
கிரைம் டிராமா களத்தில் களமிறங்கும் LK அக்ஷய் குமார் – விஷ்ணு அமரன் இயக்கும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்!
‘சிறை’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்ற இளம் நடிகர் LK அக்ஷய் குமார், தொடர்ந்து மாறுபட்ட கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து தனது நடிப்புப் பயணத்தில் புதிய களங்களை நோக்கி பயணித்து வருகிறார். அந்த வரிசையில், அவர் நடிக்கும் புதிய திரைப்படம் சென்னையில் நடைபெற்ற பூஜை விழாவுடன் தொடங்கியுள்ளது. இதையடுத்து படப்பிடிப்பும் தொடங்கப்பட்டுள்ளது.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் S. S. லலித் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு L. K. விஷ்ணு குமார் இணை தயாரிப்பாளராகப் பணியாற்றுகிறார். கிரைம் டிராமா பின்னணியில் உருவாகும் இப்படத்தில் LK அக்ஷய் குமாருடன் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

அறிமுக இயக்குநர் விஷ்ணு அமரன் இப்படத்தை இயக்குகிறார். முன்னணி இயக்குநர் H. வினோத்தின் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ள விஷ்ணு அமரன், ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’, ‘ஜனநாயகன்’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது தனது முதல் படத்தை இயக்குவதன் மூலம் இயக்குநராக புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்.
படத்தின் தொழில்நுட்பக் குழுவிலும் அனுபவம் வாய்ந்த கலைஞர்கள் இடம்பெற்றுள்ளனர். சரவணன் ராமசாமி ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார். படத்தொகுப்பை கலைவாணன். R கவனிக்கிறார். ஆர்த்தி நீலகிருஷ்ணன் ஆடை வடிவமைப்பையும், P.S. ஹரிஹரன் கலை இயக்கத்தையும் மேற்கொள்கின்றனர்.
விளம்பர வடிவமைப்பை அம்பானி (ADFX) மேற்கொள்ள, சண்டைக் காட்சிகளுக்கு ஆக்ஷன் சந்தோஷ் பொறுப்பேற்றுள்ளார். மணிகண்டன் நிர்வாக தயாரிப்பாளராகவும், அருண் K கிரியேட்டிவ் தயாரிப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.
படப்பிடிப்பு சென்னை, கொடைக்கானல் மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறவுள்ளது. கதையின் களம் மற்றும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது.
படத்தின் தொடக்க விழாவில் இயக்குநர்கள் H. வினோத், சிறுத்தை சிவா, R. S. துரை செந்தில்குமார், சுரேஷ் ராஜகுமாரி, விக்னேஷ் வடிவேல், தயாரிப்பாளர்கள் R. K. செல்வமணி, T. சிவா, G. தனஞ்செயன், ஃபைவ் ஸ்டார் செந்தில், ஃபைவ் ஸ்டார் கல்யாண், அருண் விஸ்வா, சபரி, விஜய் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
‘சிறை’ படத்தில் கவனம் ஈர்த்த LK அக்ஷய் குமார், அதனைத் தொடர்ந்து ‘ராவடி’ திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்தப் படத்தின் டீசர் மற்றும் புரமோஷன் காட்சிகளில் அவரது தோற்றமும் கதாபாத்திரமும் ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றது.
இந்நிலையில், ‘ராவடி’ படத்தின் கதைக்களத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட கிரைம் டிராமா பின்னணியைக் கொண்ட இப்படத்தில் அவர் நடிக்கிறார். ஒவ்வொரு படத்திலும் புதிய கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்து வரும் LK அக்ஷய் குமாரின் திரைப்பயணத்தில், இந்தப் படமும் மற்றொரு வித்தியாசமான முயற்சியாக அமையும் என படக்குழு தெரிவித்துள்ளது.
அறிமுக இயக்குநர் விஷ்ணு அமரன், அனுபவம் வாய்ந்த தொழில்நுட்பக் குழு மற்றும் மாறுபட்ட கதைக்களத்துடன் உருவாகும் இப்படம், தொடக்க விழாவிலேயே திரையுலகினர் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

LK Akshay Kumar Ventures into Crime Drama with His Next Film; Vishnu Amaran’s Directorial Debut Begins with a Pooja Ceremony
Young actor LK Akshay Kumar, who grabbed attention with his performance in Siraai, has begun work on his next film. The upcoming project, which is set against the backdrop of a crime drama, was launched with a traditional pooja ceremony in Chennai, with filming commencing soon after.
Produced by S. S. Lalit Kumar under the banner of Seven Screen Studio, the film has L. K. Vishnu Kumar serving as co-producer. Alongside LK Akshay Kumar, Suraj Venjaramoodu and Chethan play important roles in the film.
The film marks the directorial debut of Vishnu Amaran, who has previously worked as an associate director with filmmaker H. Vinoth. He has been part of films including Theeran Adhigaaram Ondru, Nerkonda Paarvai, Valimai and Jana Nayagan. With this project, Vishnu Amaran embarks on his journey as a director.
The technical crew features several accomplished names. Saravanan Ramasamy is handling the cinematography, while Hesham Abdul Wahab is composing the music. Kalaivanan R. is in charge of the editing, with Aarthi Neelakrishnan handling costume design and P. S. Hariharan serving as the art director.
Ambani (ADFX) is taking care of the publicity designs, while Action Santhosh choreographs the action sequences. Manikandan serves as the executive producer and Arun K as the creative producer.
The film will be shot across Chennai, Kodaikanal and Kolkata, with the locations playing an important role in bringing the story and its characters to life.
The pooja ceremony was attended by several prominent personalities from the Tamil film industry, including directors H. Vinoth, Siva, R. S. Durai Senthilkumar, Suresh Rajakumari and Vignesh Vadivel, along with producers R. K. Selvamani, T. Siva, G. Dhananjayan, Five Star Senthil, Five Star Kalyan, Arun Viswa, Sabari and Vijay, as well as cinematographer Arthur Wilson. They extended their wishes to the entire team.
LK Akshay Kumar first made an impression with Siraai and subsequently took on a completely different role in Raavadi. His appearance and character in the teaser and promotional videos of Raavadi also generated considerable attention among audiences.
Now, moving away from the world of Raavadi, the actor is set to explore a crime drama with this upcoming project. Known for choosing varied characters and different storylines from film to film, LK Akshay Kumar is once again set to experiment with a new role.
With debutant director Vishnu Amaran at the helm, an experienced technical team and a distinctive crime-drama storyline, the film has already created interest following its launch ceremony.
