ஜோதிகா நடிக்கும் ‘ராட்சசி’ ரீலிஸ் தேதி அறிவிப்பு
நடிகை ஜோதிகா, அறிமுக இயக்குனர் எஸ் ராஜ் இயக்கத்தில் நடிக்கும் படத்திற்கு ராட்சசி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை யோகிபாபு நடிப்பில் வெளியாக உள்ள தர்ம பிரபு, விமல் நடிப்பில் வெளியாக உள்ள களவாணி 2 ஆகிய படம் வெளியாகும் ஜூன் 28ம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
இந்த படத்தில் ஜோதிகா, அரசு பள்ளி ஆசிரியை வேடத்தில் நடித்துள்ளதோடு, மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தவும் பாடு படுவராக நடித்துள்ளார்.
எஸ் ஆர் பிரபுவின் டிரீம் வாரியார் பிச்சர்ஸ் தயாரிப்பில், நடிகை பூர்ணிமா பாக்கியராஜ் மற்றும் சத்தியன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். இந்த படத்தில் டிரைலர்கள், சூர்யாவின் என்ஜிகே உடன் இணைக்கப்பட்டு தியேட்டர்களில் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது...








