ஒரு வீட்டை விட்டுக்கொடுக்க மறுக்கும் மனிதர்… ஒட்டுமொத்த குடியிருப்பும் அவருக்கு எதிராகத் திரும்பினால் என்ன நடக்கும்? – நவம்பர் 6-ல் ZEE5-ல் வெளியாகும் ‘லாஸ்ட் மேன் இன் டவர்’!
ஒரு வீட்டை விட்டுக்கொடுக்க மறுக்கும் மனிதர்... ஒட்டுமொத்த குடியிருப்பும் அவருக்கு எதிராகத் திரும்பினால் என்ன நடக்கும்? – நவம்பர் 6-ல் ZEE5-ல் வெளியாகும் ‘லாஸ்ட் மேன் இன் டவர்’!
மும்பையின் வேகமான வளர்ச்சிக்கு மத்தியில், பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டு புதிய கட்டடங்கள் உருவாவது சகஜமாகிவிட்டது. ஆனால், ஒரு வீட்டை வெறும் கட்டடமாக மட்டும் பார்க்க முடியாத மனிதர்களின் நிலை என்ன? பல ஆண்டுகளாக வாழ்ந்த இடம், அங்கு சேர்ந்த நினைவுகள், பழகிய மனிதர்கள் என அனைத்தையும் விட்டுவிட்டு வேறொரு வாழ்க்கைக்குச் செல்ல முடியுமா? இப்படியான உணர்வுப்பூர்வமான கேள்விகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம்தான் ‘லாஸ்ட் மேன் இன் டவர்’.
மனோஜ் பாஜ்பாய், போமன் இரானி, திவ்யா தத்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படம், வரும் நவம்பர் 6-ம் தேதி ஹிந்தி ZEE5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
ஒரு வீட்டுக்காக நட...
