இளைஞர்களின் ‘கிரேஸி’ உலகம்… ‘பிரேம் கீதாணு’ டீசர் வெளியானது!
இளைஞர்களின் ‘கிரேஸி’ உலகம்… ‘பிரேம் கீதாணு’ டீசர் வெளியானது!
புதுமையான கதைக்களத்துடன் இளம் தலைமுறையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘பிரேம் கீதாணு’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி, படத்தின் கலகலப்பான உலகத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
கௌரவ் வர்மாவின் அவனிகா ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகியுள்ள இப்படம், ஃபார்ஸ் ஃபிலிம்ஸுடன் இணைந்து, பாவனா ஸ்டுடியோஸ் ஒத்துழைப்புடன் வழங்கப்படுகிறது. அபூர்வ் சிங் கார்கி இயக்கியுள்ள இப்படத்தில் வீர பஹாரியா, ஆஃபியா சயீத், அபர்ஷக்தி குரானா, ராகேஷ் பேடி, நிகில் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
டீசரைப் பார்க்கும்போதே, இன்றைய இளம் தலைமுறையின் வாழ்க்கையில் இருக்கும் குழப்பம், நட்பு, ஆசைகள், குறும்புகள் என அனைத்தையும் ஜாலியான திரைக்கதையின் வழியாகச் சொல்ல வருவது தெரிகிறது. பெரிய கனவுகளைத் துரத்தும் இளைஞர்கள், அந்தப் பயணத்தில் சந்திக்கும் ச...

