Friday, July 31
Shadow

45 நாட்கள் படப்பிடிப்பு நிறைவு… இறுதிக்கட்ட பணிகளில் வேகமெடுக்கும் ‘லைட் வெயிட் பேபி’! ஆகஸ்டில் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

45 நாட்கள் படப்பிடிப்பு நிறைவு… இறுதிக்கட்ட பணிகளில் வேகமெடுக்கும் ‘லைட் வெயிட் பேபி’! ஆகஸ்டில் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

சென்னை, ஜூலை 29:

தமிழ் சினிமாவில் புதுமையான கதைக்களத்துடன் உருவாகி வரும் ரொமான்டிக் என்டர்டெய்னர் திரைப்படமான ‘லைட் வெயிட் பேபி’ (Light Weight Baby), தனது 45 நாள் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்து, தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்பப் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

ஸ்டாண்ட்-அப் காமெடியனாகவும், ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான ‘விக்கல்ஸ்’ விக்ரம் கதாநாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில், உடற்பயிற்சி மற்றும் பாடி பில்டிங் துறையில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ள ஆரத்தி கிருஷ்ணா கதாநாயகியாக அறிமுகமாகிறார். வெவ்வேறு துறைகளில் சாதனை படைத்த இருவரும் முதன்முறையாக இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

சென்னை, பெங்களூரு மற்றும் மைசூரு ஆகிய நகரங்களில் நான்கு கட்டங்களாக நடைபெற்ற 45 நாள் படப்பிடிப்பு எந்த தடங்கலும் இல்லாமல் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. தற்போது படத்தொகுப்பு, பின்னணி இசை, ஒலிப்பதிவு உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

உடற்பயிற்சி மற்றும் போட்டி நிறைந்த ஃபிட்னஸ் உலகத்தை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம், வெறும் காதல் கதையாக இல்லாமல், குடும்ப உறவுகள், கனவுகள், வாழ்க்கை இலக்குகள், எதிர்பார்ப்புகள் மற்றும் மனித உணர்வுகளின் மோதல்களை சுவாரஸ்யமான திரைக்கதையுடன் இணைத்து சொல்லவுள்ளது. நகைச்சுவை, காதல், உணர்ச்சி மற்றும் போட்டி மனப்பான்மை ஆகிய அனைத்தும் சமநிலையுடன் இடம்பெறும் முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக இது உருவாகி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இப்படத்தை கே.சி. குரு எழுதி இயக்கியுள்ளார். தயாரிப்பை ஹிதா ஸ்டுடியோஸ் நிறுவனம் மேற்கொண்டுள்ள நிலையில், சாகரா சந்தேஷ் இணைத் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். ஒளிப்பதிவை பிரமோத் கொட்டியன், இசையை சரவணன் சுப்பிரமணியம், படத்தொகுப்பை ஹரிஷ் கொம்மே கவனித்துள்ளனர். படத்தின் வசனங்களை கதாநாயகனாக நடித்துள்ள ‘விக்கல்ஸ்’ விக்ரமே எழுதியிருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

 

படத்தின் உருவாக்கம் குறித்து இயக்குநர் கே.சி. குரு கூறுகையில், “இந்த 45 நாள் பயணம் எங்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. ஒவ்வொரு நகரமும், ஒவ்வொரு படப்பிடிப்பு கட்டமும் படத்தின் தரத்தை மேலும் உயர்த்தியது. இரண்டு முற்றிலும் மாறுபட்ட உலகங்களைச் சேர்ந்த மனிதர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து தொடங்கிய இந்த முயற்சி, இன்று நாங்கள் பெருமையுடன் கொண்டாடும் ஒரு திரைப்படமாக உருவெடுத்துள்ளது. படப்பிடிப்பு முடிந்தாலும், இன்னும் முக்கியமான தொழில்நுட்பக் கட்டம் தற்போது தொடங்கியுள்ளது. இந்தக் கதாபாத்திரங்களை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்த ஆவலுடன் காத்திருக்கிறோம்,” என்றார்.

கதாநாயகன் ‘விக்கல்ஸ்’ விக்ரம் கூறியதாவது, “நாயகனாக அறிமுகமாகும் முதல் திரைப்படம் என்பதால் இது எனக்கு மிகவும் முக்கியமானது. அதோடு, படத்தின் வசனங்களையும் எழுதும் வாய்ப்பு கிடைத்தது என் பயணத்தை மேலும் அர்த்தமுள்ளதாக மாற்றியுள்ளது. நடிகராகவும், எழுத்தாளராகவும் ஒரே நேரத்தில் பணியாற்றியது புதிய அனுபவமாக இருந்தது. இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு நன்றி. ரசிகர்கள் மனதோடு இணையும் ஒரு தரமான பொழுதுபோக்கு திரைப்படமாக இது இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது,” என்றார்.

நாயகி ஆரத்தி கிருஷ்ணா கூறுகையில், “ஃபிட்னஸ் துறையில் உடல்ரீதியான சவால்களை எதிர்கொண்டுள்ளேன். ஆனால் நடிப்பு எனக்கு முற்றிலும் புதிய அனுபவமாக இருந்தது. இந்த கதாபாத்திரம் என்னுள் இருந்த இன்னொரு திறமையை வெளிக்கொண்டு வந்துள்ளது. முதல் திரைப்படமே இவ்வளவு சிறப்பான அனுபவமாக அமைந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ரசிகர்கள் இந்தப் படத்தை ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்,” என்றார்.

படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், ‘லைட் வெயிட் பேபி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் வெளியாக உள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட தயாரிப்புக் குழு திட்டமிட்டுள்ளது.

தொழில்நுட்பக் குழு:

தயாரிப்பு: ஹிதா ஸ்டுடியோஸ்
கதை, திரைக்கதை, இயக்கம்: கே.சி. குரு
இணைத் தயாரிப்பாளர்: சாகரா சந்தேஷ்
ஒளிப்பதிவு: பிரமோத் கொட்டியன்
இசை: சரவணன் சுப்பிரமணியம்
படத்தொகுப்பு: ஹரிஷ் கொம்மே
வசனம்: விக்கல்ஸ் விக்ரம்
இணை இயக்குநர்: கிரண் தும்பகெரே
நிர்வாகத் தயாரிப்பாளர்: ஷரத் குமார் என்
கலை இயக்குநர்: சங்கரகௌடா
உதவி இயக்குநர்கள்: அகமது வரதராஜன், பிரேம் சந்திரன்
மக்கள் தொடர்பு (PRO): நவநீத கிருஷ்ணன்

‘Light Weight Baby’ Wraps Up 45-Day Shoot; First Look to Be Unveiled in August

Chennai, July 29:

The upcoming Tamil romantic entertainer ‘Light Weight Baby’ has successfully completed its 45-day shooting schedule and has now entered the post-production phase. The film stars stand-up comedian ‘Vikkals’ Vikram in his debut as a lead actor alongside fitness specialist Aarthi Krishna, who is also making her acting debut in a prominent role.

The film was shot over four schedules across Chennai, Bengaluru, and Mysuru, with the entire principal photography now wrapped up. The makers are currently focused on post-production work, including editing, background score, and sound design.

Set against the competitive world of fitness, ‘Light Weight Baby’ is more than just a romantic entertainer. The story explores love, family relationships, personal ambitions, emotional conflicts, and the challenges of balancing dreams with expectations. Blending humour, heartfelt emotions, romance, and sports-like competition, the film promises a wholesome cinematic experience.

Popular for his stand-up comedy performances and his appearance on the reality show Bigg Boss, ‘Vikkals’ Vikram makes his debut as a leading man with this film. In addition to acting, he has also penned the film’s dialogues. Joining him is Aarthi Krishna, a well-known name in the fitness and bodybuilding community, who marks her acting debut with the project. Their unique pairing has already generated considerable curiosity among audiences ever since the title announcement.

Written and directed by K.C. Guru, the film is produced by Hitha Studios, with Sagara Sandesh serving as the co-producer. The technical team includes cinematographer Pramod Kotian, music composer Saravanan Subramaniam, editor Harish Komme, while the dialogues have been written by Vikkals Vikram.

Speaking about the project, director K.C. Guru said:

“The past 45 days have been an incredible journey. Every shooting schedule and every city added something unique to the film. What began as an idea about two people from completely different worlds has now evolved into a film that we are truly proud of. While filming has been completed, an equally exciting phase begins in the editing room. We are eagerly looking forward to introducing these characters to the audience.”

Lead actor Vikkals Vikram shared:

“Making my debut as a hero has been one of the most exciting experiences of my career. Getting the opportunity to write the dialogues alongside acting made this journey even more special. Shaping a character both on screen and through writing is a rare experience. I am grateful to the entire team for believing in me, and I am confident that audiences will enjoy this heartwarming entertainer.”

Actress Aarthi Krishna said:

“Fitness has always challenged me physically, but acting challenged me emotionally in completely new ways. Playing this character helped me discover a different side of myself. I am thankful to the entire team for making my debut film such a memorable experience. I can’t wait for audiences to watch and enjoy the film.”

With shooting completed, the makers are now concentrating on the final stages of post-production. The first look of ‘Light Weight Baby’ is scheduled to be released in the second week of August, while the film is planned for a theatrical release later this year.

Cast

  • Vikkals Vikram – Debuts as a lead actor
  • Aarthi Krishna – Makes her acting debut in a prominent role

Technical Crew

  • Production: Hitha Studios
  • Story, Screenplay & Direction: K.C. Guru
  • Co-Producer: Sagara Sandesh
  • Cinematography: Pramod Kotian
  • Music: Saravanan Subramaniam
  • Editing: Harish Komme
  • Dialogues: Vikkals Vikram
  • Associate Director: Kiran Thumbakere
  • Executive Producer: Sharath Kumar N.
  • Art Director: Shankaragowda
  • Assistant Directors: Ahmed Varadarajan, Prem Chandran
  • PRO: Navaneeth Krishnan