Monday, October 19
Shadow

Tag: #Athulya

இனிமேல் என்மகனே என்னைப் பார்த்தால் பயப்படுவான் – சுசீந்திரன்

இனிமேல் என்மகனே என்னைப் பார்த்தால் பயப்படுவான் – சுசீந்திரன்

Latest News, Top Highlights
வெண்ணிலா கபடிகுழு, நான் மகான் அல்ல, பாண்டிய நாடு, ஜீவா உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் சுசீந்திரன் தற்போது, ‘ஏஞ்சலினா’, ‘ஜீனியஸ்’ ஆகிய படங்களை இயக்கி வருகிறார். அதேநேரத்தில் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ என்ற படத்தின் மூலம் நடிகராகவும் தற்போது அறிமுகமாகி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிக்கும் இந்த படத்தை `தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்' படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்குகிறார். இந்த படத்தில் விக்ராந்த், இயக்குனர் மிஷ்கின், அதுல்யா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படம் குறித்து சுசீந்திரன் கூறும்போது, ‘எந்த குழந்தையும் இந்த படத்திற்கு பின், என்னை கண்டாலே பயந்து ஓடுவார்கள் அப்படியொரு வில்லத்தனம் என்று கூறியிருக்கிறார். மேலும், குழந்தைகளுடன் நடித்த அனுப...
நான் முதலில் விஜய் ரசிகை, அப்புறம் தான் நடிகை – யார் சொன்னா தெரியுமா?

நான் முதலில் விஜய் ரசிகை, அப்புறம் தான் நடிகை – யார் சொன்னா தெரியுமா?

Latest News, Top Highlights
‘காதல் கண் கட்டுதே’ படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் அதுல்யா ரவி. இப்படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் கவரப்பட்டது. மேலும் இவருக்கு அதிக ரசிகர்களும் கிடைத்தனர். தற்போது இவரது நடிப்பில் ‘ஏமாலி’ என்ற படம் வெளியாகி உள்ளது. இதில் சாம் ஜோன்ஸ், சமுத்திரக்கனி, பால சரவணன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். வி.இசட்.துரை இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், விஜய்யுடன் நடிக்க ஆசையாக இருப்பதாக அதுல்யா ரவி கூறியிருக்கிறார். இது பற்றி அதுல்யா அளித்த பேட்டியில், “நான் முதலில் விஜய் ரசிகை. அதன் பிறகு தான் நடிகை. அவர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன்” என்று கூறியுள்ளார். வாய்ப்பு கிடைக்கட்டும் என்று ரசிகர்கள் வாழ்த்தி உள்ளனர்....