Monday, June 22
Shadow

Tag: #மணிரத்னம்

இயக்குனர் மணிரத்னம் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
மணிரத்னம் அவர்களின் இயற்பெயர் கோபால ரத்தினம் சுப்ரமணியம் ஆகும். இவர் இந்திய அளவில் அறியப்படும் தமிழ் திரைப்பட இயக்குனர்களுள் ஒருவர். இயக்கம், தயாரிப்பு, திரைக்கதை எனப் பலத் துறைகளில் தடம் பதித்தவர். இவர் திரைப் பங்களிப்பைப் பாராட்டி இந்திய அரசு இவருக்கு 2002ல் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. காதல், தீவிரவாதம் ஆகியவற்றை நகர் வாழ் நடுத்தர மக்களை பின்னணியாக கொண்டு சொல்வது இவருடைய பாணி. இவருடைய படங்கள் சிறப்பான திரைக்கதைக்கும், நேர்த்தியான தொழில்நுட்பத்திற்கும், சுருக்கமான வசனங்களுக்கும், பெயர் பெற்றவை. யாரிடமும் உதவி இயக்குநராக பணி செய்யாமலேயே, தன் முதல் படமாகிய பல்லவி அனுபல்லவி படத்தினை இயக்கினார். முதல் சில படங்கள் வெற்றிபெறாவிட்டாலும் அவர் ஐந்தாவதாக இயக்கிய மௌன ராகம் (1986) பெரும் வெற்றியும், பாராட்டுகளும் பெற்றது. தமிழ் திரை உலகில் தனக்கான இடத்தை பெற்றார். அடுத்து இயக்கிய நாயகன் (198...
சமூக வலைதளத்தில் டிரெண்டாகும் `செக்க சிவந்த வானம்’

சமூக வலைதளத்தில் டிரெண்டாகும் `செக்க சிவந்த வானம்’

Latest News, Top Highlights
`காற்று வெளியிடை' படத்தை தொடர்ந்து மணிரத்னம் `செக்க சிவந்த வானம்' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் யார் யார் என்னென்ன கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் என்பது குறித்து சமூக வலைதளத்தில் சில தகவல்கள் கசிந்திருக்கின்றன. விஜய் சேதுபதி போலீசாக நடிப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம். இந்நிலையில், சிம்பு, அரவிந்த் சாமி மற்றும் அருண்விஜய்யின் கதாபாத்திரம் குறித்த ஒரு பேச்சும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன்படி சிம்பு இன்ஜினியராகவும், அரவிந்த்சாமி அரசியல்வாதியாகவும், அருண் விஜய் கோவக்காரராகவும் நடிப்பதாக கூறப்படுகிறது. மற்றொரு தகவலின்படி படத்தில் இந்த 4 பேரும் அண்ணன், தம்பிகளாக நடிப்பதாக ஒரு தகவலும் சமீபத்தில் உலா வந்தது. மேலும் இந்த படம் தொழிற்சாலை மாசை மையப்படுத்தி உருவாகுவதாகவும் கூறப்படுகிறது. ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் ஹிடாரி, டயானா, பிரகாஷ்ராஜ், தியாகராஜன் மற்ற...
பகத் பாஷில் இடத்தை பிடித்த அருண் விஜய்

பகத் பாஷில் இடத்தை பிடித்த அருண் விஜய்

Latest News, Top Highlights
மணிரத்னம் இயக்கத்தில் அடுத்ததாக உருவாக இருக்கும் படத்திற்கு `செக்க சிவந்த வானம்' என்று தலபை்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, பகத் பாஷில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் ஹிடாரி உள்ளிட்ட பலரும் நடிப்பதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி இருக்கிறது. அதில் பகத் பாஷிலுக்கு பதில் நடிகர் அருண் விஜய் படக்குழுவில் இடம்பிடித்திருக்கிறார். மேலும் பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர் அலிகான், ஜெயசுதா, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். வரும் 12ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி தொடர்ந்து நடைபெறுகிறது. ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் இந்த படத்தை மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் சுபாஸ்...
விஜய் சேதுபதிக்கு இது இரண்டாவது முறை

விஜய் சேதுபதிக்கு இது இரண்டாவது முறை

Latest News, Top Highlights
விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக `ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்', `இமைக்கா நொடிகள்' படங்கள் விரைவில் ரிலீசாக இருக்கிறது. இதுதவிர விஜய் சேதுபதி தற்போது `சூப்பர் டீலக்ஸ்', `96', `சீதக்காதி', `ஜுங்கா' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். விரைவில் சிரஞ்சீவியுடன் இணைந்து `சயீரா நரசிம்ம ரெட்டி' படத்திலும் நடிக்கிறார். அதேநேரத்தில் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார். அந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் அரவிந்த்சாமி, சிம்பு, பகத் பாஷில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு முக்கியமான, சிறிய கதபாத்திரத்திற்கு தான் மணிரத்னம் கதை எழுதினாராம். ஆனால் தற்போது விஜய் சேதுபதியின் கதபாத்திரத்தின் முக்கியத்துவத்தை இயக்குநர் நீட்டித்திருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் விஜய...