Wednesday, October 28
Shadow

Tag: #Review

மாயோன் திரை விமரசனம் (ரேட்டிங் 3/5)

Latest News, Review, Shooting Spot News & Gallerys, Top Highlights
இயக்குனர் கிஷோர் இயக்கத்தில் சிபிராஜ், தான்யா ரவிசந்திரன் நடிப்பில் வெளியாகியுள்ள மாயோன் திரைப்படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். மாயோன் மலை என்ற பகுதியில் உள்ள பழங்கால கிருஷ்ணர் கோயிலை இந்திய தொல்லியல் துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்து ஆய்வு செய்கிறது. அந்த ஆய்வுக்கு தொல்லியல் துறை அதிகாரியான கேஎஸ் ரவிக்குமார் தலைமை வகிக்கிறார். ஆனால், அவரது கீழ் வேலை பார்க்கும் ஹரிஷ் பெரடி, சிபிராஜ் இருவரும் சேர்ந்து அந்தக் கோயிலில் இருக்கும் ரகசிய அறையில் உள்ள புதையலை எடுத்து வெளிநாட்டிற்குக் கடத்த நினைக்கிறார்கள். அந்த புதையல் அறை எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்க சிபிராஜ், தன்யா ரவிச்சந்திரன், பகவதி பெருமாள் உள்ளிட்டோர் முயற்சி செய்கிறார்கள். திட்டமிட்டபடி அவர்களால் அதைச் செய்ய முடிந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை. தொல்லியல் துறையில் ஆராய்ச்சியாளராக சிபிராஜ். எந்த ஒரு பழங்காலப் பொர...

வீட்ல விசேஷம் திரைவிமர்சனம் (ரேட்டிங் 4/5)

Shooting Spot News & Gallerys
ஆர். ஜே. பாலாஜி மற்றும் என்.ஜே. சரவணன் கூட்டணியில் மூக்குத்தி அம்மன் வெற்றியை தொடர்ந்து வெளியாகியுள்ள திரைப்படம் 'வீட்ல விசேஷம்'. ஹிந்தியில் வெளிவந்த பதாய் ஹோ படத்தின் தமிழ் ரீமேக் தான் 'வீட்ல விசேஷம்'. போனி கபூர் தயாரிப்பில் வெளிவந்துள்ள இப்படத்தில் ஆர்.ஜே. பாலாஜி, ஊர்வசி, சத்யராஜ், அபர்ணா பாலமுரளி, உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம். பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் ஆர்.ஜே. பாலாஜி { இளங்கோ }, அம்மா ஊர்வசி, அப்பா சத்யராஜ், தம்பி, பாட்டி என அனைவரின் மீதும் அளவுகடந்த பாசத்தை கொண்டுள்ளார். குடும்பத்தை போலவே தனது காதலி அபர்ணாவின் மீதும் காதலை கொண்டுள்ளார். சந்தோஷமாக சென்றுகொண்டிருக்கும் வாழ்க்கையில் தீடீரென தனது அம்மா கர்ப்பமாக இருக்கிறார் என்பதை தெரிந்துகொள்கிறார் பாலாஜி. 50 வயதில் தனது அம்மா கர்ப்பமாக இருப்பதை அறியும் பாலாஜி சற்று அதிர்ச்சியடைகி...

விக்ரம் திரை விமர்சனம் (ரேட்டிங் 4.75/5)

Latest News, Review
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள விக்ரம் படத்தின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம். காவல் துறையில் இருப்பவர்களை மாஸ்க் அணிந்த மர்ம கும்பல் கொலை செய்கிறது. இதில் காளிதாஸ் ஜெயராமும் கொல்லப்படுகிறார். அதுபோல் காவல் துறையில் சம்பந்தம் இல்லாமல் இருக்கும், காளிதாசனின் வளர்ப்பு அப்பா கமலும் கொல்லப்படுகிறார். மாஸ்க் மனிதர்களை கண்டுபிடிக்க, சீக்ரெட் ஏஜென்சிஸ் ஆக இருக்கும் பகத் பாசிலிடம் ஒப்படைக்கப்படுகிறது. மாஸ்க் மனிதர்கள் பற்றிய விவரங்களை சேகரிக்கும் பகத் பாசிலுக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது. இறுதியில் பகத் பாசில், மாஸ்க் மனிதர்களை கண்டுபிடித்தாரா? கமலை மாஸ்க் மனிதர்கள் கொலை செய்ய காரணம் என்ன? மாஸ்க் மனிதர்கள் காவல் துறையினரை கொல்ல காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை. படத்தில் நாயகனாக நடித்திருக்கும் கமல், முதல் பாதியில் கர்ணனாகவும்,...

வாய்தா திரை விமர்சனம் (ரேட்டிங் 3/5)

Shooting Spot News & Gallerys
வராஹா சுவாமி பிலிம்ஸ் சார்பில் கே.வினோத்குமார் தயாரிப்பில் படத்தை இயக்கியிருக்கிறார் மகிவர்மன்.சி.எஸ். இதில் நாசர், மு.ராமசாமி, புகழ் மகேந்திரன், பௌலின் ஜெசிகா, ராணி ஜெயா, காக்கா முட்டை பாட்டி, ரெஜின் ரோஸ், திருநாவுக்கரசு, பிரசன்னா பாலசந்திரன், முத்து அழகர்சாமி, ஆதன் குமார், மாஸ்டர் அபியங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை-லோகேஸ்வரன், ஒளிப்பதிவு-சேதுமுருகவேல் அங்காரகன், படத்தொகுப்பு-நரேஷ் குணசீலன், கலை-ஜாக்கி, பாடல்கள்- இயக்குநர் ராஜு முருகன், உமா தேவி, மணி அமுதன், நவகவி, மகிவர்மன், சண்டை-சுப்ரீம் சுந்தர், உடைகள்-சீனு, தயாரிப்பு மேலாளர்-செல்வா, மக்கள் தொடர்பு-யுவராஜ். ஜாதி வேறுபாட்டில் மூழ்கி கிடக்கும் கிராமத்தில் வெவ்வேறு திசையில் இருந்து வரும் இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொள்ளாமல் திரும்ப தடுமாறி தெரு ஒரத்தில் கடை நடத்தும் வயதான சலவைத் தொழிலாளி மீது எதிர்பாராத விதம...
குகூள் குட்டப்பா (ரேட்டிங் 3.5/5)

குகூள் குட்டப்பா (ரேட்டிங் 3.5/5)

Latest News, Review
கோவை மாவட்டத்தில் தந்தை கே.எஸ்.ரவிக்குமாருடன் வாழ்ந்து வருகிறார் தர்ஷன். இவர் இஞ்சினியரிங் படித்து முடித்து விட்டு வெளிநாடு செல்ல ஆசைப்படுகிறார். ஆனால், தந்தை கே.எஸ்.ரவிக்குமார், தர்ஷனின் ஆசைக்கு தடை போடுகிறார். ஒருவழியாக தந்தையை சமாதானப்படுத்தி ஜெர்மன் செல்கிறார் தர்ஷன். மேலும், தனிமையில் இருக்கும் தந்தையை கவனித்துக் கொள்ள தனது நிறுவனத்தால் பரிசோதனையில் இருக்கும் ஒரு ரோபோவை அவருக்கு துணையாக தருகிறார். ஆரம்பத்தில் அந்த ரோபோவை வெறுக்கும் கே.எஸ்.ரவிக்குமார், ஒரு கட்டத்தில், ரோபோவின் அன்பில் விழுந்து அதையே தன்னுடைய மகனாக பார்த்து கொள்கிறார். பரிசோதனை முடிந்து அந்த ரோபோவை நிறுவன முதலாளி திரும்ப கேட்க, கே.எஸ்.ரவிக்குமார் திருப்பி அனுப்ப மறுக்கிறார். இதனால், ரோபோவை எடுத்து செல்ல இந்தியா திரும்புகிறார் தர்ஷன். இறுதியில் கே.எஸ்.ரவிக்குமார் ரோபோவை திருப்பி கொடுத்தாரா? இல்லையா? என்பதே படத்தின் ம...

ஐங்கரன் திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Latest News, Review
இயக்குனர் ரவி அரசு இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், மகிமா நம்பியார் நடிப்பில் வெளியாகியுள்ள ஐங்கரன் திரைப்படத்தின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம். 2015ல் வெளிவந்த 'ஈட்டி' என்ற விளையாட்டை மையப்படுத்திய விறுவிறுப்பான ஆக்ஷன் படத்தை தனது முதல் படமாகக் கொடுத்து யார் இவர் எனக் கேட்க வைத்தவர் இயக்குனர் ரவி அரசு. அது போலவே அவருடைய இரண்டாவது படத்திலும் வித்தியாசமான கதை, கதாபாத்திரங்களுடன் கொடுத்து இந்தப் படத்தையும் பேச வைக்கிறார். மெக்கானிக்கல் எஞ்சினியரிங் முடித்தவர் ஜிவி பிரகாஷ்குமார். நாமக்கல்லில் வசிக்கும் பிரகாஷுக்கு புதுப்புது கண்டுபிடிப்புகளைச் செய்வது வழக்கம். அப்படி பல தயாரிப்புகளை கண்டுபிடித்து அவற்றிற்கு உரிமம் பெற நடையாய் நடக்கிறார். ஆனால், அவருக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை. இதனிடையே, அவர்களது ஊரில் ஆழ்துளை குழாயில் விழுந்த ஒரு குழந்தையின் உயிரை தன்னுடைய கண்டுபிடிப்பால் காப்பாற்று...

விசித்திரன் திரை விமர்சனம் (ரேட்டிங் 4.5/5)

Latest News, Review
ஆர்.கே சுரேஷ் கதாநாயகனாக நடித்துள்ள விசித்திரன் படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். படத்தின் மைய கதை பொள்ளாச்சி மாவட்டம் வால்பாறையில் நடைபெறுமாறு உருவாக்கியுள்ளார் இயக்குனர் பத்மக்குமார். நடிகர் ஆர்.கே. சுரேஷ் படத்தில் போலிஸ் அதிகாரியாக இருந்து பணி ஓய்வுக்கு தாமக முன்வந்து வீட்டில் தனியாக வசித்து வருவார். நடிகர் சுரேஷ் மனைவியாக மலையாள நடிகை ஷாம்னா காசிம் நடித்துள்ளார். சுரேஷின் முன்னாள் காதலி திடீர் மரணம் அடைய அதை நேரில் பார்த்த அதிர்ச்சியில் இருக்கும் ஹீரோ தனது மணைவியிடம் சற்று விலகி இருக்க நினைக்கிறார். இதனால் அவரது மனைவியோ அவரை விவாகரத்து செய்து விட, சுரேஷ் தனது மகள் உடன் இருப்பார். மகள் விபத்தில் இறந்து விட விரக்கித்தில் இருக்கும் சுரேஷ் திடீரென்று தனது முன்னாள் மனைவிக்கு மூலைச்சாவு ஏற்பட்டாதாக மருத்துவமனை நிர்வாகம் சொல்ல, உடல் உறுப்புகளை தானம் செய்து விடுகின்றனர். இதை சுரேஷ் வி...

ஹாஸ்டல் திரைவிமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Latest News, Review
அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் நடித்த ஹாஸ்டல் திரைப்படத்தின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம். மலையாளத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான அடி கப்யாரே கூட்டமணி என்ற ஹாரர் கலந்த காமெடி படத்தின் தமிழ் ரீமேக்தான் ஹாஸ்டல் திரைப்படம். இந்த படத்தில் அசோக் செல்வன், ப்ரியா பவானி சங்கர், சதீஷ், நாசர், முனீஸ்காந்த் போன்றோர் நடித்துள்ளனர். சுமந்த் ராதாகிருஷ்ணன் இந்த படத்தை இயக்கியுள்ளார், மேலும் ரவீந்திரன் இந்தப் படத்தை தமிழில் தயாரித்துள்ளார். அசோக் செல்வன் நடிப்பில் சமீபத்தில் வெளியான மன்மதலீலை படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது, அதன் தொடர்ச்சியாக தற்போது ஹாஸ்டல் திரைப்படம் வெளியாகி உள்ளது. கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் அசோக் செல்வன் தனது நண்பர்களுடன் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகிறார். இந்த விடுதிக்கு முன்னாள் ராணுவ அதிகாரி நாசர் தலைமை தாங்குகிறார். மிகவும் ஒழுக்கமாக பசங்களை வளர்ப்பதாக அவரே...

பயணிகள் கவனிக்கவும் திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Latest News, Review
விதார்த், லட்சுமி நடித்துள்ள பயணிகள் கவனிக்கவும் படம் நாளை ஓடிடியில் வெளியாக உள்ள பயணிகள் கவனிக்கவும் படத்தின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம். மலையாளத்தில் 2019ம் ஆண்டு வெளியான விக்ருதி படத்தின் ரீமேக் தான் விதார்த் நடித்துள்ள பயணிகள் கவனிக்கவும் படம். கேரளாவில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் மலையாளத்தில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இப்படம், தமிழில் ஆஹா ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது. விதார்த், லட்சுமி, கருணாகரன் போன்றோர் முக்கிய கதாபபாத்திரத்தில் நடித்து உள்ளனர். விதார்த் மற்றும் லட்சுமி காது கேட்காத மற்றும் வாய்பேச முடியாத மாற்று திறனாளியாக உள்ளனர். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சாதாரண மிடில் கிளாஸ் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாய் வாழ்ந்து வருகின்றனர். மறுபுறம் துபாயில் இருந்து ஊருக்கு வரும் கருணாகரனுக்கு வீட்டில் பெண்...

கதிர் திரை விமர்சனம் (4/5)

Latest News, Review
தினேஷ் பழனிவேல் இயக்கத்தில் வெங்கடேஷ் அப்பாத்துரை நடிப்பில் உருவாக்கியுள்ள கதிர் படத்தின் விமர்சனத்தை இங்கே காணலாம். இன்ஜினியரிங் படித்துவிட்டு ஊரில் வேலை இல்லாமல் சுற்றிக் கொண்டிருக்கும் ஹீரோ வெங்கடேஷ் சென்னையில் தனது நண்பர் ரூமில் தங்கி வேலை தேடுகிறார். ஆங்கிலத்தில் தடுமாறும் இவர் வேலை கிடைக்காமல், தண்ணியடித்துவிட்டு சுற்றித் திரிகிறார். பின்பு இவர் தங்கி இருக்கும் வீட்டு ஓனர் ஆக வரும் ரஜினி சாண்டி ஹீரோவிற்கு புத்திமதி சொல்லி திருத்துகிறார். பின்பு ஹீரோ வெங்கடேஷ்க்கு வேலை கிடைத்ததா? அடுத்து அவர் என்ன செய்தார்? என்பதே கதிர் படத்தின் ஒன்லைன். தற்போது இன்ஜினியரிங் படித்துவிட்டு வேலை கிடைக்காமல் சுற்றித்திரியும் பல இளைஞர்கள் ஹீரோ கதாபாத்திரத்துடன் தங்களை ஒன்றிக் கொள்ளலாம். அந்த அளவிற்கு அவர் செய்யும் செயல்கள் அவ்வளவு எதார்த்தமாக உள்ளது. ஹீரோவின் நண்பர்களாக வரும் ஒவ்வொரு வரும் சிறப்பாகவே நட...