Friday, April 17
Shadow

Tag: நடிகர்

நடிகர் வினீத் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
வினீத் திரைப்பட நடிகர். இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அறுபதுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தவர். வினீத் 1969, ஆகஸ்ட் 23-ம் நாளில் ராதாகிருஷ்ணன், சாந்தகுமாரி ஆகியோருக்கு கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் பிறந்தார். அவருக்கு கவிதா என்ற சதோதரி உள்ளார். வினீத் பத்தாம் வகுப்பை தலசீரியில் உள்ள செயிண்ட் ஜோசப்ஸ் உயர்நிலைப்பள்ளியில் முடித்தார். பின்பு 1991 ஆம் ஆண்டில் தி நியூ கல்லூரியில் வணிகத்தில் இளங்கலைகளைப் படிப்பை படித்து முடித்தார். வினீத் 2004 ஆம் ஆண்டில் பிரிசில்லா மேனனை மணந்தார். தற்போது சென்னையில் வசிக்கிறார். அவருக்கு 2006-ஆம் ஆண்டில் அவந்தி என்ற மகள் பிறந்தார். இவர் நடித்த படங்கள்: சந்திரமுகி, காதல் தேசம், பிரியமான தோழி, தேவதை, உளியின் ஓசை, கட்டபொம்மன், ஆவாரம்பூ, காதல் கிறுக்கன்...

நடிகர் மோகன் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
மோகன் ஓர் புகழ்பெற்ற கோலிவுட் நடிகர். கர்நாடக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர். கன்னட, மலையாள, தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் திரைப்படங்களினால் மிகவும் அறியப்பட்டார். தமிழில் எண்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கமலஹாசன் முதன்மை வேடத்தில் நடித்திருந்த கோகிலா என்றத் திரைப்படத்தில் அறிமுகமானதால் கோகிலா மோகன் என அழைக்கப்பட்டார். தம்மை உருவாக்கிய பாலு மகேந்திராவை குருவாகக் கருதுகிறார். இவர் நடித்த படங்கள்: வந்தா மல, மூடுபனி, நெஞ்சத்தை கிள்ளாதே, கிளிஞ்சல்கள், காதோடுதான் நான் பேசுவேன், கடவுளுக்கு ஓர் கடிதம், இதோ வருகிறேன், காதலித்துப் பார், தீராத விளையாட்டுப் பிள்ளை, பயணங்கள் முடிவதில்லை, லாட்டரி டிக்கெட், சின்னஞ் சிறுசுகள், கோபுரங்கள் சாய்வதில்லை, இனியவளே வா, 23, நெஞ்சமெல்லாம் நீயே, அந்த சில நாட்கள், மனைவி சொல்லே மந்திரம், நாலு பேருக்கு நன்றி...

நடிகர் சிரஞ்சீவி பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
சிரஞ்சீவி கொன்னிதெல சிவ சங்கரா வர பிரசாத் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் தெலுங்கு திரைப்பட நடிகர் மற்றும் அரசியல்வாதி ஆவார். 2006 ஆம் ஆண்டு இந்திய அரசால் வழங்கப்படும் இரண்டாம் நிலை விருதான பத்ம பூஷண் விருதைப் பெற்றார். 7 முறை பிலிம்பேர் விருதைப் பெற்ற ஒரே தெலுங்குத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் ஆகத்து 10, 2008 ஆம் ஆண்டு அரசியல் கட்சி அலுவலகத்தை தொடங்கியுள்ளார். பின்னர் ஆகஸ்ட் 17, 2008 அன்று இக்கட்சியின் பெயர் பிரஜா ராஜ்யம் கட்சி என்று அறிவித்துள்ளார். 2009ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பலேகொல், திருப்பதி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டதில் திருப்பதியில் மட்டும் வெற்றிபெற்றார் ஆகத்து 20, 2011 அன்று இராஜீவ் காந்தி பிறந்தநாளில், புதுடில்லியில் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரசு கட்சியில் இணைந்தார் இவர் நடித்த படங்கள்: சயீரா நரசிம்ம ரெட்டி...

நடிகர் பெரியார்தாசன் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
பெரியார்தாசன் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நீண்டக் காலம் தத்துவ இயல் பேராசிரியராக பணியாற்றி ஒய்வுப் பெற்றவர். திராவிடர் கழகத்தின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு நாத்திகராக வாழ்ந்த இவர் தனது இயற்பெயரான சேசாசலத்தை பெரியார்தாசன் என்று மாற்றிக் கொண்டார். சிறந்த மேடைப் பேச்சாளரான இவர் சிசுக் கொலைகள் குறித்த திரைப்படமான கருத்தம்மா என்னும் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குக் கொண்டு மக்களின் அபிமானத்தைப் பெற்றவர். இவர் 12-3-2010 அன்று ரியாதில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தான் இஸ்லாத்தைத் தழுவியதை அவர் பகிரங்கமாக அறிவித்தார்[1][2]. அவர் இனி தனது பெயர் அப்துல்லாஹ் என்று அறிவித்தார். சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பேராசிரியர் அப்துல்லாஹ் கல்லீரல் கோளாறு காரணமாக சென்னை சோளிங்கநல்லூரில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். அவர...

நடிகர் லிவிங்ஸ்டன் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
லிவிங்ஸ்ட்ன் தமிழகத் திரைப்படத்துறை நடிகராவார். இவர் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். திரைப்படங்களுக்காக ராஜன் என்ற பெயரினை தொடக்கக்காலத்தில் பயன்படுத்தினார். 1988ல் பூந்தோட்ட காவல்காரன் திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தார். 1996ல் சுந்தரப் புருசன் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் திரைக்கதை ஆசிரியராக பணியாறிய படங்கள்: கன்னிராசி, காக்கிச் சட்டை, அறுவடை நாள், சுந்தர புருஷன் இவர் நடித்த படங்கள்: சுந்தர புருஷன், பூமகள் ஊர்வலம்...

நடிகர் சரத் சக்சேனா பிறந்த தின பதிவு

Shooting Spot News & Gallerys
பாலிவுட் நடிகரான இவர் தமிழ், தெலுங்கு, மலையாள மொழி படங்களில் நடித்துள்ளார். 1970ல் திரையுலக வாழ்க்கையை துவக்கிய இவர் பெரும்பாலும் சபோர்த்டிங் கேரக்டர்களிலேயே நடித்து வந்தார். இவர் சிறந்த வில்லன் நடிகருக்கான பிலிம் பேர் விருதை வென்றுள்ளார். மும்பையில் வசித்து வரும் இவருக்கும் சோபனா என்ற மனைவியும், வீரா, விஷால் என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர் இந்தியில் 40 படங்களுக்கு மேல் நடித்திருப்பவர் சரத் சக்சேனா. அதோடு, தென்னிந்திய மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் நரசிம்மா, மும்பை எக்ஸ்பிரஸ் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். தற்போது ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் எஸ்-3 படத்திலும் நடித்துள்ளார் இவர் நடித்த தமிழ் படங்கள்: குணா, மன்னன், சுதந்திரம், நரசிம்மா, மும்பை எக்ஸ்பிரஸ், சிங்கம் 3, விவேகம்...
நடிகர் எம். ஜி. சக்கரபாணி மறைந்த தின பதிவு

நடிகர் எம். ஜி. சக்கரபாணி மறைந்த தின பதிவு

Death Anniversary, Top Highlights
எம். ஜி. சக்கரபாணியின் இயற்பெயர் மருதூர் கோபாலமேனன் சக்கரபாணி தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவர் எம். ஜி. ஆரின் மூத்த சகோதரர் என்பதால், ஏட்டன் (மூத்த சகோதரன்) எனும் பெயராலும் குறிப்பிடப்பட்டார். இவர் நடித்த திரைப்படங்கள்: இரு சகோதரர்கள், மாயா மச்சீந்திரா, தமிழறியும் பெருமாள், மகாமாயா மந்திரி, ஸ்ரீ முருகன், ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி, அபிமன்யு, ராஜ முக்தி மந்திரி, பொன்முடி, திகம்பர சாமியார், மருதநாட்டு இளவரசி, இதய கீதம், வனசுந்தரி, என் தங்கை, கல்யாணி, நாம், மலைக்கள்ளன், என் மகள், அலிபாபாவும் நாற்பது திருடர்களும், தாய் மகளுக்கு கட்டிய தாலி, ராஜ ராஜன், , நல்ல தீர்ப்பு, ராஜா தேசிங்கு, மன்னாதி மன்னன், இதய வீணை இவர் இயக்கிய திரைப்படம்: அரசகட்டளை...

முத்தையா முரளிதரன் பயோபிக்கில் இணைந்த பாகுபலி நடிகர்

Latest News, Top Highlights
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்கள் சச்சின் தெண்டுல்கர், டோனி ஆகியோரின் வாழ்க்கை திரைப்படங்களாக வெளிவந்தன. கபில்தேவ் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை வென்ற நிகழ்வை மையமாக வைத்து ‘83’ என்ற பெயரில் புதிய படம் தயாராகிறது. இந்த நிலையில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் வாழ்க்கையையும் சினிமா படமாக எடுக்கின்றனர். முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். படத்துக்கு ‘800’ என்ற தலைப்பை வைத்துள்ளனர். ஸ்ரீபதி ரங்கசாமி டைரக்டு செய்கிறார். இந்த படத்தில் நடிப்பது குறித்து விஜய் சேதுபதி கூறும்போது, “உலக அளவில் கிரிக்கெட் விளையாட்டில் முத்திரை பதித்த முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பது பெருமையாக உள்ளது. இந்த கதாபாத்திரம் எனக்கு சவாலாக இருக்கும்” என்றார். முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு ...

ஆர்டிக்கல் 15-ல் ரீமேக்கில் ஆர்வம் காட்டும் பிரபல நடிகர்

Latest News, Top Highlights
ஹிந்தி நடிகர் ஆயுஷ்மான் குர்னா நடிப்பில்வெளியான அந்தஹதுன் (Andhadhun) படத்தின் ரீமேக் உரிமையை பெற்றுள்ள நடிகர் தனுஷ், இதை தொடர்ந்து ஆர்டிக்கல் 15 படத்தின் ரீமேக் உரிமையை பெறுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். இரண்டு படங்களை ரீமேக் செய்ய, இந்த படங்களை தயாரித்த ஜி ஸ்டுடியோஸ் நிறுவத்தின் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. தற்போது நடிகர் தனுஷ், இயக்குனர் செந்தில் குமாரின் பட்டாஸ் மற்றும் வெற்றி மாறன் இயக்கத்தில் அசுரன் படங்களில் நடித்து வருகிறார்....

நடிகர் ஹம்சவர்தன் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
  மானசீக காதல் என்ற படத்தில் அறிமுகமானவர் ஹம்சவர்தன். பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் மகனான இவர், அதைத் தொடர்ந்து புன்னகை தேசம், ஜூனியர் சீனியர், நேற்று வரை நீ யாரோ நான் யாரோ, இனிது இனிது காதல் இனிது, மந்திரன், பிறகு என பல படங்களில் நடித்தார். தந்தை மற்றும் அண்ணனின் வியாபாரத்தை வியாபாரத்தை கவனிக்க இருந்ததால்  படங்களை நடிப்பதை தவிர்த்து வந்தார். அவரின் நடிப்பு ஆர்வம் மீண்டும் அவரை சினிமாவுக்கு அழைத்து வந்துள்ளது. ஆகவே மீண்டும் அம்சன் புரொடக்ஷன் என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து அதில் இரண்டு படங்கள் நடித்து வருகிறார் அதோடு முன்னணி இயக்குனர் மற்றும் நடிகர்களை வைத்தும் தன் நிறுவனம் மூலம் படங்கள் தயாரிக்க திட்டமிட்டுள்ளார். அடுத்த மாதம் இந்த நிறுவனம் மூலம் தான் நடிக்கும் முதல் படத்தை தொடங்கும் ஹம்சவர்தன், சமீபத்தில் ஹிட் கொடுத்த சில இளவட்ட டைரக்டர்களுக்கு அழைப்பு விடுத்து...