தர்மபிரபு திரை விமர்சனம்
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக உருவெடுத்துள்ள யோகி பாபு முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படமே தர்மபிரபு. இப்படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.
எமனான ராதாரவி தனக்கு வயதானதால் பதவி விலக முடிவெடுக்கிறார். தனது மனைவியின் ஆலோசனைப்படி தனது மகன் யோகி பாபுவை அடுத்த எமனாக அறிவிக்கிறார்.
இந்நிலையில் நாம் தான் அடுத்த எமன் என்று எண்ணிக்கொண்டிருந்த சித்திர குப்தனான ரமேகஷ் திலக் ஆசையில் மண் விழுகிறது.
இதனையடுத்து யோகி பாபுவை பதவி விலகச் செய்ய ரமேஷ் திலக் ரகசியமாக சதித் திட்டம் தீட்டுகிறார். அவரது சதித்திட்டம் பழித்ததா? யோகி பாபு தனது எமன் பதவியை எப்படி தக்க வைத்துக் கொள்கிறார் ? என்பதே படத்தின் கதை.
எமனாக யோகி பாபு. நாம் இதுவரை தமிழ் சினிமாவில் பார்த்து பழக்கப்பட்ட எமன் வேடத்துக்கு சரியாக பொருந்துகிறார். காமெடி தான் படத்தின் அடிநாதம் என்பதால் அவரது தெனாவட்டான பேச்சும் ...







