மீண்டும் சித்திரம் பேசுதடியாக “தாதா 87”
ட்ரீம் பிரிட்ஜ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் நரேன் பாவனா நடிப்பில். மிஷ்கின் இயக்கத்தில் 2006ம் ஆண்டு வெளியான படம் "சித்திரம் பேசுதடி". இப்படம் முதலில் வெளியாகியாகிய போது நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தாலும் போதிய திரையரங்குகள் கிடைக்காததால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் மீண்டும் ஆஸ்கார் ரவிசந்திரன் இப்படத்தை வாங்கி ஆஸ்கார் பிலிம்ஸ் பேனரில் தமிழகமெங்கும் மறுவெளியீட்டில் படம் பெறும் வெற்றி அடைந்தது.
இன்றைய காலகட்டத்தில் படத்தின் மறுவெளியீடு என்பது இல்லாமல் போய்விட்டது.
கலை சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் ஸ்ரீ இயக்கத்தில், சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி ஸ்ரீ பல்லவி நடிப்பில் உருவான "தாதா 87" திரைப்படம் மார்ச் 1 அன்று உலகெங்கும் வெளியானது.
தாதா 87 திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தாலும் இத்திரைப்படம் தமிழகத்தில் முக்கியமான ஏரியாக்களில் உள்ள அனைத்...