Wednesday, February 12
Shadow

Tag: வெளியானது

அருண்விஜய் நடிக்கும் புதிய படத்தின் தகவல் வெளியீடு

Latest News, Top Highlights
நடிகர் அருண்விஜய் புதிய படம் ஒன்றில் நடிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். செக்கச்சிவந்த வானம், தடம் மற்றும் சாஹோ படங்களில் நடித்துள்ள நடிகர் அருண் விஜய், தற்போது அக்னி சிறகுகள் படத்தில் நடிகர் விஜய் ஆண்டனியுடன் இணைந்து நடித்து வருகிறார். இதுமட்டுமின்றி துருவங்கள் பதினாறு படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாபியா படத்தில் நடித்து, அந்த படத்தின் சூட்டிங்' நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில், லேட்டஸ்ட் அப்டேட்டாக, தான் தனது 30-வது படத்தில் நடிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளதாக அருண்விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். இந்த படத்தை ஹரிதாஸ் படத்தின் இயக்கிய ஜிஎன்ஆர் குமாரவேலன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுமட்டுமின்றி இந்த அருண்விஜயின் தந்தை விஜயகுமார் நடிக்க உள்ளதாகவும் தெரிகிறது....

தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியானது

Latest News, Top Highlights
துரை.செந்தில்குமார் இயக்கதில் நடிகர் தனுஷ் நடித்துவரும் படத்திற்கு ‘பட்டாஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் தற்போது துரை.செந்தில்குமார் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்தப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். துரை. செந்தில்குமார் ஏற்கனவே கொடி,எதிர்நீச்சல் உள்ளிட்ட படங்களை இயக்கியவர். நடிகை சினேகா புதுப்பேட்டை படத்துக்கு பிறகு தனுஷுடன் இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு குற்றாலம் பகுதிகளில் நடைபெற்றது. இந்த படத்திற்கு இதுவரை பெயரிடப்படவில்லை எனவே இப்படத்தை D39 என்று அழைத்துவந்தனர். இந்நிலையில், நடிகர் தனுஷ் தனது 36வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். அவரின் பிறந்தநாள் பரிசாக D39 படத்தின் ஃப்ரஸ்ட் லுக் போஸ்டரை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடுவதாக சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்த...

வெளியானது தனுஷ் நடிக்கும் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு

Latest News, Top Highlights
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர் தனுஷ் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. மேலும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பது உறுதியாகியுள்ளது. இந்த படத்தைஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிக்க உள்ளது. இந்த படத்தின் டைட்டில், நடிக்கும் நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது...

வெளியானது சமந்தாவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு

Latest News, Top Highlights
நடிகை சமந்தா நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சூப்பர் டீலக்ஸ், மஞ்சுளா மற்றும் ஒ பேய் போன்ற படங்களில் நடிகை சமந்தா நடித்துள்ளார். இந்நிலையில், அவரது அடுத்த படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை கோபி நாயினார் இயக்க தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை....
வெளியானது  ‘தலைவி’ படப்பிடிப்பு குறித்த லேட்டஸ்ட் தகவல்

வெளியானது ‘தலைவி’ படப்பிடிப்பு குறித்த லேட்டஸ்ட் தகவல்

Latest News, Top Highlights
'தலைவி' படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்துக்கான உரிமையை அவரது அண்ணன் மகன் தீபக்கிடம் முறையாக தடையில்லா சான்றிதழும் பெற்றுள்ளது படக்குழு. இதில் ஜெ.வாக கங்கணா ரணாவத் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஜெயலலிதாவிற்கு பரதநாட்டியம் தெரியும் என்பதால், அதை கற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் கங்கணா ரணாவத் ஜெயலலிதாவாக நடிக்கவுள்ளார். ஜெ. கதாபாத்திரத்துக்காக உடல் எடையை அதிகரிக்கவுள்ளார் கங்கணா ரணாவத். ஜெயலலிதா அவர்களின் 16 வயதிலிருந்து கதை தொடங்கும். கண்டிப்பாக அனைவரும் பிரமிக்க வைக்கும் வகையில் படம் இருக்கும். அமெரிக்காவிலிருந்து மேக்கப் விஷயங்களுக்காக வரவுள்ளனர்....
வெளியானது ஜோதிகா-ரேவதி காமடி வேடத்தில் நடிக்கும் ‘ஜாக்பாட்’ பர்ஸ்ட் லூக்

வெளியானது ஜோதிகா-ரேவதி காமடி வேடத்தில் நடிக்கும் ‘ஜாக்பாட்’ பர்ஸ்ட் லூக்

Latest News, Top Highlights
இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா, ரேவதி, யோகிபாபு, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்து வந்தனர். இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்திற்கு 'ஜாக்பாட்' என படக்குழுவினர் தலைப்பிட்டுள்ளனர். மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. இந்த தகவலை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்....
வெளியானது நாடோடிகள் குழுவின் அடுத்த பட அறிவிப்பு

வெளியானது நாடோடிகள் குழுவின் அடுத்த பட அறிவிப்பு

Latest News, Top Highlights
நாடோடிகள் 2 படத்தின் பணிகள் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகிவரும் நிலையில் அப்படக்குழு மீண்டும் இணைந்து பணியாற்றவுள்ளது. 2003ஆம் ஆண்டிலேயே இயக்குநராக அறிமுகமானாலும் சமுத்திரக்கனிக்கு பெரும் வரவேற்பைப் பெற்றுதந்தது 2009ஆம் ஆண்டு வெளியான நாடோடிகள் திரைப்படம் தான். தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தை சமுத்திரக்கனி இயக்கியுள்ளார். சசிகுமார், அஞ்சலி, பரணி, அதுல்யா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முதல் பிரதி அடிப்படையில் மெட்ராஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்துக்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, ஐஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இதன் பணிகள் நிறைவடைந்து, ரிலீஸுக்காக காத்திருக்கும் நிலையில் கடந்த 26 அன்று இயக்குநர் சமுத்திரக்கனியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. தனது பிறந்த நாளை முன்னிட்டு, அடுத்த படம் குறித்த அறிவிப்பை சமுத்திரக்கனி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்...

அரசியல் விமர்சன காமெடிகளுடன் வெளியானது தர்மபிரபு பட டீசர்

Latest News, Top Highlights
காமெடி நடிகர் யோகிபாபு நடித்துள்ள 'தர்மபிரபு' படத்தை முத்துக்குமரன் இயக்கியுள்ளார். ஶ்ரீவாரி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் தர்மபிரபு திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். முழுக்க முழுக்க காமெடியாக எடுக்கப்படும் இந்தத் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் யோகிபாபு. இவருடன் ரமேஷ் திலக், அழகம்பெருமாள், கருணாகரன், ராதாரவி போன்ற நடிகர்களும் நடிக்கிறார்கள். இந்நிலையில் யோகிபாபு எமதர்மனாக நடித்திருக்கும், இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.  https://www.youtube.com/watch?v=4A-_xRTHulc ...
ரஜினியின்  மற்றும் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் தேதி  வெளியானது

ரஜினியின் மற்றும் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் தேதி வெளியானது

Latest News, Top Highlights
பேட்ட படத்தை அடுத்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். இது ரஜினிகாந்தின் 166-வது படம். இந்தப் படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாகவும், சமூக ஆர்வலராகவும் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரத்தில் மட்டுமே ரஜினிகாந்த் நடிக்கிறார் என்று கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். பேட்ட படத்தை அடுத்து இந்தப் படத்துக்கும் அனிருத் இசையமைக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. இந்தப் படத்துக்கு நாற்காலி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதற்கு படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மறுப்பு தெரிவித்திருந்தார். த...
வெளியானது விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு

வெளியானது விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு

Latest News, Top Highlights
விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் 30ஆவது படத்திற்கு சங்கதமிழன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இயக்குனர் தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வரும் 29ம் தேதி வெளியாகவுள்ள படம் சூப்பர் டீலக்ஸ். முதன் முதலாக இப்படத்தில் திருநங்கையாக (ஷில்பா) நடித்துள்ளார். மேலும், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகத் பாசில், மிஷ்கின், காயத்ரி, பகவதி பெருமாள் ஆகியோர் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தைத் தொடர்ந்து கடைசி விவசாயி, சிந்துபாத், ஷியா ராம் நரசிம்ம ரெட்டி, மாமனிதன், இடம் பொருள் ஏவல் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது....