Thursday, May 14
Shadow

Tag: நடிக்கும்

நடிகை இனியா முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘காபி’

நடிகை இனியா முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘காபி’

Latest News, Top Highlights
‘ஓம்’ சினி வென்ச்சர்ஸ் சார்பாக சாரதி சதீஷ் தயாரிக்க, அறிமுக இயக்குனர் சாய் கிருஷ்ணா இயக்கத்தில், ராகுல் தேவ், முக்தா கோட்சே, சௌந்தரராஜன் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து இனியா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ஏழ்மை நிலையிலிருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண், மிக இளம் வயதிலேயே தனது பெற்றோரை இழந்துவிடுகிறார். வாழ்வின் அனைத்து சவால்களையும், சோதனைகளையும் எதிர்கொண்டு, சமாளித்து, இலட்சியத்துடன் தனது கனவை நனவாக்க முயலும் போதும், பொறுப்புணர்ச்சியுடன் தனது தம்பியை நன்கு படிக்க வைத்து, வளர்த்து ஆளாக்குகிறாள். இனி சுபிட்சமாக வாழலாம், கஷ்டங்கள் தீர்ந்துவிடும் காலம் வந்துவிட்டது எனும் போது,சற்றும் எதிர்பாராத பெரும் பின்னடைவுகளையும், அதிர்ச்சிகரமான நிகழ்வுகளையும் அவள் எதிர் கொள்ள வேண்டிய சூழல் அமைகிறது. அதை அதில் எப்படி வெற்றி பெற்றாள் என்பதே கதை. நமக்கு தெரியாமலே நம்மை அச்சுறுத்திக் ...
மீண்டும் ஜோடியாக நடிக்கும் ரியல் ஜோடி

மீண்டும் ஜோடியாக நடிக்கும் ரியல் ஜோடி

Latest News, Top Highlights
  'செக்கச்சிவந்த வானம்' படத்தைத் தொடர்ந்து, 'பொன்னியின் செல்வன்' கதையைப் படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் இயக்குநர் மணிரத்னம். இதற்காக பல்வேறு முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனிடையே, தன்னுடைய தயாரிப்பில் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 'வானம் கொட்டட்டும்' என்ற தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை 'படைவீரன்' படத்தின் இயக்குநர் தனா இயக்குகிறார். நாயகனாக விக்ரம் பிரபு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நாயகியாக மடோனா செபாஸ்டியனும், விக்ரம் பிரபுவுக்கு தங்கையாக நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷையும் ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு. இப்படத்தின் கதை - வசனத்தை மணிரத்னமும், தனாவும் இணைந்து எழுதி வருகிறார்கள். இந்த படத்தில் சரத்குமாரும் அவரது மனைவி ராதிகாவும் கணவன் மனைவியாக நடிக்க உள்ளனர். சரத் குமாரும் அவரது மனைவி ராதிகாவும் பல படங்களில் கணவன், மனைவியாக நடித்திருந...
பொன்னியின் செல்வனில் வில்லியாக நடிக்கும் உலக அழகி

பொன்னியின் செல்வனில் வில்லியாக நடிக்கும் உலக அழகி

Latest News, Top Highlights
மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் நடிகர்களின் கதாபாத்திரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. லைகா புரொடக்‌ஷன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் இந்தப் படத்தில் அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் விக்ரம் ஆதித்ய கரிகாலனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமிதாப்பச்சன் சுந்தர சோழராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. வல்லவராயன் வந்தியத்தேவனாக கார்த்தி நடிக்கிறார். பெரிய பழுவேட்டரையராக பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு நடிப்பதாகவும் கூறப்படுகிறது. படத்தின் வில்லியாக நந்தினி கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யாராய் நடிக்கிறார். கீர்த்தி சுரேஷ் குந்தவை நாச்சியாராக நடிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன...
வைபவ் நடிக்கும் ‘ஆர் கே நகர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

வைபவ் நடிக்கும் ‘ஆர் கே நகர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

Latest News, Top Highlights
வைபவ், சரோஜா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன் பிறகு அரண்மனை 2 ,ஈசன், மேயாத மான் போன்ற படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் உருவான பேட்டை படத்தில் ஒரு காட்சிக்கு மட்டும் வந்து செல்வார். தற்போது இவரது நடிப்பில் ஆர்கேநகர் படம் வெளியாக உள்ளது. சரவண ராஜன் இயக்கத்தில் ஏப்ரல் 12ம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் ஆர்.கே.நகர். இந்த திரைப்படத்தில் வைபவ், சம்பத் ராஜ், பிரேம்ஜி, கருணாகரன், அரவிந்த் ஆகாஷ், சந்தான பாரதி, சன அல்தாப், ஸ்ரீகுமார் போன்ற பல நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர், இப்படத்திற்கு வெங்கட்பிரபுவின் தம்பியான பிரேம்ஜி இசையமைத்து உள்ளார். அதனால் இப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்....
படத்தை தயாரித்து நடிக்கும் அமலா பால்

படத்தை தயாரித்து நடிக்கும் அமலா பால்

Latest News, Top Highlights
கேரளாவில் பிறந்த நடிகை அமலா பால் தமிழில் சிந்து சமவெளி திரைப்படம் வாயிலாக அறிமுகானார். மைனா திரைப்படத்தில் நடித்ததின் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பின் வெளிவந்த திரைப்படங்கள் அவரை நட்சத்திர அந்தஸ்திற்கு உயர்த்தியது. அமலா பால் தற்போது முக்கிய நட்சத்திரங்களுள் ஒருவராக திகழ்கிறார். இவருக்கும் இயக்குனர் விஜய்க்கும் 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 12-ம் நாள் திருமணம் நடைப்பெற்றது. பின்னர் விவகாரத்து ஆனது. இந்நிலையில் அமலாபால் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக மாற முடிவு செய்து, காட்டவீர் (Cadaver) என்ற படத்தில் மருத்துவராக நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது....
விஜய்சேதுபதியுடன் நான் நடிக்கும் படம் இரண்டு வாரத்தில் தொடங்கும்: ஸ்ருதிஹாசன்

விஜய்சேதுபதியுடன் நான் நடிக்கும் படம் இரண்டு வாரத்தில் தொடங்கும்: ஸ்ருதிஹாசன்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் 'ஏழாம் அறிவு' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் நடிகை ஸ்ருதிஹாசன். அதன்பிறகு ஆண்டுகளில் 6 தமிழ் படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கிலும் கடந்த 2 ஆண்டுகளாக எந்த படமும் நடிக்காமல் இருந்து வந்தார். இதனிடையே இயக்குநர் எஸ்.பி.ஜனாதனன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் படத்தில், நாயகியாக நடிக்க ஸ்ருதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியது. இதுகுறித்து ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஸ்ருதிஹாசன் பேசுகையில், விஜய்சேதுபதியுடன் நான் நடிக்கும் படம் இரண்டு வாரத்தில் தொடங்கும் என்றார்....
தமிழில் முதல் முறையாக நடிக்கும் இந்திய சினிமாவின் உயர்ந்த மனிதன்

தமிழில் முதல் முறையாக நடிக்கும் இந்திய சினிமாவின் உயர்ந்த மனிதன்

Latest News, Top Highlights
தமிழில் மற்றும் ஹிந்தி மொழியில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ள உயர்ந்த மனிதன் படம் சுமார் 8 மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. இந்த இந்திய சினிமாவின் உயர்ந்த மனிதனாக விளங்கி வரும் அமிதாப்பச்சன் நடிக்க உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் அமிதாப் அட்டகாசமான தோற்றத்தில் இருக்கும் அப்பட ஸ்டில்களை இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். தமிழில் அஜித், விக்ரம் இணைந்து நடித்து இரட்டையர்கள் ஜே.ட்.-ஜெர்ரி இயக்கிய ‘உல்லாசம்’ படத்தை தயாரித்தவர் அமிதாப் பச்சன். நடிகராக எந்த ஒரு நேரடி படத்திலும் அமிதாப் பச்சன் நடிக்கவில்லை. தமிழ் திரையுலகில் ரஜினி, கமல், பிரபு உள்ளிட்டோருடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தாலும் வந்த அத்தனை அழைப்புகளையும் தவிர்த்து நடிக்காமலே இருந்தார். அமிதாப்பை எப்படியாவது நடிக்கவைக்கவேண்டும் என்ற முயற்சியில் கடந்த ஆண்டு ஜுன் மாதம் எ...
ஜெயலலிதாவாக நடிக்கும் கங்கனா சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா?

ஜெயலலிதாவாக நடிக்கும் கங்கனா சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா?

Latest News, Top Highlights
தமிழ் சினிமா நடிகைகளில் அதிகபட்டமாக எந்திரன் படத்தில் நடித்தற்காக நடிகை எமி ஜாக்சன் 2 கோடி ரூபாய் சம்பளம் பெற்றார். இதுவே நடிகைகளில் அதிகபட்ச சம்பளமாக இருந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரது வாழ்க்கை வரலாற்று நடிக்க உள்ள கங்கனா ரனாவத், சம்பளத்தில் விஷயத்தில் எமி ஜாக்சனை முந்தியுள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரது வாழ்க்கை வரலாற்று படத்தை எடுப்பதற்கு போட்டி போட்டுக்கொண்டு தமிழ் சினிமா இயக்குநர்கள் தயாராகி வந்தனர் . பாரதிராஜா, லிங்குசாமி, பிரியதர்ஷினி, விஜய் ஆகியோர் இப்படத்தை எடுக்கத் திட்டமிட்டனர். ஆனால் கடைசியாக ஏ.எல் விஜய் இப்படத்தை இயக்க முடிவெடுத்து அறிவித்தார். இப்படத்தில் நடிகைகள் தேர்வு நெடுநாட்களாக பேசப்பட்டு வந்தநிலையில், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடிக்கவிருப்பதாக அவரது பிறந்தநாளன்று அறிவித்தனர். இப...
அசுரனில் இரட்டை வேடத்தில் நடிக்கும் தனுஷ்

அசுரனில் இரட்டை வேடத்தில் நடிக்கும் தனுஷ்

Latest News, Top Highlights
அசுரன் படத்தில் தனுஷுக்கு அப்பா, மகன் என்று இரட்டை வேடங்கங்களில் நடித்துள்ளார். 60கள் மற்றும் 80-களில் நடக்கும் கதையில் நடிகர் தனுஸ் 45 வயசு கிராமத்தை சேர்ந்த நபராக நடித்துள்ளார். பூமணியின் ‘வெக்கை’ நாவலை அடிபடையாக கொண்ட இந்த படத்தில் மஞ்சுவாரியர், பசுபதி முதல் பாலாஜி, கருணாசின் மகன் கேன் மற்றும் பவன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். தயாரிப்பாளர் தாணுவின் வி கிரியேசன் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிராகஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கப்படும் என்று இயக்குனர் வெற்றிமாறன் உறுதி செய்துள்ளார். இது வடசென்னையின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்பதுடன், தற்போது ப்ரீ புரோடைக்சன் பணிகள் தொடங்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த படத்தின் பெரும்பாலான ஷூட்டிங்கை முடித்து கொடுத்து விட்ட நடிகர் தனுஷ், தற்போது 'கொடி' புகழ் ஆர் எஸ் துரை செந்தில்குமாரின் பெ...
ஜிகர்தண்டா தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் அதர்வா

ஜிகர்தண்டா தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் அதர்வா

Latest News, Top Highlights
வால்மீகி படம் மூலம் நடிகர் அதர்வா தெலுங்கு திரையுலகில் அறிமுகமாக உள்ளார். இயக்குனர் ஹாரிஸ் சங்கர் இயக்கத்தில் ஜிகர்தண்டா தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் நடிகர் சித்தார்த் ரோலை அதர்வாவும், பாபி சிம்ஹா ரோலில் வருண் தேஜ்-ம் நடிப்பதாக தெரிய வந்துள்ளது. சித்தார்த் கேரக்டருக்கு நடிகர் அதர்வா பொருத்தமாக இருப்பார் என்று அதர்வாவிடம் இயக்குனர் தெரிவித்ததை தொடர்ந்து அந்த கேரக்டரில் நடிக்க அதர்வா ஒகே சொல்லி விட்டார். பிரபலமான டோலிவுட் புரடைக்சன் ஹவுஸ் 14 ரெலகள் தயாரிக்கும் இந்த படத்தில் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் ஏப்ரலில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நடிகர் அதரவா போலீஸ் அதிகாரியாக நடிகை ஹ்ன்சிகாவுடன் நடிக்கும் 100 படம் வரும் மே 3ம் தேதி ரீலிஸ் ஆக உள்ளது....