Thursday, September 17
Shadow

‘விடியும் காத்திரு’ – மர்ம வீட்டுக்குள் நடக்கும் அமானுஷ்யம்… எம்.எஸ். பாஸ்கரின் மிரட்டல் தோற்றத்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக்!

‘விடியும் காத்திரு’ – மர்ம வீட்டுக்குள் நடக்கும் அமானுஷ்யம்… எம்.எஸ். பாஸ்கரின் மிரட்டல் தோற்றத்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக்!

ஒரு கொலை நடந்த வீடு… அதை விசாரிக்க உள்ளே செல்லும் இரண்டு காவல் அதிகாரிகள்… அங்கே அவர்களை எதிர்கொள்ளும் எதிர்பாராத அமானுஷ்ய சம்பவங்கள். இப்படியொரு வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வருகிறது எம்.எஸ். பாஸ்கர் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படமான ‘விடியும் காத்திரு’.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. வழக்கமான கமர்ஷியல் திரைப்படங்களிலிருந்து விலகி, மர்மம் மற்றும் திகிலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், ரசிகர்களுக்கு வித்தியாசமான திரை அனுபவத்தை கொடுக்க தயாராகி வருகிறது.

ஃபர்ஸ்ட் லுக்கில், பெரிதாக்கப்பட்ட கதவின் சாவித் துவாரத்தின் வழியாக அச்சத்துடன் பார்க்கும் எம்.எஸ். பாஸ்கரின் முகம் இடம்பெற்றுள்ளது. அதைவிட, கதவில் இடம்பெற்றிருக்கும் “You Are Next” என்ற வாசகம், இந்தக் கதவுக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்ற கேள்வியை ரசிகர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.

Friends Production House சார்பில் பி.எம். ரவிச்சந்திரன் தயாரிக்கும் இப்படத்திற்கு அயோத்தி வளர்மதி இணைத் தயாரிப்பாளராக உள்ளார். இயக்குநர்கள் பாலா மற்றும் மிஷ்கின் ஆகியோரின் திரைப்படங்களுக்கான கதை விவாதங்களில் பங்கேற்ற ஆர். அரவிந்த ராஜன், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

எம்.எஸ். பாஸ்கருடன் அம்ஜதா ஷெரின் கதாநாயகியாக நடிக்கிறார். கோபி அயோத்தி காவலர் கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். பேபி ஶ்ரீஜிதா, ராகேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கொலை விசாரணை பின்னணியில் தொடங்கும் கதை, அதன்பிறகு நிகழும் அமானுஷ்ய சம்பவங்களால் எந்த திசையில் பயணிக்கிறது என்பதே படத்தின் முக்கிய சுவாரஸ்யமாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. பரபரப்பான திரைக்கதையுடன் உருவாகி வரும் இப்படம், ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் க்ரைம் திரில்லர் அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு சி. சத்யா இசையமைக்கிறார். ஜி. தாமோதரன் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். மெட்ரோ மகேஷ் சண்டைக் காட்சிகளையும், ஐஸ்வர்யா நடன அமைப்பையும் கவனிக்கின்றனர். ராஜன் வழிவிட்டான் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

உத்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் செ. ஹரி உத்ரா, ‘விடியும் காத்திரு’ திரைப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.

‘Vidiyum Kaathiru’: M.S. Bhaskar’s Chilling First Look Promises a Gripping Crime Thriller!

A murder takes place inside a mysterious house. Two police officers enter the premises to investigate the crime, only to encounter a series of unexpected supernatural events. This intriguing premise forms the core of ‘Vidiyum Kaathiru’, an upcoming crime thriller featuring veteran actor M.S. Bhaskar in the lead role.

The film’s first look has now been unveiled, instantly grabbing attention with its eerie and mysterious presentation. Moving away from conventional commercial storytelling, ‘Vidiyum Kaathiru’ is said to offer a compelling blend of crime, mystery and supernatural elements.

The first look features M.S. Bhaskar’s frightened face seen through an enlarged keyhole of a door. Adding to the mystery is the ominous phrase “You Are Next” displayed on the door, raising curiosity about what awaits those who enter the house.

Produced by P.M. Ravichandran under the banner of Friends Production House, the film has Ayothi Valarmathi as its co-producer. R. Aravind Rajan, who has been part of story discussions for films directed by filmmakers Bala and Mysskin, is making his directorial debut with ‘Vidiyum Kaathiru’.

M.S. Bhaskar plays the lead, while Amjada Sherin plays the female lead. Gopi Ayothi appears as a police officer, with Baby Sreejitha, Rakesh and others essaying important roles.

The story begins with a murder investigation and takes an unexpected turn when the two police officers encounter strange supernatural occurrences inside the house. With a screenplay designed to maintain suspense and tension, the film promises to keep audiences on the edge of their seats.

C. Sathya composes the music, while G. Thamodharan handles both cinematography and editing. Metro Mahesh choreographs the stunt sequences, Aishwarya takes care of the dance choreography, and Rajan Vazhi Vittan is the art director.

The entire shooting has been completed in Chennai and its surrounding areas. The film is currently in its final stage of post-production, with the makers expected to announce the official release date soon.

S. Hari Uthra, under the banner of Uthra Productions, will be releasing ‘Vidiyum Kaathiru’ across Tamil Nadu.