Tuesday, March 21
Shadow

‘தளபதி 63’ படத்தில் வில்லானாக நடிக்கிறாரா ஷாருக்கான்?

அட்லி இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 63’ படத்தில் பிரபல, பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சிறப்பு வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

நேற்று திடீரென அட்லீ மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் ட்விட்டரில் ஷாருகானை பின் தொடர தொடங்கியதால் அவரும் இந்த படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் பரவத் தொடங்கியது.

ஆனால் இது குறித்து விசாரிக்கையில் கிடைத்த தகவல் என்னவென்றால் ஷாருகான் நடிப்பதாக பரவிய தகவல் முற்றிலும் வதந்தி. அவர் இந்த படத்தில் நடிக்கவில்லை என்று விளக்கமளித்துள்ளனர்.

இன்னும் பெயரிப்படாத இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க யோகி பாபு, விவேக், கதிர், ஆனந்த் ராஜ், பாலிவுட் ஸ்டார் ஜாக்கி ஷெராப் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

கால்ன்ப்து போட்டிகளை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்டும் இந்த படத்தின் பர்ஸ்ட் லூக் போஸ்டரை நடிகர் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22 தேதி வெளியிடவும், படத்தை வரும் தீபாவளிக்கு திரைக்கு வர செய்யவும் பட குழுவினர் முடிவு செய்துள்ளனர்.