
“இன்னும் அதிகமான அங்கீகாரத்தை பெற வேண்டிய படம் ‘பத்தா’!” – வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
‘பத்தா’ படத்தின் வெற்றி விழாவில் நடிகர் விஜய் சேதுபதி, படக்குழுவினரின் உழைப்பையும், படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பையும் பாராட்டிப் பேசினார்.
படத்தைப் பார்த்தபோது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்ததாகக் கூறிய விஜய் சேதுபதி, முதலில் இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை வழங்கிய R.T. சாருக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். தன்னை ஆதரித்ததற்காக மட்டுமல்லாமல், அழகான கதையைத் தேர்வு செய்து அதை படமாக்கியதற்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.
“படத்தைப் பார்க்கும்போதே ஒவ்வொரு துறையினரும் எவ்வளவு சிறப்பாக வேலை செய்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. கேமரா, இசை, எடிட்டிங் என ஒவ்வொரு பிரிவிலும் படக்குழுவினர் தங்களது சிறந்த பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள். அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்” என்றார்.
மேலும், சமூக வலைதளங்களில் ‘பத்தா’ படத்தைப் பற்றி வெளியாகி வரும் நல்ல பதிவுகளும், ரசிகர்கள் உருவாக்கி வரும் ரீல்ஸ்களும் தனக்கு மகிழ்ச்சியை அளிப்பதாகக் குறிப்பிட்டார்.
“இந்தப் படம் இன்னும் நிறைய பேரை சென்றடைய வேண்டும். இதற்கு கிடைத்திருக்கும் வரவேற்பை விட இன்னும் அதிகமான அங்கீகாரத்தை இந்தப் படம் பெற தகுதியானது. இந்தப் படத்திற்கு இன்னும் நிறைய கிடைக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்” என்று விஜய் சேதுபதி தெரிவித்தார்.
படத்தின் பணிச்சூழல் குறித்துப் பேசிய அவர், தனக்கு மிகவும் பொறுமையுடனும் சுதந்திரத்துடனும் பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்பட்டதாகக் கூறினார். படக்குழுவினருடன் இணைந்து பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்ததாகவும், குறிப்பாக மற்ற நடிகர்களுக்கு வழங்கப்பட்ட சுதந்திரத்தையும் ‘space’-ஐயும் அருகிலிருந்து பார்த்தது மகிழ்ச்சியாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
இளம் கலைஞர்களையும் பாராட்டிய விஜய் சேதுபதி, “சாய், உங்களுக்கு மிகச் சிறந்த எதிர்காலம் இருக்கிறது” என்று வாழ்த்து தெரிவித்தார். அதேபோல் அஞ்சு, விஷ்ணு, பாலா, ஹரி, ஷாந்தி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் தனது நன்றியையும் தெரிவித்தார்.
இறுதியாக, ‘பத்தா’ திரைப்படம் இன்னும் அதிகமான ரசிகர்களை சென்றடைய வேண்டும்; தொடர்ந்து பல்வேறு அங்கீகாரங்களைப் பெற வேண்டும் என்று தனது விருப்பத்தைத் தெரிவித்த விஜய் சேதுபதி, படத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறு ரசிகர்களையும் கேட்டுக்கொண்டார்.

“Paththa Deserves Much More Recognition” – Vijay Sethupathi at the Film’s Success Meet
Actor Vijay Sethupathi attended the success meet of Patta and expressed his happiness over the film’s reception while appreciating the efforts of the entire team.
Speaking at the event, Vijay Sethupathi said that watching the film had made him extremely happy and proud. He began by thanking R.T. for giving him the opportunity to be part of the project, not only for supporting him as an actor but also for bringing such a beautiful story to the audience.
He appreciated the contribution of every department involved in the film, saying that their hard work was clearly visible on screen.
“Every department has done a wonderful job in this film. The dedication and effort of each team can be felt while watching the movie. My heartfelt appreciation and thanks to everyone who worked on Patta,” he said.
Vijay Sethupathi also spoke about the positive response the film has been receiving on social media. He said that seeing several positive posts and reels about the film had made him very happy.
“I want this film to reach many more people. I strongly feel that Patta deserves much more recognition. The film deserves to receive even more appreciation than it has received so far,” he said.
The actor also praised the creative freedom and working environment provided during the making of the film. He expressed his gratitude for being given the patience and freedom to perform and said that working with the team had been a wonderful experience.
He further appreciated the way the director gave space and freedom to the other actors in the film, saying that it was a privilege to witness their performances from close quarters.
Vijay Sethupathi also extended his wishes to the younger members of the team, particularly Sai, whom he praised for having a promising future. He also thanked Anju, Vishnu, Bala, Hari, Shanthi and everyone else associated with the film.
Concluding his speech, Vijay Sethupathi expressed hope that Patta would reach a much wider audience and receive several more accolades in the days ahead. He also urged audiences to continue supporting the film.
