Tuesday, February 11
Shadow

Tag: #விஜய்சேதுபதி

மாபெரும் கூட்டணியுடன் சீனாவை குறிவைக்கும் நயன்தாரா

மாபெரும் கூட்டணியுடன் சீனாவை குறிவைக்கும் நயன்தாரா

Latest News, Top Highlights
தற்போதைய மார்கெட்டை பொறுத்தவரை இந்திய படங்களை வெளிநாடுகளிலும் திரையிடுவதில் தயாரிப்பாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். ரஜினி படங்கள் ஜப்பான், மலேசியா, சிங்கப்பூரில் அதிக வரவேற்பை பெறுகின்றன. ராஜமவுலி இயக்கத்தில் பெரிய பட்ஜெட்டில் உருவாகிய ‘பாகுபலி’, ‘பாகுபலி-2’ படங்கள் உலக அளவில் பெரும் வசூலை குவித்தன. இந்தியில் உருவான ‘டங்கல்’ படம் சீனாவில் அசைக்க முடியாத சாதனையை படைத்துள்ளது. அதேபோல் அமீர்கானின் ‘சீக்ரெட் சூப்பர் ஸ்டார்ஸ்’, சல்மான் கானின் ‘பஜ்ரங்கி பைஜான்’ படங்கள் சீனாவில் திரையிடப்பட்டன. இந்த படங்களுக்கு அங்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், தெலுங்கில் சிரஞ்சீவி - நயன்தாரா நடிக்கும் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தையும் சீனாவில் அதிக திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் இப்போதே தொடங்கியிக்கிறது. இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், முக்கிய வே...
காதலர் தினத்தில் சிறப்பு விருந்து கொடுக்கும் விஜய் சேதுபதி

காதலர் தினத்தில் சிறப்பு விருந்து கொடுக்கும் விஜய் சேதுபதி

Latest News, Top Highlights
‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் சேதுபதி – இயக்குநர் கோகுல் கைகோர்த்துள்ள படம் ‘ஜுங்கா’. ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ சூப்பர் ஹிட் என்பதால் இந்த படத்தின் அறிவிப்பு வந்த நாளிலிருந்தே ரசிகர்களின் எக்ஸ்பெக்டேஷன் லெவல் உச்சத்தில் உள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சாயீஷா நடித்துள்ளார். மேலும், காமெடியில் கலக்க யோகி பாபு நடிக்கிறார். சித்தார்த் விபின் இசையமைத்து வரும் இதற்கு டட்லி ஒளிப்பதிவு செய்து வருகிறார், இதனை ‘ஏ&பி குருப்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து விஜய் சேதுபதியே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரிக்கிறாராம். இதன் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில், வெளியிடப்பட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, படத்தின் ஆடியோ ரைட்ஸை ‘திங்க் மிய...
நாகரீகம் தெரியாத விஜயேந்திரர்: விஜய்சேதுபதி

நாகரீகம் தெரியாத விஜயேந்திரர்: விஜய்சேதுபதி

Latest News, Top Highlights
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத விஜயேந்திரர் மீது பலரும் தங்களது எதிர்ப்பையும், கருத்தையும் கூறி வருகின்றனர். ஆனால் அவர் தேசியகீதம் ஒலிக்கும்போது மட்டும் எழுந்துநின்று மரியாதை செலுத்தியிருக்கிறார். இந்த சர்ச்சை குறித்து சில அரசியல் பிரபலங்கள், நடிகர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த நிலையில் திருச்சியில் ஒரு விழாவில் பங்கேற்ற நடிகர் விஜய் சேதுபதியிடம் விஜயேந்திரர் குறித்து கேட்டபோது, ‘‘தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்தபோது எழுந்து நின்று மரியாதை செய்யாத விஜயேந்திரருக்கு நாகரீகம் தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்....
விஜய் சேதுபதி படத்திற்கு சிக்கல்

விஜய் சேதுபதி படத்திற்கு சிக்கல்

Latest News, Top Highlights
விஜய் சேதுபதி நடிப்பில் 25-வது படமான 'சீதக்காதி' பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேடைக் கலைஞர் ஒருவரின் வாழ்க்கைப் பயணமாக இக்கதை அமைந்திருக்கும் எனக் கூறப்படுகிறது. 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தின் இயக்குநர் பாலாஜி தரணிதரன் மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து படத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். பல்வேறு நாயகிகள் கவுரவ தோற்றத்தில் நடித்துவரும் இப்படத்தில் இயக்குநர் மகேந்திரன், அர்ச்சனா, மெளலி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்கள். ஒளிப்பதிவாளராக சரஸ்காந்த், இசையமைப்பாளராக கோவிந்த் பி.மேனன், எடிட்டராக கோவிந்த்ராஜ் உள்ளிட்ட பலர் பணிபுரிந்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி 16 அன்று விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு, பாலாஜி தரணிதரன் 'சீதக்காதி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்...
ஜனவரி 6ம் தேதி விஜய் சேதுபதிக்கு முக்கியமான நாள்

ஜனவரி 6ம் தேதி விஜய் சேதுபதிக்கு முக்கியமான நாள்

Latest News, Top Highlights
விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’. ஆறுமுக குமார் இயக்கி வரும் இப்படத்தில் ஹீரோயினாக நிகரிகா நடித்துள்ளார். இதில் விஜய் சேதுபதி பழங்குடி இனத் தலைவராகவும் பல வித்தியாசமான கெட்டப்புகளிலும் நடித்துள்ளார். சமீபத்தில், படக்குழுவினர் வெளியிட்ட பர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர், டீசர் மற்றும் சிங்கிள் டிராக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களை ஜனவரி 6ம் தேதி மலேசியாவில் நடக்க இருக்கும் நட்சத்திர கலைவிழாவில் வெளியிட இருக்கிறார்கள். மேலும் அதே விழாவில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் மற்றொரு படமான ‘ஜுங்கா’ படத்தின் டைட்டில் டீசரையும் வெளியிட இருக்கிறார்கள். இப்படத்தை கோகுல் இயக்கி வருகிறார். ஒரே நாளில் விஜய் சேதுபதி படங்களின் ஆடியோ மற்றும் டைட்டில் டீசர் வெளியாவது ரசிகர்களுக்கு இரட்டை ...