நடிகை ஜனனி ஐயர் பிறந்த தின பதிவு
ஜனனி ஐயர், ஓர் இந்தியத் திரைப்பட நடிகையாவார். பல தமிழ் விளம்பரங்களில் நடித்துள்ள இவர், அவன் இவன் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார்.
ஜனனி ஐயர் சென்னையில் உள்ள ஓர் தமிழ்க் குடும்பத்தில் பிறந்து, வளர்ந்தார். சென்னை கோபாலபுரத்திலுள்ள தயானந்த ஆங்கிலோ வேதப்பாடசாலையில் பள்ளிப்படிப்பை படித்து முடித்தார். பின்னர் சென்னையில் உள்ள சவீதா பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் பிரிவை படித்து முடித்தார்.
அவரது படிப்பிற்கு பின்னர் வடிவழகில் கவனம் செலுத்தினார், 150-க்கும் மேற்பட்ட பிராந்திய விளம்பரங்களில் தோன்றியிருக்கிறார். எனினும் எப்போதும் நடிகையாக கனவு கண்டதாகவும் நடிப்பினை வாழ்வின் பேரார்வமாக கருதுவதாகவும் அவர் கூறினார்.
இவர் நடித்த படங்கள்: தர்மபிரபு, அதே கண்கள், தெகிடி, அவன் இவன், விண்ணைத்தாண்டி வருவாயா, திரு திரு துறு துறு, பாகன், முப்பரிமாணம்பாலுன், விதி மதி உல்டா, தொலைகாட்சி...




