
அக்டோபர் 1 முதல் திரையரங்குகளில் ‘மாறுவேஷம்’ – மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் வைபவின் புதிய திரில்லர்
யூ/ஏ சான்றிதழுடன் வெளியாகும் ‘மாறுவேஷம்’ – இறுதிவரை ரசிகர்களை யூகிக்க வைக்கும் கிளாசிக்கல் மர்டர் மிஸ்ட்ரி!
சென்னை: கொலை வழக்கைச் சுற்றி பின்னப்பட்ட மர்மம், ஒன்றன்பின் ஒன்றாக வெளிப்படும் ரகசியங்கள், எதிர்பாராத திருப்பங்கள் என ரசிகர்களை இறுதிக்காட்சி வரை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் வகையில் உருவாகியுள்ள நடிகர் வைபவின் புதிய திரைப்படம் ‘மாறுவேஷம்’. ஸ்ரீனி எழுதி இயக்கியுள்ள இப்படம், தற்போது யூ/ஏ சான்றிதழைப் பெற்றுள்ள நிலையில், வரும் அக்டோபர் 1-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
வைபவ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தின் முதல் பார்வை மற்றும் முதல் பாடல் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளன. இதையடுத்து படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மர்டர் மிஸ்ட்ரி மற்றும் விசாரணை சார்ந்த திரில்லர் கதைகளுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்த வகையில், பார்வையாளர்களுக்கு ஆரம்பம் முதல் முடிவு வரை பல்வேறு கேள்விகளை எழுப்பி, ஒவ்வொரு திருப்பத்திலும் புதிய மர்மத்தை உருவாக்கும் விதத்தில் ‘மாறுவேஷம்’ உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
படத்தில் வைபவ் ‘திலக்’ என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மர்மமான கொலை சம்பவம் ஒன்றின் பின்னணியில் இருக்கும் உண்மையை கண்டறியும் விசாரணை அதிகாரியாக அவர் பயணிக்கிறார். விசாரணை முன்னேற முன்னேற, சம்பவத்தின் பின்னணியில் மறைக்கப்பட்ட அடையாளங்களும் எதிர்பாராத தகவல்களும் வெளிவருகின்றன. இதனால், உண்மையான குற்றவாளி யார் என்ற கேள்வியே கதையின் மையமாக மாறுகிறது.
ஒரு கொலை வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரியின் பார்வையில் கதை நகர்ந்தாலும், வெறும் விசாரணை காட்சிகளோடு நின்றுவிடாமல் உணர்வுகள், உறவுகள், சந்தேகங்கள் மற்றும் அதிர்ச்சிகரமான திருப்பங்களையும் இணைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, பார்வையாளர்கள் ஒரு முடிவை யூகிக்கும் நேரத்தில் அதற்கு முற்றிலும் மாறான திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில் கதை அமைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
விஜய் ஆனந்த் மற்றும் வைபவ் இணைந்து ஓநைரோமன்சி பிக்சர்ஸ் சார்பில், மன்கி மேன் கம்பெனியுடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தை ஸ்ரீனி எழுதி இயக்கியுள்ளார்.
வைபவுக்கு ஜோடியாக வியானா நடித்துள்ளார். மேலும் ராம்கி, முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, லிவிங்ஸ்டன், ஜார்ஜ் மரியான், ஜார்ஜ் விஜய், இந்துமதி, மு. ராமசாமி, செல் முருகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததுடன், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் முடிவடைந்துள்ளன. தற்போது தணிக்கைக் குழுவின் யூ/ஏ சான்றிதழையும் பெற்றுள்ளதால், வெளியீட்டுக்கான இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
‘மாறுவேஷம்’ திரைப்படத்திற்கு பாலாஜி கே. ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜ்குமார் அமல் இசையமைத்துள்ளார். என்.பி. ஸ்ரீகாந்த் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கலை இயக்கத்தை கவனித்துள்ளார். கூடுதல் திரைக்கதையை எஸ். இசையமுதன் மேற்கொண்டுள்ளார்.
மர்மம், கொலை, விசாரணை, எதிர்பாராத திருப்பங்கள் என ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வரும் ‘மாறுவேஷம்’, வரும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. கிளாசிக்கல் மர்டர் மிஸ்ட்ரி திரில்லர் படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு, இந்தப் படம் வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை வழங்குமா என்பதற்கான விடை அக்டோபர் 1-ஆம் தேதி தெரியவரும்.

Vaibhav’s ‘Maaruvesham’ to Hit Theatres Worldwide on October 1 with U/A Certificate
A classic murder mystery thriller that promises to keep audiences guessing until the very end!
Chennai: Secrets, hidden identities, unexpected twists and a mysterious murder investigation come together in ‘Maaruvesham’, an upcoming thriller starring actor Vaibhav in the lead. Written and directed by Sreeni, the film has now received a U/A certificate and is set to hit theatres worldwide on October 1.
Following the positive response to the film’s first-look poster and first single, the makers have officially announced its theatrical release date. Positioned as a classic murder mystery thriller, Maaruvesham promises to keep audiences engaged with a gripping investigation and a series of unpredictable turns.
Vaibhav plays Thilak, a police officer, who sets out to uncover the truth behind a mysterious murder case. As the investigation progresses, he comes across concealed identities, shocking revelations and unexpected incidents that gradually complicate the case.
While the central narrative revolves around a murder investigation, the film also blends suspense, emotional moments and investigative elements to create a fast-paced thriller. The makers have revealed that the screenplay has been designed to keep viewers guessing and constantly questioning the identities and motives of the characters.
The film has been produced by Vijay Anand and Vaibhav under the banner of Oneromancy Pictures, in association with Monkey Man Company. Sreeni has written and directed the film.
Viyana plays the female lead opposite Vaibhav. The supporting cast includes Ramki, Munishkanth, Vivek Prasanna, Livingston, George Maryan, George Vijay, Indhumathi, Mu. Ramasamy and Cell Murugan, among others.
With both filming and post-production works completed, the film has successfully cleared the censor process with a U/A certificate. The team is now gearing up for its worldwide theatrical release.
Technical Crew
Cinematography: Balaji K. Raja
Music: Rajkumar Amal
Editing: N.P. Sreekanth
Art Direction: Manikandan Srinivasan
Additional Screenplay: S. Isaiamudhan
With murder, mystery, investigation and a series of unexpected twists at its core, ‘Maaruvesham’ is gearing up to offer a suspense-filled theatrical experience for fans of the mystery thriller genre.
‘Maaruvesham’ releases worldwide in theatres on October 1.
