45 நாட்கள் படப்பிடிப்பு நிறைவு… இறுதிக்கட்ட பணிகளில் வேகமெடுக்கும் ‘லைட் வெயிட் பேபி’! ஆகஸ்டில் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
45 நாட்கள் படப்பிடிப்பு நிறைவு... இறுதிக்கட்ட பணிகளில் வேகமெடுக்கும் 'லைட் வெயிட் பேபி'! ஆகஸ்டில் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
சென்னை, ஜூலை 29:
தமிழ் சினிமாவில் புதுமையான கதைக்களத்துடன் உருவாகி வரும் ரொமான்டிக் என்டர்டெய்னர் திரைப்படமான 'லைட் வெயிட் பேபி' (Light Weight Baby), தனது 45 நாள் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்து, தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்பப் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
ஸ்டாண்ட்-அப் காமெடியனாகவும், 'பிக்பாஸ்' நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான 'விக்கல்ஸ்' விக்ரம் கதாநாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில், உடற்பயிற்சி மற்றும் பாடி பில்டிங் துறையில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ள ஆரத்தி கிருஷ்ணா கதாநாயகியாக அறிமுகமாகிறார். வெவ்வேறு துறைகளில் சாதனை படைத்த...
