள் படங்கள் பேசுவதையே விரும்புவார்கள். அப்படியான ஒரு நடிகர் தான் ஜெய். அவரது அடுத்த படமான 'பலூன்' படம் வரும் டிசம்பர் 29 ஆம் தேதி பிரம்மாண்டமாக ரிலீஸாகவுள்ளது. இப்படத்தை சினீஷ் இயக்க, '70mm Entertainment' நிறுவனம் தயாரித்துள்ளது. 'பலூன்' படத்தை ''Auraa Cinemas' தமிழகமெங்கும் ரிலீஸ் செய்யவுள்ளது. இப்படத்தில் மூன்று வித்தயாசமான கதாபாத்திரங்களில் நடிக்கும் ஜெய்க்கு ஜோடியாக அஞ்சலி மற்றும் ஜனனி ஐயர் நடித்துள்ளனர். 'பலூன்' படம் குறித்து ஜெய் பேசுகையில், '' 'பலூன்' தான் எனது முதல் திகில் படம். இதற்கு முன்பு நிறைய திகில் படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவை சுவாரஸ்யமானதாக இல்லாததால் மறுத்துவிட்டேன். இந்த 'பலூன்' பட கதையை இயக்குனர் சினிஷ் என்னிடம் சொன்னபொழுது, அது என்னை மிகவ...
`மாரி-2′ படக்குழுவில் இணைந்த மற்றொரு முன்னணி நடிகை

`மாரி-2′ படக்குழுவில் இணைந்த மற்றொரு முன்னணி நடிகை

Latest News, Top Highlights
வெற்றிமாறன் இயக்கத்தில் `வடசென்னை', கவுதம் மேனன் இயக்கத்தில் `எனை நோக்கி பாயும் தோட்டா' என ஒரே நேரத்தில் இரு படங்களில் நடித்து வருகிறார் தனுஷ். இந்த இரு படங்களை முடித்த பிறகு அடுத்ததாக பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி-2' படத்தில் நடிக்கவிருக்கிறார். இதில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி ஒப்பந்தமாகி இருந்த நிலையில், நடிகை வரலட்சுமியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் வில்லனாக மலையாள நடிகர் டோவினோ தாமசும், முக்கிய கதாபாத்திரத்தில் கிருஷ்ணாவும் நடிக்கின்றனர். தனுஷ் அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 10 வருடங்களுக்கு பிறகு தனுஷ் படத்திற்கு அவரது நண்பர் யுவன் ஷங்கர் ராஜா இசைமைக்கிறார் என்பது கு...
தனது நீண்டநாள் நண்பருடன் மீண்டும் இணைந்த தனுஷ்

தனது நீண்டநாள் நண்பருடன் மீண்டும் இணைந்த தனுஷ்

Latest News, Top Highlights
வெற்றிமாறன் இயக்கத்தில் `வடசென்னை', கவுதம் மேனன் இயக்கத்தில் `எனை நோக்கி பாயும் தோட்டா' என ஒரே நேரத்தில் இரு படங்களில் நடித்து வருகிறார் தனுஷ். இந்த இரு படங்களை முடித்த பிறகு அடுத்ததாக பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி-2' படத்தில் நடிக்கவிருக்கிறார். இதில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவியும், வில்லனாக மலையாள நடிகர் டோவினோ தாமசும் நடிக்கிறார்கள். கிருஷ்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை தனுஷ் அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார். மாரி படத்தை தொடர்ந்து இந்த பாகத்திற்கும் அனிருத்தே இசைமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாரி-2 படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜாவை படக்குழுவினர் ஒப்பந்தம் செய்துள்ளனர். 10 வருடங்களுக்கு பிறகு தனுஷ் படத்திற்கு அவரது நண்பர் யுவன் ஷங்கர் ராஜா இசைமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது....
ஜெய்யின் பலூனுக்கு கிடைத்த வரவேற்பு: சாட்டிலைட் உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்

ஜெய்யின் பலூனுக்கு கிடைத்த வரவேற்பு: சாட்டிலைட் உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்

Latest News, Top Highlights
புதுமுக இயக்குநர் சினிஷ் இயக்கியிருக்கும் படம் 'பலூன்'. ஜெய் - அஞ்சலி - ஜனனி ஐயர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் சாந்தினி தமிழரசன், யோகி பாபு, கார்த்திக் யோகி, ராஜ் தருண் உள்ளிட்ட பலரும் முக்கிய கதபாத்திரத்தில் நடித்துள்ளனர். காதல் கலந்த திகில் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஜெய் 3 வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். யுவன்ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. '70 எம் எம்' நிறுவனத்தின் சார்பில் டி.என்.அருண் பாலாஜி - கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் 'பார்மர்ஸ் மாஸ்டர் பிளான்' நிறுவனம் சார்பில் திலீப் சுப்பராயன் இணைந்து தயாரித்துள்ள இந்த படம் வருகிற டிசம்பர் 29-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் திரையரங்கு உரிமையை ஆரா சினிமாஸ் கைப்பற்றியிருந்த நிலையில், தொலைக்காட்சி உரிமையை (Satellite Rights...