Sunday, June 21
Shadow

Tag: படத்தில்

ராக்கிங் ஸ்டார் படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்

Latest News, Top Highlights
கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் என்று என்று பெருமையோடு அழைக்கப்படும் நடிகர் யாஷ் இந்த படத்தில் தனது அற்புதமான நடிப்பினை வெளிப்படுத்தி இந்திய சினிமாவுலகில் பரவலான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார். அதுமட்டுமின்றி இதுவரை வெளிவந்த கன்னட திரைப்படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகி கன்னட சினிமா வரலாற்றிலேயே ரூ 200 கோடிக்கும் மேல் வசூலித்து அதிக காலெக்க்ஷனை செய்த படம் என்ற சாதனையை செய்தது. ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருந்த இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. கேஜிஎப் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில் இப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியானது. அதாவது இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் சினிமாவின் உச்ச நடிகரான சஞ்சய் தத் நடிக்க உள்ளார்...

பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த பிரபல நடிகர்

Latest News, Top Highlights
நடிகர் பார்த்திபன் இந்தப் படத்தில் பெரிய பழுவேட்டையராக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இயக்குனர் மணிரத்னம் இயக்கும் இந்த படத்தில் விக்ரம் ஆதித்ய கரிகாலனாகவும், கார்த்தி வந்தியத்தேவனாகவும், ஐஸ்வர்யா ராய் நந்தினியாகவும், கீர்த்தி சுரேஷ் குந்தவையாகவும், ஜெயம் ரவி ராஜ ராஜ சோழனாகவும் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் நடிகர் பார்த்திபனும் இந்தப் படத்தில் இணைந்திருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில் இயக்குநர் மணிரத்னத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டிருக்கும் பார்த்திபன், “படத்தைப் பார்த்தாலே பொருள் விளங்கும்,திரு மணிரத்னம் படைப்பில்-என் பங்களிப்பில் பெருங்களிப்பில்' பொன்னியின் செல்வன்'. அப்படத்திற்காக Spelling (ஸ்பெல்லிங்) மட்டுமே கற்றிருந்த நான் Swimming (ஸ்விம்மிங்) கற்கிறேன்!” என்று கூறியுள்ளார்....

தளபதி 64 படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல மலையாள நடிகர்

Latest News, Top Highlights
தளபதி 64 படத்தில் பிரபல மலையாள நடிகர் ஆண்டனி வர்கிஸ் வில்லனாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய்யின் 64-வது படமான இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் செப்டம்பர் மாதத்தில் தொடங்க இருக்கிறது. மேலும், இந்தப் படத்தை 2020-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தளபதி 63 படத்தின் பணிகளை முடித்துக் கொண்ட பிறகு செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது வாரம் முதல் தளபதி 64 படப்பிடிப்பு பணிகளைத் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளார். ஒளிப்பதிவு பணிகளை சத்யன் சூர்யனும், படத்தொகுப்பு பணிகளை பிலோமின் ராஜும் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படப்பிடிப்பு தொடங்கியவுடன் படத்தின் டைட்டில் தொடர்பான அறிவிப்பு ...

பிரபல நடிகரின் அடுத்த படத்தில் பாடல் பாடிய எஸ்டிஆர்

Latest News, Top Highlights
கப்பல் பட இயக்குனர் கார்த்திக் ஜி கிருஷ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிகர் சித்தார்த் நடித்து வருகிறார். இந்த படத்தில் திவ்யன்ஷா கவுசிக் நடிகர் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். நிவாஸ் பிரசன்னா இசையமைக்கும் இந்த படத்தில் நடிகர் சிம்பு ஒரு பாடல் பாடி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது முப்தி பட ரீமேக்கில் பிசியாக இருக்கும் நடிகர் சிம்பு, நிவாஸ் பிரசன்னா ஸ்டுடியோவுக்கு அதிகாலை 5 மணிக்கு வந்து பாடி கொடுத்துள்ளார். நடிகர் எஸ்டிஆர் விரைவில் அரசியல் கதை கொண்ட படமான மாநாடு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார்....
சியான் விக்ரமின் அடுத்த படத்தில் இணைந்த பிரபல நடிகை

சியான் விக்ரமின் அடுத்த படத்தில் இணைந்த பிரபல நடிகை

Latest News, Top Highlights
  நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் நடிகை பிரியா பவானி சங்கர், தற்போது இமைக்கா நொடிகள் பட புகழ் அஜய் ஞானமுத்து இயகத்தில் நடிகர் விக்ரம் நடிக்கும் படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்க உள்ளது. செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ், வைகாம் 18 மோஷன் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தயாரிகிறது. ஏஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை வரும் 2020ம் ஆண்டு கோடை காலத்தில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்....
தர்பார் படத்தில் பாடுவதை உறுதி செய்தார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

தர்பார் படத்தில் பாடுவதை உறுதி செய்தார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

Latest News, Top Highlights
ரஜினி நடித்து வரும் படம் தர்பார் படத்தின் ஓபனிங் பாடலை பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ளது உறுதியாகியுள்ளது. ரஜினிகாந்த் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் தயாராகும் ‘தர்பார்’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது. இதில் நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ளார். மும்பை பகுதியில் 2 மாதங்களாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. ரஜினியின் முதல் தோற்றம் ஏற்கனவே வெளியாகி அவர் போலீஸ் அதிகாரியாக நடிப்பதை உறுதிப்படுத்தி உள்ளது. படப்பிடிப்பு புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் திருட்டுத்தனமாக வெளியானதால் அதிக பாதுகாப்பு போட்டுள்ளனர். ரஜினிகாந்த் படங்களில் அறிமுக பாடலை பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடுவது வழக்கம். கடந்த பல ஆண்டுகளாக இந்த வழக்கம் இருந்து வந்தது. ஆனால் ரஞ்சித் இயக்கிய முந்தைய 2 படங்களில் அவரை பாட வைக்கவில்லை. இது ரசிகர்களுக்கு குறையாக இருந்தது. இப்போது தர்பார் படத்தில் ரஜின...

‘பொன்னின் செல்வன்’ படத்தில் இணையும் முன்னணி நடிகர்கள்

Latest News, Top Highlights
பொன்னியின் செல்வன் படத்தில் பார்த்திபன், மலையாள நடிகர் ஜெயராமை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலை திரைபடக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளார் இயக்குனர் மணிரத்னம். இதற்ககான முதற்கட்ட பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இந்த படத்துக்கான நடிகர்-நடிகைகள் தேர்வு நடக்கிறது. இதில் 60-க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் உள்ளன. வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவி, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவையாக கீர்த்தி சுரேஷ், நந்தினியாக ஐஸ்வர்யாராய் ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பழுவேட்டரையர் வேடத்துக்கு சத்யராஜை தேர்வு செய்துள்ளனர். ஐஸ்வர்யா ராய் கதாபாத்திரம் வில்லத்தனமாக இருக்கும். பூங்குழலி...
நடிகர் சந்தானம் படத்தில் இணைவாரா பிரபல காமடி நடிகர் ?

நடிகர் சந்தானம் படத்தில் இணைவாரா பிரபல காமடி நடிகர் ?

Latest News, Top Highlights
நடிகர் சந்தானம் தற்போது A1 மற்றும் டகால்டி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனது அடுத்த படத்தில் பிரபல காமடி நடிகர் கவுண்டமணியுடன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெயரிடப்படாத இந்த படத்தை பூமராங் படத்தை இயக்கிய இயக்குனர் கண்ணன் இயக்க உள்ளார். இந்த படத்தில் நடிகர் கவுண்டமணியை முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், அவர் இதுவரை நடிக்க ஒப்பு கொள்ளவில்லை என்று தெரிகிறது. கவுண்டமணி தனது உடல் நிலை காரணமாக பல படங்களை ஒப்பு கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது....

மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் கவர்ச்சியாக நடித்துள்ளேன் :நிகேஷா படேல்

Latest News, Top Highlights
மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் கவர்ச்சியாக நடித்துள்ளேன் என்று நடிகை நிகேஷா படேல் தெரிவித்து உள்ளார். இயக்குநர் சரண் இயக்கத்தில் உருவாகி வரும் படம் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்'. இந்தப் படத்தில் ஆரவ் நாயகனாக நடித்து வருகிறார். நடிகை ராதிகா சரத்குமார் லேடி டானாக நடித்து வரும் இந்த படத்தில் காவ்யா தாப்பர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த படத்தில் மற்றொரு நாயகியாக நிகேஷா படேல் இணைத்துள்ளார். இது குறித்து நிகேஷா படேல் கூறுகையில், துணிச்சலான கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும், திமிர் பிடித்த பெண்ணாக மற்றொரு நாயகியாக நடிப்பதாகவும் கூறியுள்ளார்....
‘தளபதி 63’ படத்தில் வில்லானாக நடிக்கிறாரா ஷாருக்கான்?

‘தளபதி 63’ படத்தில் வில்லானாக நடிக்கிறாரா ஷாருக்கான்?

Latest News, Top Highlights
அட்லி இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'தளபதி 63' படத்தில் பிரபல, பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சிறப்பு வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. நேற்று திடீரென அட்லீ மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் ட்விட்டரில் ஷாருகானை பின் தொடர தொடங்கியதால் அவரும் இந்த படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் பரவத் தொடங்கியது. ஆனால் இது குறித்து விசாரிக்கையில் கிடைத்த தகவல் என்னவென்றால் ஷாருகான் நடிப்பதாக பரவிய தகவல் முற்றிலும் வதந்தி. அவர் இந்த படத்தில் நடிக்கவில்லை என்று விளக்கமளித்துள்ளனர். இன்னும் பெயரிப்படாத இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க யோகி பாபு, விவேக், கதிர், ஆனந்த் ராஜ், பாலிவுட் ஸ்டார் ஜாக்கி ஷெராப் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். கால்ன்ப்து போட்டிகளை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்டும் இந்த படத்தின் பர்ஸ்ட் லூக் போஸ்டரை நடிகர் விஜய்யின் பிறந...