Tuesday, April 21
Shadow

Tag: yuvanshankarraja

தனது நீண்டநாள் நண்பருடன் மீண்டும் இணைந்த தனுஷ்

தனது நீண்டநாள் நண்பருடன் மீண்டும் இணைந்த தனுஷ்

Latest News, Top Highlights
வெற்றிமாறன் இயக்கத்தில் `வடசென்னை', கவுதம் மேனன் இயக்கத்தில் `எனை நோக்கி பாயும் தோட்டா' என ஒரே நேரத்தில் இரு படங்களில் நடித்து வருகிறார் தனுஷ். இந்த இரு படங்களை முடித்த பிறகு அடுத்ததாக பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி-2' படத்தில் நடிக்கவிருக்கிறார். இதில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவியும், வில்லனாக மலையாள நடிகர் டோவினோ தாமசும் நடிக்கிறார்கள். கிருஷ்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை தனுஷ் அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார். மாரி படத்தை தொடர்ந்து இந்த பாகத்திற்கும் அனிருத்தே இசைமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாரி-2 படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜாவை படக்குழுவினர் ஒப்பந்தம் செய்துள்ளனர். 10 வருடங்களுக்கு பிறகு தனுஷ் படத்திற்கு அவரது நண்பர் யுவன் ஷங்கர் ராஜா இசைமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது....
ஜெய்யின் பலூனுக்கு கிடைத்த வரவேற்பு: சாட்டிலைட் உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்

ஜெய்யின் பலூனுக்கு கிடைத்த வரவேற்பு: சாட்டிலைட் உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்

Latest News, Top Highlights
புதுமுக இயக்குநர் சினிஷ் இயக்கியிருக்கும் படம் 'பலூன்'. ஜெய் - அஞ்சலி - ஜனனி ஐயர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் சாந்தினி தமிழரசன், யோகி பாபு, கார்த்திக் யோகி, ராஜ் தருண் உள்ளிட்ட பலரும் முக்கிய கதபாத்திரத்தில் நடித்துள்ளனர். காதல் கலந்த திகில் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஜெய் 3 வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். யுவன்ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. '70 எம் எம்' நிறுவனத்தின் சார்பில் டி.என்.அருண் பாலாஜி - கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் 'பார்மர்ஸ் மாஸ்டர் பிளான்' நிறுவனம் சார்பில் திலீப் சுப்பராயன் இணைந்து தயாரித்துள்ள இந்த படம் வருகிற டிசம்பர் 29-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் திரையரங்கு உரிமையை ஆரா சினிமாஸ் கைப்பற்றியிருந்த நிலையில், தொலைக்காட்சி உரிமையை (Satellite Rights...