
தமிழ் சினிமாவுக்கு இது பொற்காலம் என்று தான் சொல்லணும் காரணம் கடந்த சிலகாலங்களாக மிக சிறந்த படங்கள் வெளியாகிறது என்று சொல்லணும். கடந்த வாரம் அறம் மிக சிறந்த படம் அதை தொடர்ந்து இந்த வாரம் தீரன் அதிகாரம் ஒன்று.
தமிழ் சினிமாவில் போலீஸ் படங்கள் நிறைய வந்துள்ளது அதில் ஒரு சில படங்கள் நம் மனதில் நின்ற படங்கள் என்று சொல்லுவோம் அந்த வகையில் ஒரு நல்ல போலீஸ் கதையம்சம் கொண்ட படம் என்று தான் சொல்லணும்.
இயக்குனர் தன் முதல் படத்திலே தான் ஒரு மிக சிறந்த இயக்குனர் என்று நிரூபித்தவர் அந்த வகையில் மீண்டும் ஒரு மிக சிறந்த படத்தை நமக்கு கொடுத்துள்ளார் என்று தான் சொல்லணும் நல்ல கதை விறுவிறுப்பான திரைக்கதை கம்பீரமான நட்சத்திர தேர்வு என்று எதிலும் சோடை போகாமல் மிக சிறந்த படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் வினோத் அதோடு இந்திய போலீஸ் டிபார்ட்மென்ட்க்கு மிக பெரிய கௌரம் அந்தஸ்தை கொடுத்துள்ளார்
இந்த படத்தில் நாயகனாக கார்த்தி நாயகியாக ரகுல் ப்ரீத் சிங் இவர்களுடன் மனோபாலா போஸ் வெங்கட் சத்யன் மற்றும் பலர் நடிப்பில் ஜிப்ரான் இசையில் சத்யன் சூர்யன் ஒளிப்பதிவில் ட்ரீம்ஸ் வாரியார் தயாரிப்பில் உருவாக்கி இருக்கும் படம் தீரன் அதிகாரம் ஒன்று
கதைக்களம்
அப்பா போலீஸ் டூட்டியில் இருந்த போது காலமானாலும் அதை கவுரமாக நினைத்து டிஎஸ்பி-க்கு தகுதி பெற்று ஊருக்கு திரும்புகிறார் தீரன் திருமாறன் (கார்த்தி). தன் வீட்டுக்கு வந்த இடத்தில் எதிர் விட்டு அழகு பதுமை ரகுல் ப்ரீத்தியை காதலித்து மேரேஜூம் செய்து கொள்கிறார். இதன் பின் டூட்டியில் நிஜக் குற்றவாளிகள் பலரை அதிரடியாக அரெஸ்ட் செய்வதால் வழக்கம் போல் அவருக்கு அடிக்கடி டிரான்ஸ்ஃபர் கிடைக்கிறது. அப்படி போன ஓர் ஊரில். ஒரு கொடூரமான கொலை வழக்கு சிக்குகிறது.
அதாவது நேஷனல் ஹைவேஸில் இருக்கும் வீடுகளைக் குறி வைத்து அங்கிருக்கும் நகை, பணத்தைக் கொள்ளையடித்து, மனிதர்களை கோரமாகக் கொலை செய்து தப்பி ஓடுகிறது ஒரு கும்பல். அந்தக் கும்பல் இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் தங்கள் குரூரமான போக்கைக் காட்டி கொள்ளை அடிப்பார்கள். அதே சமயம், அவர்கள் எந்த வழக்கிலும் சிக்குவதில்லை. போலீஸிடம் கை ரேகை தவிர அவர்கள் எந்த தடயத்தையும் விட்டுச் செல்வதுமில்லை. இந்தக் கும்பலைக் கண்டுபிடிக்கும் பெரும்பணி தீரன் திருமாறனிடம் (கார்த்தியிடம்) ஒப்படைக்கப்படுகிறது. அதை தீரன் திருமாறன் கண்டு பிடிக்க மெனக்கெடும் யுக்திகளும், சாகசங்களும்தான் தீரன் திரைக்கதை
கார்த்தி மீண்டும் தன்னை ஒரு சிறந்த நடிகர் என்று பருத்தி வீரன் படத்துக்கு பிறகு நிரூபித்துள்ளார் என்று தான் சொல்லணும் அண்ணன் சூர்யாவுக்கு சிங்கம் என்றால் கார்த்திக்கு தீரன் அதிகாரம் ஒன்று என்று தான் சொல்லணும் அந்த அளவுக்கு மிடுக்கான படம் போலீஸ் என்றாலே தேவை இல்லாமல் கத்தி ஊரை கூட்டாமல் அமைதியாக காட்சிகளுக்கு என்ன தேவையோ அதை மட்டும் செய்து மிக சிறப்பாக நடித்துள்ளார் என்று தான் சொல்லணும் கார்த்தி திரை வாழ்க்கையில் இந்த படம் ஒரு மிக பெரிய சாதனை படம் என்று சொல்லலாம் அந்த அளவுக்கு மிக சிறப்பாக நடித்துள்ளார் நம்மை ரசிக்கவைத்துள்ளார் என்று தான் சொல்லணும். இதே போல இயக்குனர் நடிகராக இருந்தால் விரைவில் தமிழ் சினிமாவில் மிக பெரிய இடத்தை பிடிப்பர்.
ரகுல் ப்ரீத் சிங் நிச்சயமாக இவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு நிரந்தர இடம் கிடைக்கும் என்று தான் சொல்லணும் தன் கதாபாத்திரத்தை மிகவும் புரிந்து நடித்துள்ளார் அதே போல படத்துக்கு மிக பெரிய பலம் போஸ் வெங்கட் தன் திறமையான நடிப்பு மூலம் படத்துக்கு மிக மிக பெரிய பலமாக இருந்து இருக்கிறார். சத்யன் மனோபாலா எல்லோரும் தன் கதாபாத்திரத்தை மிகவும் தெளிவாக உணர்ந்து நடித்துள்ளார் என்று தான் சொல்லணும்
இயக்குனர் வினோத் தமிழ் சினிமாவின் மிக பெரிய சொத்து என்று சொல்லணும் தன் இரண்டு படங்களும் வித்தியாசமான கதை மற்றும் திரைக்கதை மூலம் மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளார்.தங்கப்பதக்கம் வால்டர் வெற்றிவேல் போன்ற படங்களுக்கு பிறகு மிக சிறந்த போலீஸ் கதை என்று சொல்லணும், அந்த அளவுக்கு தெளிவான வலுவான திரைக்கதை அமைத்துள்ளார் மொத்த போலீஸ்க்கு மாற்றியதை செலுத்தும் வகையில் இந்த படம் அமைந்துள்ளது.
படத்தின் மிக முக்க்கிய பங்கு என்றால் ஒளிப்பதிவு காரணம் இயக்குனர் எண்ணத்தையும் கதை ஓட்டத்தையும் புரிந்து என்ன தேவையோ அதை மிக சிறப்பாக ஒளிப்பதிவு செய்துள்ளார் சத்யன் சூர்யன் அதே போல கலை இயக்குனர் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் எண்ணத்தை புரிந்து செட் அமைத்துள்ளார். எப்போதும் போல ஜிப்ரான் இசையில் பாடல்கள் படத்துக்கு பலம் சேர்த்து இருந்தாலும் முதல் பாதியில் பாடல்களை தவிர்த்து இருந்தால் படம் இன்னும் வேகமாக இருந்து இருக்கும்
தொடர்ந்து சிறந்த படங்களை தயாரிக்கும் ட்ரீம் வாரியார் நிறுவனத்தின் மிக சிறந்த படைப்பு நிச்சயம் கல்லா கட்டும்
மொத்தத்தில் தீரன் அதிகாரம் ஒன்று தமிழ் சினிமாவின் கல்வெட்டு Rank 4.5/5
