
“ஐந்து ரூபாய் உரிமையில் தொடங்கி… யானை மரத்துடனான நட்பில் பயணிக்கும் கதை!” – பா.ரஞ்சித்தை கவர்ந்த ‘யானைமரம்’
சென்னை:
சமூகத்தில் தனக்கான உரிமையைத் தேடும் ஒரு சிறுவனின் போராட்டத்தையும், இயற்கையோடு அவன் ஏற்படுத்திக் கொள்ளும் அழகான நட்பையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘யானைமரம்’. ராமையா ரவிச்சந்திரன் எழுதி, இயக்கியுள்ள இப்படத்தின் டிரைலரை பார்த்த இயக்குநர் பா.ரஞ்சித், படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
மேலும், ‘யானைமரம்’ படத்தின் First Look போஸ்டரை, ‘சார்பட்டா பரம்பரை ரவுண்ட் 2’ படப்பிடிப்பு தளத்தில் பா.ரஞ்சித் வெளியிட்டு வாழ்த்தியுள்ளார். இந்த நிகழ்வில் நடிகர்கள் ஜெயிலர் சீனு, ஜான் கொக்கன், ஹரீஷ் உத்தமன், கே.பிரபாகரன் மற்றும் இயக்குநர் ராமையா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஐந்து ரூபாய்க்காக தொடங்கும் போராட்டம்!
பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் பரமுவைச் சுற்றியே ‘யானைமரம்’ திரைப்படத்தின் கதை நகர்கிறது. தனக்குச் சேர வேண்டிய வெறும் ஐந்து ரூபாய் பணத்திற்காகவே தனது உரிமையை நிலைநாட்ட போராடும் பரமு, அந்தப் போராட்டத்தின் வழியாக சமூகத்தில் தனக்கான இடத்தையும் உரிமையையும் தேடுகிறான்.
இதனிடையே, சிறுவயதில் தான் நட்ட மா விதை, காலப்போக்கில் வித்தியாசமான வடிவில் யானையைப் போன்று வளர்ந்து நிற்பதைப் பார்த்து பரமு ஆச்சரியமடைகிறான். அந்த மரத்தையே தனது நண்பனாக எண்ணி, தனது மகிழ்ச்சியையும் துயரத்தையும் அதனிடம் பகிர்ந்து கொள்கிறான்.
சமூகத்தில் பரமுவுக்கான உரிமை கிடைத்ததா? அவனுக்கும் அந்த ‘யானைமரத்திற்கும்’ இடையிலான நட்பு என்ன ஆனது? என்பதே படத்தின் மையக் கேள்வியாக அமைந்துள்ளது.
மாணவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படமாக உருவாகியுள்ளது!
குழந்தைகளின் உலகம், அவர்களின் உரிமைகள், இயற்கையின் மீதான அன்பு மற்றும் சமூகத்தின் மீதான கேள்விகளை எளிமையான கதை வழியாகப் பேசும் இப்படம், குறிப்பாக பள்ளி மாணவர்கள் பார்க்க வேண்டிய திரைப்படமாக உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
மாஸ்டர் அபினேஷ், ஜோதி கண்ணன், செம்புலி ஜெகன், ஜெயிலர் சீனு, ராணி, மஞ்சு, லீலா உள்ளிட்டோர் கதாபாத்திரங்களாக மட்டுமல்லாமல், அந்த உலகத்திற்குள் வாழ்ந்தவர்களாகவே தங்களது பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
20 சர்வதேச விருதுகள் – 16 இடங்களில் திரையிடல்!
வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘யானைமரம்’ திரைப்படம் இதுவரை 20 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. மேலும், உலகின் பல்வேறு நாடுகளில் 16 இடங்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி ராமையா ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்திற்கு அரவிந்த் சித்தார்தா இசையமைத்துள்ளார். தமிழ் மாறன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்.அபிராம் கலை இயக்கத்தையும், கோபால் படத்தொகுப்பையும் கவனித்துள்ளனர். மக்கள் தொடர்புப் பணிகளை கோவிந்தராஜ் மேற்கொண்டுள்ளார்.
ஓப்பன் விண்டோ பிக்சர்ஸ் சார்பில் ஆர்.சசிகலா தயாரித்துள்ள ‘யானைமரம்’, சர்வதேச திரையிடல்களிலும் பாராட்டுகளைப் பெற்றுள்ள நிலையில், விரைவில் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகி வருகிறது.

“A Story That Begins with a Fight for Five Rupees…” – Pa. Ranjith Praises ‘Yanaimaram’
Chennai:
Director Pa. Ranjith has appreciated Yanaimaram, an upcoming Tamil film written and directed by Ramaiah Ravichandran, after watching its trailer. The filmmaker also unveiled the First Look poster of the film at the sets of his upcoming project Sarpatta Parambarai Round 2.
Actors Jailer Seenu, John Kokken, Harish Uthaman, K. Prabhakaran, and director Ramaiah Ravichandran were present during the occasion.
A Five-Rupee Fight for Rights
Set against the backdrop of a village inhabited by tribal communities, Yanaimaram revolves around a young boy named Paramu, whose seemingly simple demand for the five rupees owed to him becomes a fight for his rightful place and dignity in society.
The story takes an intriguing turn when Paramu discovers that the mango seed he planted as a child has grown into a tree that resembles an elephant. He begins to consider the tree his closest friend, sharing his happiness, sadness, dreams and struggles with it.
The film explores whether Paramu succeeds in obtaining the rights he deserves and what ultimately happens to the unique bond between the boy and the ‘Yanaimaram’.
A Film for School Students
Blending a child’s innocent world with themes of social rights, nature and friendship, Yanaimaram has been crafted as a film that particularly deserves to be watched by school students.
Master Abinesh, Jothi Kannan, Sembuli Jegan, Jailer Seenu, Rani, Manju and Leela are part of the cast and bring the characters of the story to life.
20 International Awards and Screenings Across 16 Locations
The film has already earned 20 international awards and has been screened at 16 locations across different countries, receiving appreciation from audiences and film enthusiasts.
Written and directed by Ramaiah Ravichandran, Yanaimaram features music by Aravind Siddhartha, cinematography by Tamil Maran, art direction by R. Abiram, and editing by Gopal. Public relations are handled by Govindaraj.
Produced by R. Sasikala under the banner of Open Window Pictures, Yanaimaram is gearing up for its theatrical release soon.
