Friday, April 17
Shadow

Tag: பதிவு

நடிகை ஜமுனா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
ஜமுனா தென்னிந்தியத் திரைப்பட நடிகை, இயக்குனர் மற்றும் அரசியல்வாதியாவார். இவர் பதினாறு வயதிலிருந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டுள்ளார். 1953ல் புட்டிலு திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கினார். எல். வி. பிரசாதின் மிஸ்ஸம்மா திரைப்படத்தில் நடித்தபிறகு இவர் புகழ்பெற்றார். ஜனா பாய் என்ற இயற்பெயர் கொண்ட ஜமுனா கர்நாடகாவில் உள்ள ஹம்பி எனுமிடத்தில் நிப்பானி ஶ்ரீனிவாசன் ராவ் - கௌசல்யாதேவி ஆகியோருக்குப் பிறந்தார். ஆந்திர பிரதேசத்தில் குண்டூர் மாவட்டத்திலுள்ள துக்கரிலா எனுமிடத்தில் வளர்ந்தார். நடிகை சாவித்திரி இவருடைய வீட்டில் தங்கியிருந்தார். அதனால் சாவித்திரி ஜமுனாவை திரைப்படத்துறைக்கு வருமாறு அழைத்தார். ஜமுனா பள்ளியில் மேடை நடிகராக இருந்துள்ளார். அவருடைய அன்னை ஹார்மோனியம் போன்றவற்றை இசைக்க கற்றுத் தந்தார். டாக்டர் காரிகாபதி ராஜா ராவ் மா பூமி என்ற ஜமுனாவின் நாடகத்தினைப் பார்த்தவர், தன்னுடைய புட்டி...

அனுமதி பெறாமல் தனது பெயர், வசனங்களை பயன்படுத்தியவர்கள் மீது கவுண்டமணி வழக்கு பதிவு

Latest News, Top Highlights
நடிகர் கவுண்டமணியின் அனுமதி பெறாமல் அவருடைய புகைப்படத்தையும் வசனங்களையும் 'சிக்ஸர்' என்ற திரைப்படத்தில் தவறான முறையில் அவதூறாக பயன்படுத்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் தினேஷ் கண்ணன் மற்றும் ஸ்ரீதர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கவுண்டமணியின் வழக்கறிஞர் க.சசிகுமார் அனுப்பிய நோட்டீஸ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. சிக்சர்” படத்தில் தன்னை தவறான முறையில் சித்தரித்திருப்பதாக கூறி அப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நடிகர் கவுண்டமணி நோட்டீஸ் * கவுண்டமணியை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதாக நோட்டீசில் குற்றச்சாட்டு    ...

நடிகர் விஷால் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
விஷால் கிருஷ்ணா ரெட்டி தமிழ்த் திரைப்பட நடிகராவார். நடிகராவதற்கு முன் நடிகர் அர்ஜுன் இடம் உதவி இயக்குனராகவும் பணி புரிந்துள்ளார். தயாரிப்பாளர் ஜி. கே. ரெட்டி, விஷாலின் தந்தை ஆவார். இவர் பிறப்பால் தெலுங்கராக இருந்தாலும் தமிழ்த் திரைப்படங்களின் மூலமே பிரபலமானார். இவர் முதல் முதலாக நடித்த செல்லமே, சண்டக்கோழி, திமிரு ஆகிய படங்கள் வெற்றி பெற்றன. விஷால் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியிலும் உள்ளார். கல்லூரி படிப்பை முடித்ததும், தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்குமாறு குடும்பத்தினர் ஆலோசனை வழங்கினர். நடிகர் அர்ஜுனிடம், வேதம், ஏழுமலை ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றினார். இதுவரை கிட்டத்தட்ட இருபது படங்களில் நடித்துள்ளார். விஷால் 1977 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தாய்மொழி தெலுங்கு ஆகும். இவரது தந்தை தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத்துறைகளில் முன்னணி தயாரிப்ப...

நடிகர் அக்கினேனி நாகார்ஜுனா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
அக்கினேனி நாகார்ஜூனா ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் ஆந்திரத் திரைப்படத்துறையில் முதன்மையாக பணிபுரிகிறார், ஒரு சில பாலிவுட் மற்றும் தமிழ் படங்களிலும் பணியாற்றியிருக்கிறார். நாகார்ஜூனா 1959 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 29 ஆம் தேதி சென்னையில் பிறந்தார். இவர் தெலுங்கு நடிகர் அக்கினேனி நாகேசுவர ராவ் மற்றும் அன்னபூர்ணா அக்கினேனியின் மகனாவார். அவர்களின் ஐந்து குழந்தைகளில் நாகார்ஜூனா கடைசியாவார். பின்னர் அவரது குடும்பம் ஐதராபாதத்திற்கு குடிபெயர்ந்தது அங்கு தனது ஆரம்ப கால கல்வியை ஐதராபாத் பொதுப்பள்ளியிலும் பின்னர் பள்ளி இடைநிலைக் கல்வியை லிட்டில் பிளவர் இளநிலைக்கல்லூரியிலும் கற்றார். நாகார்ஜூனா இருமுறை திருமணம் செய்துள்ளார். அவரது முதல் மனைவி, லஷ்மி ராமா நாயுடுவை 1984 ஆம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி மணந்தார். அவர் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் டி. ராமா நாயுடுவின் மகளும் தெல...

பாப் இசையின் மன்னர் மைக்கல் ஜாக்சன் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
மைக்கல் ஜோசஃப் ஜாக்சன் ஓர் ஆபிரிக்க அமெரிக்க பாப் இசைப் பாடகர், நடன இயக்குனர், பாடல் ஆசிரியர், தொழில் தலைவர், மற்றும் வள்ளல் எனப் பல முகங்கள் கொண்டவர். புகழ்பெற்ற ஜாக்சன், இசைக் குடும்பத்தில் ஏழாம் பிள்ளை. 1964இல் இவரின் நான்கு உடன்பிறந்தவர்களுடன் சேர்ந்து ஜாக்சன் 5 என்ற இசைக்குழுவில் சேர்ந்தார். பின் 1971 இல் தனியாக பாடத் துவங்கி புகழடைந்தார். கிங் அஃப் பாப் (பாப் இசையின் மன்னர்) என்றும் எம்.ஜெ என்றும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். இவரால் வெளியிடப்பட்ட இசைத்தொகுப்புகளில் ஐந்து உலகெங்கும் பெருமளவில் விற்பனை செய்யப்பட்டதாகும். 1982இல் வெளிவந்த திரில்லர் உலகில் பெருமளவில் விற்பனை செய்யப்பட்ட இசைத் தொகுப்புகளின் பட்டியலில் முதலாம் நிலையில் உள்ளது. உலகெங்கிலும் உள்ள பல தரப்பு மக்களின் நடுவில் நாற்பது ஆண்டு காலமாகப் புகழ்பெற்றவராக வாழ்ந்து வந்துள்ளார். பாடல் எழுதி, அதற்கு இசையமைத்து, பா...

நடிகர் விஜயகுமார் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
விஜயகுமார் தென்னிந்திய திரைப்பட நடிகராவார். பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் பெருமளவு இவர் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒரு சில இந்தி மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் நடித்த இவர் தற்பொழுது தந்தை வேடங்களில் நடித்து வருகிறார். 1961ல் வெளிவந்த சிறீ வள்ளி என்ற திரைப்படத்தில் முருகனாக நடித்துள்ளார், 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகிலுள்ள நாட்டுச்சாலை என்ற சிற்றூரில் பிறந்தார். இவரின் முதல் மனைவி பெயர் முத்துக்கண்ணு, மற்றும் திரைப்பட நடிகையான மஞ்சுளாவை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டார். முதல் மனைவிக்கு பிறந்தவர் நடிகர் அருண் விஜய் ஆவார். இவருக்கு கவிதா, அனிதா, வனிதா, பிரிதா, ஸ்ரீதேவி என்ற பெண்கள் உள்ளனர். சின்னத்திரையிலும் நடிக்கத்தொடங்கியுள்ள இவர் 'தங்கம்' தொடரில் ரம்யா கிருஷ்ணனுக்கு தந்தையாக நடித்துள்ளார். இவர் தென்ன...

நடிகர் பிரசன்னா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
பிரசன்னா வளர்ந்து வரும் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். மணிரத்தினம் தயாரிப்பில் 2002ல் வெளிவந்த பைவ் ஸ்டார் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு வந்தார். பிரசன்னாவின் பிறப்பிடம் திருச்சிராப்பள்ளியாகும். இவரின் தந்தை பெல் நிறுவனத்தில் வேலை செய்தார். மே 11, 2012 ஆம் ஆண்டில் திரைப்பட நடிகையான சினேகாவைத் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பின்பு 2015 ஆண்டு அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவர் நடித்த படங்கள் :5 ஸ்டார், ரகசியமாய், காதல் டாட் காம், அழகிய தீயே, கஸ்தூரி மான், கண்ட நாள் முதல், சீனா தானா 001, சாது மிரண்டா, அஞ்சாதே, கண்ணும் கண்ணும், மஞ்சள் வெயில், அச்சமுண்டு! அச்சமுண்டு, நாணயம், கோவா, பாணா காத்தாடி, முரன்...

நடிகர் இளவரசு பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
இளவரசு ஒரு இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் ஒளிப்பதிவாளராக தமிழ்த் திரைப்படத் துறையில் பணியாற்றியுள்ளார். இவர் 1987ல் பாரதிராஜா இயக்கிய வேதம் புதிது திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தார்.[1] இவர் ஐம்பதுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த படங்கள்: கடலோர கவிதைகள், வேதம் புதிது, கொடி பறக்குது, பசும்பொன், பொற்காலம், வெற்றிக் கொடி கட்டு, பூவெல்லாம் உன் வாசம், பாண்டவர் பூமி, தவசி, ஷாஜகான், பகவதி அம்மன், யுனிவர்சிடி, மாறன், சுந்தரா டிராவல்ஸ், புதிய கீதை, பாய்ஸ், உன்னை சரணடைந்தேன், காதல் சடுகுடு, ஈர நிலம், பீஷ்மர், பல்லவன், ரகசியமாய், ஜெயம், நெறஞ்ச மனசு, சவுண்டு பார்ட்டி, அட்டகாசம், சிந்தாமல் சிதராமல், குத்து, சத்திரபதி, மகாநடிகன், ஆட்டோகிராப், மதுர, ஏய், கிரி, ஒரு நாள் ஒரு கனவு, மஜா, ஜீ, குருதேவா, தவமாய் தவமிருந்து, தம்பி, இம்சை அரசன் 23ம் புலிகேசி, குஸ்தி, டான் சேரா, ஒரு...

நடிகர் சுமன் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
சுமன் ஓர் தென்னிந்திய திரைப்பட நடிகர். 1980களில் தெலுங்கு, தமிழ் மலையாள மொழிகளில் அதிரடி திரைப்படங்களிலும் காதல் திரைப்படங்களிலும் நடித்து வந்தார். தெலுங்கில் சித்தாரா, தரங்கணி, நேதி பாரதம் ஆகியன குறிப்பிடத் தக்கன. மலையாள மொழியில் சாகர் அலையசு ஜாக்கி என்ற திரைப்படத்தில் வில்லனாகவும் வரலாற்றுச் சித்திரமான பழசி இராசாவில் பழயம்வீடன் சாந்துவாகவும் நடித்துப் புகழ் பெற்றார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீளவும் நடிக்க வந்தபிறகு 2007இல் வெளியான சிவாஜி: த பாஸ் படத்தில் எதிர்மறை வேடத்தில் நடித்துப் பரவலானப் பாராட்டைப் பெற்றார். குருவி, ஏகன் ஆகிய திரைப்படங்களிலும் நடித்திருந்தார். இவர் நடித்த படங்கள்: வந்தா ராஜாவாதான் வருவேன், Mr.லோக்கல், உணர்வு, முத்துராமலிங்கம், நிபுணன், சவுக்கார்பேட்டை, ருத்ரமாதேவி...

பின்னணி திரைப்பட பாடகி ஏ. பி. கோமளா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
ஏ. பி. கோமளா தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ளார். 1940களில் இருந்து 1960களின் நடுப்பகுதி வரை இவர் பல திரைப்படங்களுக்கு பின்னணி பாடியுள்ளார். 1970கள் வரை மலையாளத்தில் தொடர்ந்து பாடி வந்தார். ஜி. ராமநாதன், கே. வி. மகாதேவன், எஸ். வி. வெங்கட்ராமன், ம. சு. விசுவநாதன், சி. எஸ். ஜெயராமன், எஸ். எம். சுப்பையா நாயுடு, டி. ஆர். பாப்பா, வெ. தட்சிணாமூர்த்தி, ஜி. தேவராஜன் போன்ற பல பிரபலமான இசையமைப்பாளர்களின் படங்களில் இவர் பின்னணி பாடியுள்ளார். பெண் மனம், தங்கப்பதுமை, தங்கமலை ரகசியம், மாமியார் மெச்சின மருமகள்‎, பொம்மை கல்யாணம், எங்கள் குடும்பம் பெரிசு, ஸ்ரீ வள்ளி, தாமரைக்குளம் ஆகிய திரைப்படங்களில் இவர் பாடிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன....