
பத்தா டீசர்: ஒரே விஜய் சேதுபதிக்குள் இத்தனை முகங்களா?
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ‘பத்தா’ படத்தின் ‘World of Patha’ டீசர் வெளியாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை இயக்குநர் அட்லி வழங்குகிறார்.
டீசர் தொடங்கும் விதமே சற்று வித்தியாசமாக இருக்கிறது. ஒரு சிறுவன் ஓடிக்கொண்டிருக்கும் காட்சியுடன் ஆரம்பிக்கும் டீசர், அடுத்தடுத்த காட்சிகளில் பல கேள்விகளை நம்மிடம் விட்டுச் செல்கிறது. குறிப்பாக, ஊரே ‘பத்தா’வைத் தேடுவது ஏன் என்ற கேள்விதான் டீசரின் முக்கிய சுவாரஸ்யமாக மாறுகிறது.
ஆனால், அந்தத் தேடலுக்கான காரணம் என்ன என்பதை டீசர் வெளிப்படையாகச் சொல்லவில்லை. கதையின் முக்கிய விஷயங்களை மறைத்தபடியே கதாபாத்திரங்களையும், சூழலையும் மட்டும் காட்டியிருப்பதால், ‘பத்தா’ என்றால் யார், அவரைச் சுற்றி என்ன நடக்கிறது என்ற ஆர்வம் உருவாகிறது.
டீசரில் விஜய் சேதுபதி தோன்றும் விதமும் கவனிக்க வைக்கிறது. ஒரே கதாபாத்திரமாக இல்லாமல், பல்வேறு தோற்றங்களில் அவர் இடம்பெறும் காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் கூட்டுகின்றன. இந்த வெவ்வேறு தோற்றங்களுக்கும் கதைக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்பதுதான் தற்போது ரசிகர்களின் முக்கிய கேள்வியாக உள்ளது.
‘பத்தா’ படத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் அதன் 80s பின்னணி. அந்தக் காலத்தை நினைவுபடுத்தும் உடைகள், வீடுகள், தெருக்கள், கதாபாத்திரங்களின் தோற்றம் என டீசர் முழுவதிலும் ஒரு பழைய காலகட்டத்தின் சாயல் தெரிகிறது. இதனால் வழக்கமான சமகாலத் திரைப்படங்களைப் போல இல்லாமல், தனக்கென ஒரு வித்தியாசமான உலகத்தை படம் உருவாக்கியிருப்பது தெரிகிறது.
ஏற்கனவே வெளியான ‘மகளே’ பாடலும் இந்த 80s உலகத்திற்கான ஒரு அறிமுகமாக அமைந்திருந்தது. சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படத்தில், அந்தக் காலகட்டத்தின் இசை உணர்வையும் இன்றைய ரசிகர்களுக்கான இசை அணுகுமுறையையும் இணைக்க முயற்சி செய்யப்பட்டிருப்பது டீசர் மூலம் தெரிகிறது.
குறிப்பாக, டீசரின் பின்னணி இசையும் காட்சிகளின் காலகட்ட உணர்வுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. பாடல் மூலம் மெலடி பக்கத்தை காட்டிய சாய் அபயங்கர், டீசரில் வேறு ஒரு இசை அனுபவத்தை கொடுத்திருக்கிறார்.
மொத்தத்தில், கதையைச் சொல்லாமல் கதைக்குள் இருக்கும் மர்மத்தை மட்டும் காட்டுவதுதான் ‘World of Patha’ டீசரின் அணுகுமுறை. விஜய் சேதுபதியின் வெவ்வேறு தோற்றங்கள், 80s பின்னணி, வித்தியாசமான காட்சியமைப்பு மற்றும் இசை என ஒவ்வொரு விஷயமும் படம் குறித்து ஒரு புதிய கேள்வியை எழுப்புகிறது.
‘பத்தா’ படத்தில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள அக்டோபர் 1 வரை காத்திருக்க வேண்டிய நிலையை டீசர் உருவாக்கியுள்ளது. பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Patha Teaser: How Many Faces Does Vijay Sethupathi Have?
The teaser of ‘World of Patha’, from Vijay Sethupathi’s upcoming film ‘Patha’, has been released and is already creating curiosity among moviegoers. Directed by Balaji Tharaneetharan and presented by filmmaker Atlee, the film is produced jointly by Star Studio18, A for Apple Studios and Cine 1 Studios.
The teaser begins with a young boy running, before taking viewers through a series of intriguing visuals. One question quickly takes centre stage — why is the entire town searching for ‘Patha’?
Interestingly, the teaser doesn’t reveal the reason behind the search or give away the core of the story. Instead, it focuses on introducing the characters, the setting and the mysterious world surrounding them. That decision leaves viewers with more questions than answers.
The biggest talking point, however, is Vijay Sethupathi himself. The actor appears in multiple looks and distinct shades, instantly grabbing attention. What connects these different appearances and how they fit into the story remain a mystery, adding another layer of intrigue to the film.
Another striking aspect of the teaser is its 1980s setting. From the costumes and character designs to the locations and overall visual treatment, the film appears to recreate the atmosphere of the era with considerable attention to detail.
The recently released ‘Magale’ song had already offered a glimpse into the film’s retro musical world. Composer Sai Abhyankkar now adds another dimension to the teaser with music that complements its period setting and visuals.
While ‘Magale’ showcased his softer melodic side, the teaser hints at a different musical approach, with the background score helping build the film’s mysterious atmosphere.
Rather than following the usual teaser format of revealing the plot, ‘World of Patha’ chooses to keep the story under wraps. Vijay Sethupathi’s different looks, the 1980s backdrop, the visual treatment and the music together create plenty of curiosity about what the film has in store.
For now, the teaser leaves one big question hanging — who exactly is Patha, and why is everyone looking for him?
The answer will arrive on October 1, when ‘Patha’ is scheduled to hit theatres worldwide.
