Wednesday, May 6
Shadow

Tag: #பத்மாவத்

சங்கரின் பாராட்டை பெற்ற பத்மாவத்

சங்கரின் பாராட்டை பெற்ற பத்மாவத்

Latest News, Top Highlights
பாலிவுட்டில் ‘பாஜிராவ் மஸ்தானி’ படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான படம் ‘பத்மாவத்’. இதில் தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஷாகித் கபூர், அதிதி ராவ் ஆகியோர் நடித்திருந்தனர். சஞ்சய் லீலா பன்சாலியே இசையமைத்திருந்த இதற்கு சுதீப் சட்டர்ஜி ஒளிப்பதிவு செய்திருந்தார். வயகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் – பன்சாலி புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து மிக பிரம்மாண்டமாக தயாரித்திருந்தது. பல எதிர்ப்புகளை தாண்டி ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸான இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தை பார்த்த திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளங்களில் புகழ்ந்து வரும் நிலையில், இயக்குனர் சங்கர், படத்தை பார்த்து அமேஷிங் விஷுவல், பெண்டாஸ்டிக் ஒர்க், பாடல்கள் சிறப்பாக உள்ளது என்று கூறி படக்குழுவினரை...
பத்மாவத் (மக்களின் ராணி) – திரைவிமர்சனம் (4/5)

பத்மாவத் (மக்களின் ராணி) – திரைவிமர்சனம் (4/5)

Review, Top Highlights
சிங்களப் பேரரசை ஆண்ட மன்னரின் அழகிய மகளான இளவரசி பத்மாவதியாக வருகிறார் தீபிகா படுகோனே. ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த சித்தூர் மன்னர் ரத்தன் சென்னாக வருகிறார் ஷாஹித் கபூர். சிங்கள நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற முத்து வகைகளை கொண்டு வருவதற்காக அவர் இலங்கை செல்கிறார். அங்கு காட்டில் மான் வேட்டையாடி கொண்டிருந்த பத்மாவதி செலுத்திய ஒரு அம்பு குறிதவறி, ரத்தன் சென் மீது பாய்கிறது. இதையடுத்து ரத்தன் சென்னிடம் மன்னிப்பு கேட்கும் பத்மாவதி, ரத்தன் சென்னை ஒரு குகையில் வைத்து ரகசியமாக சிகிச்சை அளிக்கிறார். சிகிச்சை செய்யும் நிலையில் ரத்தன் சென் - பத்மாவதி இடையே காதல் மலர்கிறது. பின்னர் இருவருக்கும் திருமணமும் செய்து வைக்கப்படுகிறது. பின்னர் பத்மாவதியை தனது நாட்டிற்கு அழைத்துச் செல்கிறார். சித்தூர் மக்களும் பத்மாவதியை தங்களது இளைய ராணியாக ஏற்று அவர்மீது பாசமும். மரியாதையும் காட்டி வருகின்றனர். ஆனால், ...